மெக்சிகோவில் எரிமலை அருகே பறக்கும் குதிரையை புகைப்படம் எடுத்த பெண்
மெக்சிகோ சிட்டியில் இருந்து 300 மைல் மேற்கே உள்ள கோலிமா என்ற எரிமலை கடந்த வாரம் வெடித்தது. தற்போதும் புகையை கக்கிக்கொண்டிருக்கும் அந்த எரிமலைக்கு அருகே பறக்கும் குதிரை போன்று தோற்றமளிக்கும் உருவம் ஒன்றை பார்த்த பெண் ஒருவர் அந்த காட்சியை புகைப்படம் மற்றும் வீடியோவாக தனது கேமராவில் பதிவு செய்துள்ளார்.
ஆய்வாளர்களால் ‘அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்’ என்று குறிப்பிடப்படும் இது ‘பறக்கும் தட்டு’ என்று பெரும்பாலும் அறியப்படுகிறது. நிறைய இடங்களில் ஏலியன்களின் விண்கலத்தை மக்கள் பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதை நேரில் பார்த்த 24 வயது லயோலா முதலில் அதை பார்த்தபோது ஒரு குதிரையைப் போல் இருந்தது. ஆனால் உற்றுப்பார்த்தபோது குறுகிய மேல்பாகம் பருத்த மத்திய பாகம் கூர்மையான கீழ்பாகம் இருந்ததாகவும் நிச்சயமாக அது பறவை இல்லை என்றும் கூறுகிறார். காரணம் அந்த உருவத்தில் எந்த அசைவும் இல்லை.
சில நிமிடங்களில் அது அவரது பார்வையிலிருந்து மறைந்துள்ளது. அது நிச்சயம் ஏலியன்தான் என்று அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அடித்துக்கூறுகிறார்கள். இணையத்தில் தற்போது அந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய ஏலியன் ஆர்வலர் கராஸ்கோ, எரிமலை ஏலியன்களை ஈர்க்கக்கூடிய ஒரு இடமாகவே இருக்கிறது. அவர்கள் நம் கிரகத்திலிருந்து சாம்பிள் எடுத்துச்செல்வதற்காக வந்திருக்கலாம் என்றார்.
எது எப்படியோ ஏலியன் விவகாரங்களில் இது மற்றொரு மர்மமாகவே இருக்கப்போகிறது.