வல்லபூதம் வாலாஷ்டிக பேய்கள் | அல்லற் படுத்தும் அடங்கா முனியும் | பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் | கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் | பெண்களைத் தொடரும் ப்ரும்மராட்சதரும் | அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட || எங்கள் வீட்டு உதவியாளி சமீபத்தில் தன் பேத்திக்கு உடல் நலமில்லை என்று விடுப்பு கேட்டாள். விசாரிக்கையில் இரவு மாடி அறையில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைக்கு திடீரென்று எக்கச்சக்கத்திற்குக் காய்ச்சலாம். அருகில் படுத்திருந்த இவள் தரையெல்லாம் என்றுமில்லாத அளவிற்கு சில்லிட்டுப்போய்விட்டதாய் ... Read More »
Category Archives: அமானுஷ்யம்
பயிர் வட்டம் (Crop Circle) – 3
January 2, 2015
நம் ஊர்களிலுள்ள சில பிரபலமான கோவில்களில் மட்டும் மக்கள் கூட்டம் குவிந்தபடி இருக்க, பல கோவில்கள் ஆள் அரவமற்று அமைதியுடன் இருக்கின்றன. ஆனால் ஏதோ ஒரு தருணத்தில், எங்கோ ஒரு கோவிலில் திடீரென, ‘சாமி சிலை கண்களைத் திறந்தது’ என்றோ, ‘கண்ணீர் வடித்தது’ என்றோ தகவல் வரும். அப்புறம் யாரும் கிட்ட நெருங்க முடியாதபடி அந்தக் கோவிலில் கூட்டம் அலையடிக்கும். படிப்படியாக அந்தக் கோவிலுள்ள கிராமத்தை நோக்கிப் பத்து, நூறு, பத்தாயிரம், இலட்சம் என மக்களும், வியாபாரிகளும், ... Read More »
இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 16
January 2, 2015
இந்து சமயத்தின் மடியில் வளர்ந்த பௌத்த சமயமும் சமண மதமும் இந்து வேதங்களில் கூறப்பட்ட சில விடயங்களுக்கு முரண்பாடான கருத்துக்களை கொண்டவையாயினும், மறுபிறப்பையும் கர்மாவையும் தமது ஆதார தத்துவங்களாக ஏற்றுக் கொண்டவை. கிறிஸ்துவுக்கு முன் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து நதிப்பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்களின் வழிபாட்டு முறைகளை ஆராயுமிடத்து, அவர்கள் மறுபிறப்பில் நம்பிக்கையுடையவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று அறியக் கிடைக்கின்றது. கிறிஸ்துவுக்கு முன் 6 ம் நூற்றாண்டில் கிரேக்க தேசத்தில் பரவியிருந்த ஆர்பியஸ் வழிபாட்டு மரபில் (Orphic Cult) ... Read More »
பயிர் வட்டம் (Crop Circle) – 2
January 1, 2015
செழித்து வளர்ந்த ஒரு வயல்வெளியைக் கற்பனை செய்து பாருங்கள். அதன் நடுவே நீங்கள் நிற்கும்போது, எங்கும் பசுமையாகப் பரவியிருக்கும் பயிர்களையே காண்பீர்கள். இடுப்பளவு பயிர் வளர்ந்திருக்கையில் சில மீட்டர் தூரத்திற்கு அப்பால், தரையில் இருக்கும் எதுவுமே உங்கள் கண்ணுக்குப் படமுடியாதவாறு எங்கும் வளர்ந்திருக்கும் பயிர். அந்த வயலில், ஒரு உதைபந்தாட்ட மைதானம் அளவுக்கு மிகப்பெரிய வட்ட வடிவச் சித்திரம் வரையப்பட்டிருப்பதாக நினைத்துப் பாருங்கள். உங்கள் கண்ணுக்கு அந்தச் சித்திரத்தின் முழுமை தெரிய வாய்ப்பே இல்லை என்பது புரியும். ... Read More »
இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 15
January 1, 2015
ஆத்மா சுவர்க்கத்தில் தனது காரண சரீரமாகிய ஊடகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் பொழுது அதற்குப் பூவுலகத்துக்குத் திரும்பவேண்டுமென்ற “தாகம்” ஏற்படுகிறது. இந்நிலை சமஸ்கிருதத்தில் “திருஷ்னா” என்றும், பாளியில் “தன்ஹா” என்றும் குறிப்பிடப்படுகிறது. மனிதன் பூரணத்துவ நிலையை எய்தும் வரை, தனது ஆசைகளை அழித்து கர்மாவில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் வரை பிறந்து இறந்து கொண்டேயிருப்பான். ஒவ்வொரு பிறப்பும் முடிவடைந்தவுடன் நமது கர்மவினைகள் ஒரு செயலற்ற நிலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. அவை நாம் பிறப்பெடுக்கும் வேளையில் நம்மை வந்தடைகின்றன. நமது கர்மவினைக்கேற்ப ... Read More »
பயிர் வட்டம் (Crop Circle) – 1
December 31, 2014
‘மிஸ்டரி’ என்பது இரண்டு பக்கங்களைக் கொண்ட ஒரு நாணயம் போன்றது. அதன் ஒரு பக்கம், அறிவியலால் விளக்க முடியாத மர்ம முடிச்சுகளைக் கொண்டது. அடுத்த பக்கம், ‘சே! இதெல்லாம் ஏமாற்று வேலை. இப்படி எதுவும் இல்லை’ என்ற மறுதலிப்பைக் கொண்டது. எப்போதும் இந்த இரு பக்கங்களும் இல்லாமல், சரி சமமாக நிற்கும் நிலைக்குத்து நிலையில் இந்த நாணயம் நிற்பதே இல்லை. கடவுளை நம்புபவர்கள் எப்படி அதில் நம்பிக்கையுடன் இருப்பார்களோ, அப்படி ஒரு பக்கத்தினரும், கடவுளை மறுப்பவர்கள் எப்படி ... Read More »
உ ண்மை சம்பவம்.!!??
December 31, 2014
Ohioவில் பிறந்த இரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப்புகள் 1980 ஜனவரி மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் வெளி வந்துள்ளன. இருவரும் பிறந்தவுடனேயே பிரிக்கப்பட்டு இருவேறு தொலை தூரக் குடும்பங்களுக்குத் தத்துத் தரப்பட்டனர். இருகுடும்பங்களும் ஒன்றிற்கு ஒன்று தெரியாமலேயே குழந்தைகளுக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டனர். இருவரும் சட்ட அமலாக்கப் பிரிவில் வேலைக்கு அமர்த்தப்பட்ட னர். இருவருக்குமே பல திறமைகள் ஒன்றாகவே இருந்தன. இருவரும் லிண்டா என்ற பெயருடைய பெண்களையே முதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருமே தங்கள் மகன்களுக்கு ஜேம்ஸ் ... Read More »
இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 14
December 31, 2014
காரண சரீரம் என்பது அந்தராத்மாவின் கொள்கலம். மனிதனின் தன்முனைப்பு (Ego) அல்லது அஹங்காரம் இச்சரீரத்திற்குரியது. பரிணாம வளர்ச்சியின் மூலம் மனிதனின் தனித்தன்மை உருவாகும்பொழுது மிருக உடலில் இருந்த பிரக்ஞை தனக்கென்று ஒரு காரண சரீரத்தைப் பெற்று மனிதனாகி விடுகிறது. இந்நிலையில் பரமாத்மாவின் சுடர்பொறியே காரணசரீரத்தில் புகுந்து ஜீவாத்மன் ஆகின்றது. “காரண சரீரங்களின் மொத்தமே ஈஸ்வரன். ஜீவனின் காரண சரீரம் ஈஸ்வரனின் சரீரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது” – மாண்டுக்கியோபநிஷதம். கடந்த பிறப்புகளின் அனுபவங்கள் எல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டு இச்சரீரத்தில் தேங்கி ... Read More »
உண்மை சம்பவம்.!!??
December 30, 2014
ஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்து க்கொண்டான். அக்காதலி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோதரர் கடும் கோப மடைந்து சீக்லேண்டைத் தேடிக் கண்டு பிடித்து சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அதிர்ஷ்ட வசமாக சீக்லேண்ட் சாகவில்லை. அந்தத் துப்பாக்கிக் குண்டு முகத்தை உராய்சிக் கொண்டு சென்று அங்கிருந்த மரத்தில் சென்று பதிந்தது. சில வருடங்கள் கழித்து அந்தப் பெரிய மரத்தை ... Read More »
இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 13
December 30, 2014
மனிதனுடைய கீழ் மனசு காமலோகத்தில் சுத்தப்படுத்தப்படும் என்பதை முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அதன் பின்னர் அவனிடம் சட உலகில் இருந்த உயர்ந்த எண்ணங்களும், தன்னலமற்ற மனப்பாங்குமே சுவர்க்கத்துக்கு அவன் செல்லும்போது கூடவருகின்றன. சமய ஈடுபாடு கூடிய ஒருவருக்கு அவருக்கேற்ற சுவர்க்கம் கிட்டுகிறது. கடவுள் வணக்கத்தில் இன்பம் கண்டவருக்கு சடஉலகில் பல்வேறு தடைகள் கிலேசங்கள் சௌகரியங்கள் அவருடைய தெய்வவழிபாட்டுக்கு இடைஞ்சல்களாக இருந்திருக்கும். சுவர்க்கத்தில் எல்லாவித இடர்பாடுகளும் நீங்கப்பெற்று தெய்வ வழிபாட்டுக்கு அனுகூலமான சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. அதுவே அவருக்கு ... Read More »