‘குணா, ஏன் கோவமா பேசுறீங்க..?’ என்று மறுமுனையில் குணாவை தாஸ் சமாதானப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தான். ‘பின்ன என்ன உங்கிட்ட கொஞ்சுவாங்களா..?’ என்று குணா கோபம் குறையாமல் பேசினான். ‘ப்ளீஸ் குணா, காம் டவுன்…’ ‘யோவ், நீ அந்த கோவில்ல விட்டுட்டு போனதும், ஒரு மணி நேரம், கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரி ஆயிடுச்சி…! எப்படி தனியா துடிச்சேன் தெரியுமா..?’ ‘அங்கே என்ன நடந்து… நீங்க எப்படி தப்பிச்சு வந்தீங்க… அதை சொல்லுங்க..’ என்று பேசியபடி, ... Read More »
Category Archives: அமானுஷ்யம்
கேணிவனம் – 5
March 18, 2015
தாஸ் இன்னமும் ரயிலுக்கு உள்ளே செல்லாமல், கதவருகிலேயே நின்றிருந்தான். அந்த காலை வேளையில், மிதமான ரயிலோசை அவனை பொறுத்தவரை, ஒரு தியானம் போல் இருந்தது. நடந்ததை சொன்னால், யார் நம்புவார்கள்… எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தனக்குள் எழும்பிய எண்ணங்களை அடக்கி, தன் மனதை ரயிலோசையில் லயிக்க விட்டான். எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தான் என்று அறியாத வண்ணம் நேரம் கடந்துக் கொண்டிருதது… இதுவும் ஒரு வகையில் டைம் ட்ராவல்தான்… நான் காலத்தை கடந்தவன்… ஒரு சின்ன ... Read More »
கேணிவனம் – 4
March 18, 2015
கிணற்றுக்குள் இருந்த அந்த பாடலையே பார்த்துக் கொண்டிருந்த தாஸ், சற்று நேரத்தில் இயல்புக்கு திரும்பியவனாய், தனது மொபைல் ஃபோன் வெளிச்சத்தில் அந்த பாடலை ஃபோட்டோ எடுத்துக் கொண்டான். மொபைலில் பேட்டரி இன்னும் இரண்டு புள்ளிகளே இருந்ததால், கருவறைக்கு வெளியே வந்து மொபைல் லைட்டை ஆஃப் செய்தான். குணா, தனது புலம்பலை நிறுத்திவிட்டு, நெருப்புக்கு அருகில் அமர்ந்திருந்தான். மூட்டிய தீ எப்போதும் அணைந்துவிடும் என்ற நிலையில் அரைகுறையாக எரிந்துக் கொண்டிருந்ததை அவன் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். ‘என்ன தாஸ், ... Read More »
கேணிவனம் – 3
March 18, 2015
விட்டத்தில் தாஸ் கண்ட ஓவியம்… அவனது தூக்கத்தை கலைத்து எழுந்து உட்கார வைத்தது. அந்த ஓவியத்தில் நடுவே ஒரு பெரிய கருப்பு வட்டமும், அந்த வட்டத்திற்கு வெளியே பல மனிதர்கள், பாதி உடம்பு வட்டத்துக்குள்ளும், மீதி உடம்பு வெளியில் இருக்கும்படியும் விழுந்து வணங்குவது போல் வரையப்பட்டிருந்தது. அந்த வட்டத்திற்கு அலங்காரங்கள் அமர்க்களமாக செய்யப்பட்டிருந்தது. மேற்கொண்டு தாஸ், அந்த ஓவியத்தை பார்க்க முனைந்தபோது, வெளிச்சம் போதாததினால்…. தாஸ் எழுந்து நின்றான். உற்றுப் பார்த்தான். தரையில் மூட்டியிருக்கும் தீயின் வெளிச்சம் ... Read More »
கேணிவனம் – 2
March 18, 2015
இரயிலை தொலைத்த அந்த தண்டவாளத்தில் தாஸூம், குணாவும் முழித்துக் கொண்டு நின்றிருக்க… ‘சே..! என்ன ஒரு முட்டாள்தனம்..’ குணா புலம்பினான்… ‘ச்சே’ என்று தாஸூம் புலம்பியபடி நின்றிருந்து… ஒரு சமயத்துக்குமேல் இருவருக்கும் அலுத்துவிடவே… வேறுவழியில்லாமல் அந்த தண்டவாளத்தில் ரயில் சென்ற திக்கில் இலக்கில்லாமல் நடக்க ஆரம்பித்தனர். நீண்ட தூரம் நடந்துப் பார்த்தும் அதே காடுகள் சூழுந்த தண்டவாளம்தான் இருபக்கமும் தெரிகிறது. ‘இதுக்கு மேல நடந்து பயனில்லை குணா, பேசாம இந்த காட்டுவழியா கொஞ்ச தூரம் உள்ளே நடந்து ... Read More »
கேணிவனம் – 1
March 18, 2015
முன்னாள் இரவு சென்ட்ரலில் இருந்து கிளம்பிய அந்த மும்பை மெயில், மேற்கு கர்நாடகாவின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் பயணித்து கொண்டிருந்தது. மணி முற்பகல் 11 என்றால் யாரும் நம்பமாட்டார்கள். அவ்வளவு மேகமூட்டத்துடன் அந்த காடு மாலைவேளை போல் காட்சியளித்துக் கொண்டிருந்தது. இரயில் தண்டவாளம் என்ற பெயரில் சீராக அமைந்திருக்கும் அந்த இரண்டு இரும்பு கோடுகளை இரசித்தபடி தனது ஜன்னலோர இருக்கையில் குணா அமர்ந்திருந்தான். அப்பர் பர்த்தில் 11 மணிவரை தூங்கியும்கூட அவன் கண்களில் தூக்கம் இன்னும் மீதமிருந்தது. அவன் ... Read More »
ரத்த காட்டேரி – 30 இறுதி அத்தியாயம்.
March 17, 2015
அந்தப் பாதை செங்குத்தாக சரிவாகக் கீழ்நோக்கி இறங்கியதாலும், கம்பளிப் போர்வை மற்றும் தேவையான பொருட்களை சுமந்து செல்லவேண்டியிருந்ததாலும், நிதான மாகவே நடந்து சென்று கொண்டிருந்தனர். பின்புறம் திரும்பிப் பார்த்தபோது டிராகுலா கோட்டை தூரத்தில் தெரிந்தது. விசில் சத்தமும் சூறைக்காற்றும் பனிப் பொழிவுமாக இருந்தது. அவர்கள் நடக்க ரொம்பவும் சிரமப்பட் டனர். இதுபோக தூரத்தில் ஓநாய் கூட்டத்தின் ஊளைச் சத்தம் வேறு. ஓய்வெடுப்பதற்காக ஓரிடத்தைக் கண்டுபிடித்தனர். பாறைகளுக்கு இடுக்கில் குகைவாசல் போன்ற இடுங்கிய ஒரு பகுதியைப் பார்த்துவிட்டு, “மினா, ... Read More »
ரத்த காட்டேரி – 29
March 17, 2015
ஜோனாதன் தன்னுடைய டைரியில் குறிப்பிட்டிருந்ததைப் போல அந்தப் பாதையில் அவர்கள் மணிக்கணக்கில் பயணம் செய்தனர். டிராகுலா பிரபுவின் கோட்டையை நெருங்க நெருங்க மினாவின் உடல்நிலையில் ஏதோ மாற்றம் ஏற்படுவதைப் பார்த்தார் ஹென்சிங். அப்போது மினாவை மயக்கத்தில் ஆழ்த்த முயன்று தோற்றுப் போனார் ஹென்சிங். மனித நடமாட்டமே இல்லாத மலைகள் நிறைந்த பாலைவனப்பகுதியில் அவர்களின் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. மினா நன்றாக உறங்கலானாள். மினா என்ன காரணத்தினாலோ சாப்பாடு வேண்டாம் என்று கூறிவிட்டாள். அந்த பயங்கரமான குதிரையின் அமானுஷ்ய ... Read More »
ரத்த காட்டேரி – 28
March 17, 2015
இந்த பரபரப்பான லண்டன் மாநகரம் தனக்கு சரிப்படாது என்று முடிவுக்கு வந்துவிட்டது டிராகுலா பிரபு. அதனால்தான் மண் நிரப்பப்பட்ட தன்னுடைய கடைசிப் பெட்டியுடன் தப்பிக்க முயற்சி செய்கிறது. அதனைத் தப்பிக்க விடக்கூடாது. எப்படியும் பின்தொடர வேண்டும். ஒரு மன நிறைவான விஷயம் என்னவென்றால் இப்போது அது பயணிக்கும் கப்பல் அத்தனை விரைவாக கரையை நெருங்கி விடாது. கப்பல் கரையை நெருங்கும்மட்டும் அதனால் தப்பித்துவிட முடியாது” என்றார் ஹென்சிங். டிரான்சில்வேனியாவுக்குத் திரும்பிச் செல்வதுதான் டிராகுலா பிரபுவின் நோக்கம் என்பதில் ... Read More »
ரத்த காட்டேரி – 27
March 17, 2015
ஆயினும் ஜோனாதன் ஹார்க்கர் தன்னை சுதாரித்துக் கொண்டு சட்டென்று உருவிய தனது கூர்மையான பிச்சுவாவை அந்த உருவத்தை நோக்கி விசையுடன் வீசினார். ஆபத்தான அந்த வீச்சிலிருந்து மிக சாதாரணமாக டிராகுலா பிரபு தப்பித்துக் கொண்டார். அதற்குள் அந்தப் பிச்சுவாவை கைப்பற்றிக் கொண்ட ஜோனாதன் மறுபடியும் டிராகுலா பிரபுவை நோக்கி வீசினார். ஹென்சிங் இடக்கையில் பரிசுத்த ரொட்டி நிறைந்த பை மற்றும் சிலுவையை உயர்த்திக் காட்டியபடி டிராகுலா பிரபுவை நோக்கி முன்னேறினார். அதே சமயம் மற்றவர்களும் அதை நோக்கி ... Read More »