Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் (page 16)

Category Archives: அமானுஷ்யம்

மிரட்ட வரும் பேய் – 6

அமைதியும்,மரியாதையும் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதிலும் நல்லுள்ளம் கொண்ட அந்த இளைஞன் கொஞ்சம் பயந்த சுபாவமுடையவன். ஊருக்கு ஒதுங்குப் புறமாக சற்றே வனப் பகுதியை தொடும் தூரத்தில் தனியாக அமைந்திருக்கும் ஒரு தொழிற்ச்சாலையில் ஹெல்ப்பராக வேலை செய்து வருகிறான். ப்ளஸ் டூ வரை படித்துவிட்டு மேற்ப்படிப்பு படிக்க வசதியில்லாமல் தான் இந்த தொழிற்ச்சாலையில் வேலைக்குச் சேர்ந்தான். அன்று தொழிற்ச்சாலையில் வேலை அதிகமாக இருந்ததால்…..தம்பிங்களா நாளக்கி டெலிவரி கொடுக்க வேண்டியது இருக்கு அதுனாலே இன்னக்கி எல்லாரும் ஓவர் டைம் பண்ணிட்டு ... Read More »

மிரட்ட வரும் பேய் – 5

அது ஒரு நேசனல் ஹைவே ரோடு மாநிலம் விட்டு மாநிலம் போகும் பலகனரக வாகனங்களும்,பேரூந்துகளும் சற்று இடைப்பட்ட நேரமாக சீறிப் பாய்ந்தபடி மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தன. அன்றைய தினம் வானத்து நட்சதத்திரகங்கள் படை சூழ உச்சியிலிருந்த நிலா வெளிச்சம் சற்று அதிகப் பிரகாசத்துடன் காணப்பட்டன.அந்த நிலா வெளிச்சத்தில் சாலையின் இருபக்கமும் மலைகளும் சிறிய சிறிய அளவிலான காடுகளும் வாகனம் போகும் வேகத்தில் எதிர்திசையைநோக்கி ஓடுவது போலத் தெரிந்தன. மரக்கிளைகளின் நிழகள் அவ்வப்போது வண்டிமுன் பகுதியில் வந்து ... Read More »

மிரட்ட வரும் பேய் – 4

அது ஒரு அழகிய தென்னந்தோப்பின் நடுவில் அமைதியை மொத்தமாக விலை கொடுத்து வாங்கியது போல அமைந்திருக்கும் குக்கிராமம். அந்த கிராமத்திலேயே கொஞ்சம் வசதி படைத்த குடும்பம் அது. அவள் புருஷன் வெளிநாட்டில் வேலை செய்கிறான்.வெளிநாட்டில் சம்பாரித்த பணத்தில் ஊர் எல்லையில் மனை விற்ற புரோக்கரிடம் நிலம் வாங்கி புதிதாக வீடு கட்டி குடிபுகுந்திருக்கிறார்கள். அந்தப்பகுதிக்கு புதிதாக குடிவந்த இரண்டு மூன்று வீடு மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது. இரண்டு பிள்ளைகளுடன் அந்த புதிய வீட்டில் அவள் தனியாக ... Read More »

மிரட்ட வரும் பேய் – 3

நமதூர் பகுதிகளில் பெரும்பாலான இளைஞர்கள்களின் தகப்பனார், அண்ணன்மார்கள், தம்பிமார்கள் மாமன் மச்சானென்று துபாய், சவூதி, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன் போன்ற வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்று கஷ்டப்பட்டு சம்பாரித்து பணம் அனுப்பி வைக்கிறார்கள். பணத்தின் அருமை தெரியாத ஒரு சில இளைஞர்கள் சுய உழைப்பில்லாமல் ஊரைச் சுற்றிக்கொண்டு ஜாலியாக வீண்செலவு செய்துகொண்டு பொறுப்பில்லாமல் ஊதாரித்தனமாகத் திரிகிறார்கள். இதனால் தீய நண்பர்களுடன் சேர்ந்து தீய பழக்கவழக்கங்கள் ஏற்ப்பட்டு இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போய் விடுகிறது. இதில் ஒரு ... Read More »

மிரட்ட வரும் பேய் – 2

அது ஒரு மாலை நேரம்… பள்ளியில் படிக்கும் நண்பர்கள் இருவர்கள் சேர்ந்து கால்நடையாக பொழுது போக்கிற்காக அந்த கடற்கரைச் சாலையை நோக்கி நடந்து செல்கிறார்கள். இருவரும் வகுப்பில் நடந்த பல சுவராஸ்யமான நிகழ்வுகளையும், படிப்பைப் பற்றியும் பள்ளியில் அடித்த அரட்டையைப் பற்றியும் பேசிக் கொண்டு போனதில் நேரம் போனதே தெரியாமல் கடல்க் கரையின் ஓரத்தை வந்தடைந்து விட்டார்கள். மாலைக் கதிரவன் மறைந்து இருட்டத் தொடங்கிய நேரம் அது. ஆள் ஆரவாரமற்ற அந்த இடத்தில் இந்த இருவர் மட்டுமே ... Read More »

மிரட்ட வரும் பேய் – 1

இது மூடநம்பிக்கைக்கு மூட்டைகட்டும் கற்பனைப் திகில் தொடர்! மனிதமனம் உருவாக்கும் பேய் தான் மனிதர்களை ஆட்டிப் படைக்கிறது. இந்தக் கற்பனையான பேயை விரட்டுவதாகச் சொல்லி பிழைப்பு நடத்து கின்றவர்கள். சமூகத்தில் இவற்றை போலியான பிரம்மையை ஏற்படுத்தி பிறரை பயமுறுத்தி வருகின்றனர். இவர்களுக்கு சரியான சாட்டையடி கொடுக்கும் நோக்கில் மக்களிடயே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நன்நோக்கில் இந்த தொடர் வெளிவர உள்ளது. தொடராக வெளிவர உள்ள இவற்றை தைரியமாக நீங்கள் வாசிக்கலாம். நடுநிசி இரவு 12.30 மணி சிறுநீர் கழிக்க ... Read More »

சாபம் -17 இறுதி அத்தியாயம்.

சாபம் -17 இறுதி அத்தியாயம்.

அந்த பாம்பை கண்டதும் இவர் முகத்தில் பெரும் மகிழ்ச்சி அதன் அருகில் சென்றார் அதற்க்கு பால் வைத்தார் “சபாஷ் டா!! சொன்ன வேலைய சரியா முடிச்சிட்ட”- அதற்க்கு பாராட்டு வழங்கினார் அந்த பாம்பும் அதை உணர்ந்த வண்ணமாய் தன படத்தை தரை மீது கொத்தி தன மகிழ்ச்சியை வெளிபடுத்தியது நள்ளிரவு இருவரும் விழித்திருந்தனர்,,,,,,,, ஆனால் அசோக்கிற்கு அது மிக கடினமாக இருந்தது பயண களைப்போ இல்லை விஷத்தின் வீரியமோ அவனை கண்களை மூட சொல்லி வற்புறுத்தியது அவன் ... Read More »

சாபம் -16

சாபம் -16

மனோகர், அசோக் இருவரும் அந்த இரவு அந்த முதியவர் வீட்டிலேயே தங்கினார்கள் அந்த முதியவர் சொன்னதற்கு இணங்க அன்றிரவு இருவரும் தூங்காம இருக்க முடிவு செய்தனர் அவ்விருவருக்கும் அந்த முதியவர் “கிராமத்து உணவாகிய” கம்பு சோறு மற்றும் காய்கறிகளை கொடுத்தார் அசோக்கிற்கு இந்த உணவுகள் புதியதாக இருந்தது முதலில் அதை உண்பதில் அவனுக்கு விருப்பம் இல்லை இருந்தாலும் வேறு வழி இல்லை என்பதால் அதை உண்டான் “ஆஹா !!!! superb அங்கிள்,,,, இந்த சாப்பாடு எப்பி இருக்குமோன்னு ... Read More »

சாபம் -15

சாபம் -15

மனோகர் விழுந்த இடத்தில் படமெடுத்தபடி ஒரு கருநாகம் இருந்தது அதை அசோக் பார்த்துவிட்டான் அது மனோகரை கொத்த வந்த சமையம்,,, பாய்ந்து அவரை விலக்கினான்,,,, இதனால் அவனுக்கு அந்த கொத்து விழுந்தது,,, வலியில் அலறினான் அசோக் மனோகருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை பின்னால் திரும்பி பார்த்தார்,,,,,, அந்த புயல் மறந்து போயிற்று அங்கே புழுதி புயல் வந்ததற்கான எந்த அடையாளமும் அங்கு இல்லை “என்னய்யா யாரு நீங்க?” – குரல் கேட்டு திரும்பினார் மனோகர் அங்கே ஒரு ... Read More »

சாபம் -14

சாபம் -14

மனோகரனும், அசோக்கும் அந்த “ஸ்வர்ண காட்”டிற்கு செல்ல ஆயத்தமானார்கள் மனோகர் தன் அடுத்த கதைக்காக செல்வதாக காவல் துறையிடமும் வன துறையிடமும் அனுமதி வாங்கி கொண்டார் . அசோக் தன் வேலைக்கு ஒரு மாத காலம் விடுப்பு தெரிவித்து விட்டு கிளம்பி வந்து கொண்டிருந்தான் அந்த கிராமம் சேலம் உடையான் பாளையம் அருகில் நெடுஞ்சாலை பிரிவில் இருந்தது “சார், இது மேல பஸ் போகாது,,, அந்த ஊருக்கு நடந்து தான் போகணும்”- தன் கடமைக்கு சொல்லி சென்றார் ... Read More »

Scroll To Top