Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் (page 34)

Category Archives: அமானுஷ்யம்

உலகின் தீரா மர்மங்கள் – 1

பயிர் வட்டங்கள் 2012 வரை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த பயிர் வட்டங்கள் ஒரு சுவாரசியமான மர்மங்கள். விளைந்திருக்கும் பயிரில் ஒரே இரவில் ஏதோவொரு அமானுஷ்ய சக்தி இதுபோன்ற உருவங்களை உருவாக்கிச் செல்வதாய் கதைகள் நீள்கின்றன. இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இந்த பயிர் வட்டங்கள் தோன்றியிருக்கும் போதும் கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் அதிகம் பதியப்பட்டிருப்பது இங்கிலாந்தில்தான். பெரும்பாலான உருவங்கள் ஒரே இரவில் மனிதர்கள் உருவாக்க சாத்தியமேயில்லாத முறையில் உருவாக்கப்பட்டிருப்பது இதன் மர்மத்தை மேலும் கூட்டுகிறது. இரவுப்பொழுதில் ... Read More »

இந்தியாவின் தீராத மர்மங்கள் – 2

இந்தியாவின் தீராத மர்மங்களில் இரண்டாவது இடத்தை லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்தான் பிடித்திருக்கிறது. லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் இரண்டாவது பிரதமர் என்பதைத்தவிர பெரும்பாலான விஷயங்கள் பலருக்குத் தெரியாது. அக்டோபர்-2, 1904ல் பிறந்த லால் பகதூர் சாஸ்திரி இந்திய சுதந்திரப் போராட்டக் காலங்களில் இண்டியன் நேஷனல் காங்கிரசின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் ஒருவராய்த் திகழ்ந்தவர். சுதந்திர இந்தியாவின் நேருவின் அமைச்சரவையில் தொடர்ந்து பதவி வகித்த போதும், பெரிதாய் பரபரப்பாய் வெளியில் தெரியாத அமைதியான அரசியல்வாதியாகவே இருந்தவர். மே-27, 1964ல் ... Read More »

சிம்பிள் ஆவி!!!

டாக்டர் கென்னத் வாக்கர் உலக புகழ் பெற்ற மருத்துவ மேதை. நியூரோ சர்ஜன். இன்றைய பிரபல சர்ஜன்களுக்கெல்லாம் பீஷ்மர் போன்றவர். சாமான்யர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அவர் எழுதி விட்டுப்போன ‘The Story of Medicine’ போன்ற மருத்துவ மற்றும் மனோதத்துவ புத்தகங்கள் நிறைய உண்டு. குறிப்பாக, ஆவிகளை புரிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார் அந்த டாக்டர். The Unconscious mind என்ற அவருடைய புத்தகத்தில் Appartions என்கிற அத்தியாயத்தில் விவரிக்கப்படும் ஆவி அது! வாக்கரின் மிக ... Read More »

அம்மா, உன் மடியில்!!!

தபாலில் வந்த அந்தக் கடிதத்தை, பிரித்துப் படித்தபோது சம்பந்தமில்லாத ஒருவிதமான பயம், அந்தத் தாயின் மனதில் நிழலாகப் படிந்தது. ஆனால் மகன் கப்பல்படை பயிற்சி நிலையத்திலிருந்து மகிழ்ச்சியுடன் ‘நலம் விசாரித்துத்தான்’ கடிதம் எழுதியிருந்தான். அதில் அவன் பேசுவதைப் போல வரிக்கு வரி வழக்கமான நகைச்சுவை இருக்கவே செய்தது. கூடிய விரைவில், விடுமுறை கிடைத்தவுடன் ஊருக்கு ஓடிவந்து, தாயின் மடியில் படுத்து உறங்க வேண்டுமென்று இருபத்தைந்து வயதான அந்த ஆபிசர், குழந்தையைப் போல தன் அம்மாவுக்கு ஆசை ஆசையாக ... Read More »

கதவு தட்டப்பட்டது!!!

கதவு தட்டப்பட்டது!!!

லில்லி ஆன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். ‘டொக்… டொக்…’ கதவு தட்டும் சத்தம் கேட்டு கண் விழித்தாள். பெட்ரூம் லைட்டைப் போட்டாள். இரவு மணி 11.55. இரவு பணிக்குப் போன தன் கணவன் நிக்சன், ஏதாவது காரணமாக வீடு திரும்பி விட்டானா என்ற சிந்தனையுடன் நைட் கவுனைச் சரி செய்துகொண்டு பெட்ரூமை விட்டு ஹாலுக்கு வந்தாள். ‘நிக்சன்’ – என்று குரல் கொடுத்தாள். பதில் இல்லை. இரண்டு வினாடி நிசப்தம். பிறகு மீண்டும், ‘டொக்… டொக்…’ ‘யாரது?’ ... Read More »

அந்தரத்தில் பறந்த பூக்கிண்ணம்!!!

அந்தரத்தில் பறந்த பூக்கிண்ணம்!!!

கோவை மாவட்டம், மேற்கு மலைத் தொடர்ச்சியின் அடிவாரத்தில் அமைந்திருந்த ரெட்டிபட்டி கிராமத்தில் அந்தச் சாமியார் குறித்த பேச்சு கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ ஆரம்பித்தது. சாமியார் யாரிடமும் எதையும் யாசிக்கவில்லை. உண்பதற்குப் பழங்கள் போன்று ஏதாவது கொடுத்தாலும் வாங்க மறுத்து விட்டார். யாரிடமும் ஒரு வார்த்தைக்கூடப் பேசவில்லை. எந்நேரமும் ஊர்க்கோடியில் உள்ள கோவிலின் மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தபடி இருந்தார். சில பேர் அவரை வணங்கினார்கள். அந்தச் சாமியார் தோள்பட்டையில் மாட்டியிருந்த நீளமான பையிலிருந்து விபூதி எடுத்துக் கொடுத்தார். காணிக்கைகளை ... Read More »

ஆவிகளின் கோட்டை!!!

ஆவிகளின் கோட்டை!!!

லண்டனில் ‘லண்டன் டவர்’ வளாகத்தில் அமைந்துள்ள பழங்காலக் கோட்டை எட்டாம் ஹென்றியின் ஆதிக்கத்தில் இருந்ததாக சரித்திரச் சான்றுகள் ஆதாரபூர்வமாக கூறுகின்றன. இந்தக் கோட்டைக்கு வருடந்தோறும் ஏராளமான டூரிஸ்டுகள், ஆராய்ச்சியாளர்கள் உலகெங்கிலுமிருந்து வருகிறார்கள். இந்த பழங்காலக் கோட்டையில் ஆவிகள் கூட்டம் கூட்டமாக வாழ்வதாக கடந்த 700 ஆண்டுகளாக பல நம்பத்தகுந்த செய்திகள் கிடைத்துள்ளன. அரண்மனை போன்ற இந்தக் கோட்டைக்குள் ஏராளமான பெரிய பெரிய அறைகள் உள்ளன. நீதிமன்றம், தண்டனை வழங்கும் கொலைக் களம், அந்தப்புரம், தர்பார் மண்டபம் என்று பல ... Read More »

காதருகே பெரும்மூச்சு!!!

காதருகே பெரும்மூச்சு!!!

பிரிட்டனில், லங்காஸ்டர் ஊரில் உள்ள ஜெயிலில் பல ஆண்டுகளுக்கு முன் தலைமை அதிகாரியாக இருந்த நீல் மௌன்சேய் விவரிக்கும் பேய் வேறு மாதிரியானது. கற்பனை சக்தி கொண்ட சற்று கலாட்டாவான ஆவி அது. மௌன்சேய் விவரிக்கிறார்: ‘முரட்டுத்தனமான குற்றவாளிகள் கூட விடுதலை ஆகும் நாளில் புன்சிரிப்போடு, மகிழ்ச்சியாக இருப்பார்கள். நிறைய கொள்ளைகளில், அடிதடிகளில் ஈடுபட்ட அதிரடியான கைதி மேக்ராய். அவனுக்கு அன்று விடுதலை. நானே நேரில் சென்று அவன் இருந்த அறைக் கதவைத் திறந்தேன். ஆனால், மேக்ராய் ... Read More »

ட்ராகுலா!!!

ட்ராகுலா!!!

 பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து சுமார் நானூறு ஆண்டுகள்… அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா வரை, ஏழையிலிருந்து பணக்காரன் வரை… யாராக இருந்தாலும் சரி – இரவு வந்தாலே பலருக்கு இதயத்துடிப்பு அதிகமாகும். ஈரக்குலை சில்லிட… காதுகள் அடைத்துக்கொள்ளும், பயத்தில் உடம்பிலே ஒரு உஷ்ணம் பரவும். நாக்குகள் வறண்டு போகும். காரணம் – வேம்பயர்! அதாவது, டிராகுலா. டிராகுலா என்பது உயிருள்ள பிணம். இந்தப் பிணம் ரத்தவெறி பிடித்தது! இரவானால் தன் உடம்புத் தோலை உரித்து வைத்து விட்டு வௌவால் மாதிரி பறந்து ... Read More »

ஆந்தையாக மாறிய தேவதை!!!

ஆலன் கார்னர் (Alan Garner) – என்ற இங்கிலாந்தின் பிரபல எழுத்தாளர் ஒரு கதை எழுதினார். வானுலகத்திலிருக்கும் ஒரு தேவதை பூமியைப் பார்க்க ஆசைப்படுகிறாள். அவளை ஒரு நிபந்தனையோடு பூமிக்கு அனுப்புகிறார்கள். ‘உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் பார்த்து ரசிக்கலாம். ஆனால் எந்த இளைஞனையாவது பார்த்து காதல் வயப்படக்கூடாது. அப்படி காதல் வயப்பட்டு அவனை திருமணம் செய்து, ஒரு நாள் வாழ்ந்தாலும், அடுத்த நாளே பொன்னிறமானஇறக்கையுள்ள தேவதையான நீ அழகில்லாத ஆந்தையாக மாறிவிடுவாய்’. இப்படி எச்சரிக்கை செய்யப்பட்ட தேவதை, பூமிக்கு ... Read More »

Scroll To Top