Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » சூரிய ஒளி மின்சாரம் – பகுதி 6
சூரிய ஒளி மின்சாரம் – பகுதி 6

சூரிய ஒளி மின்சாரம் – பகுதி 6

முந்தைய பதிவில் இறுதியாக பேட்டரி பேங்க் பற்றி விளக்கியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக சில விபரங்களை பார்ப்போம்.

பாட்டரியில் சேமிக்கப்பட்டிருக்கும் டி.சி கரண்ட்(ஆம்பியர்) -ஐ ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக உபயோகப்படுத்த முடியாது. பேட்டரி கரண்டில் 50% தான் பயன் படுத்தலாம். அதிகமாக பயன்படுத்தினால் பேட்டரி டிஸ்சார்ஜ் லெவலுக்கு கீழே போய்விடும். இதனால் பாட்டரியின் வாழ்நாள் குறைந்து விடும். எனவே இன்வெர்ட்டர் தானாகவே அந்த லெவலுக்கு கீழே போனால் மின் இணைப்பை துண்டித்து விடும். எனவே நாம் கவலைப்பட தேவையில்லை. நம்முடைய பேட்டரி பேங்க் 24V-450Amp ஆக இருந்தால்  அதில் சேமிக்கப்பட்டுள்ள 450 ஆம்பியரில் 225 ஆம்பியர் கரண்டை மட்டுமே உபயோகிக்கமுடியும். இந்த கரண்டை இன்வெர்ட்டர் 230V ஏ.சி மின்சாரமாக மாற்றும் பொழுது நமக்கு கிடைக்கும் மின்சாரம் உத்தேசமாக 5400வாட்ஸ். ஆனால் பாட்டரியில் மீதி இருக்கும் கரண்ட் பிக்சட் டெப்பாசிட் போல பாட்டரியிலே இருக்கும். அதன் பின், சோலார் பேனலில் இருந்து கிடைக்கும் கரண்ட் பாட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிடும். சோலார் பேனல் தினமும் 5 யூனிட்டுக்கு தேவையான் கரண்டை மட்டுமே உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. எனவே தினந்தோறும் நாம் 5 யூனிட் மின்சாரத்தை தான் உபயோகிக்கவேண்டும்.

இப்பொழுது 24V-600 ஆம்பியர் பேட்டரி பேங்கை உபயோகித்தால் சுமார் 7200 வாட்ஸ் மின்சாரத்தை பேட்டரியிலிருந்து பெறலாம். இதனால் பாட்டரியில் குறைந்த மின்சாரத்தை சோலார் பேனல் சார்ஜ் செய்ய ஒன்றரை நாட்கள் தேவைப்படும். நீங்கள் முன்பு போலவே தினமும் 5000 வாட்ஸ் உபயோகித்தால் மீதி 2200 வாட்ஸ் மின்சாரம் ரிசர்வ்-ல் எப்பொழுதும் இருக்கும்.

சுருக்கமாக சொல்லப்போனால் உங்கள் சிஸ்டம் ஒரு நாளைக்கு எத்தனை வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறதோ அதே அளவு மின்சாரத்தை தான் நீங்கள் உபயோகிக்க வேண்டும். 1000வாட்ஸ் சிஸ்டம் என்றால் 5000 வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். சிஸ்டத்தின் திறனைப்போல 5 மடங்கு. உங்கள் விருப்பப்படி ரிசர்வ் மின்சாரத்தை அதிகரிக்க பாட்டரியை அதிகப்படுத்த வேண்டும். பட்டியலை கீழே தந்துள்ளேன்.

முதல் வரிசையை பார்க்கலாம்.12V-150A. 6 பேட்டரிகள் தேவை. இரண்டு இரண்டாக சீரியஸ் முறையில் இணைக்க வேண்டும். இவ்விதம் இணைத்தால் 3 செட் கிடைக்கும். இந்த 3 செட்களையும் பேரலெல் முறையில் இணைக்க வேண்டும். இதைத்தான் 2 S x 3 P என சுருக்கமாக ஒரு சீரியஸ் இணைப்புக்கு  2 பாட்டரிகள் (2S),  3 பேரலல் இணைப்புகள் (3P) என குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து அதில் கிடைக்கும் கரண்ட். 450 ஆம்பியர். அதில் உபயோகிக்க கூடியது 225 ஆம்பியர். அதிலிருந்து இன்வெர்ட்டர் மூலமாக நமக்கு கிடைக்கும் மின்சாரம் 5400 வாட்ஸ். ஒரு நாளைக்கு உபயோகப்படுத்த வேண்டிய வாட்ஸ் 5000. மீதி ரிசர்வில் இருப்பது 400 வாட்ஸ்.  இதைப்போலவே மற்றவற்றை நீங்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

அடுத்த நிலைக்கு வருவோம். நம்முடைய சிஸ்டம் 1KW என்பதால் இன்வெர்ட்டரும் 1KW ஆக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒரே நேரத்தில் நாம் எத்தனை வாட்ஸ்களை அதிகப்படியாக உபயோகிக்கிறோமோ அதை விட கூடுதலாக இருக்க வேண்டும். மார்க்கெட்டில் நல்ல கம்பெனி தயாரிப்புகள், சில குறிப்பிட்ட திறன் மற்றும் மின்அழுத்ததில் கிடைக்கும். அதில் நமக்கு பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இன்வெர்ட்டர்களில் வாட்ஸ் என குறிப்பிடப்படுவது கிடையாது.  600VA, 800VA, 1200VA என குறிப்பிடப்பட்டிருக்கும். 1 VA = 0.8W ஆகும். 600VA என்றால் 480W ( 600 x 0.8)சோலாருக்கென்றே பிரத்யோகமாக தயாரிக்கப்படும் சில இன்வெர்ட்டர்களில் MPPT சார்ஜ் கண்டிரோலரும் பில்ட்-இன் ஆக இருக்கும். இத்தகைய இன்வெர்ட்டரை உபயோகப்படுத்தும் பொழுது நாம் சார்ஜ் கண்ட்ரோலரை தனியாக வாங்க வேண்டியது இல்லை.

தற்சமயம் Micro Inverter கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அளவில் மிகவும் சிறியது. ஆனால் இதில் MPPT சார்ஜ் கண்ட்ரோலரும் உள்ளடங்கியது. இதை சோலார் பேனலின் பின் பக்கத்தில் இணைத்துக்கொள்ளலாம். இவ்விதம் இணைக்கும் பொழுது சோலார் பேனலில் இருந்து வெளி வரும் மின்சாரம் 230 V A.C ஆக இருக்கும். நாம் 10 பேனல்கள் உபயோகித்தால் ஒவ்வொரு பேனலுடனும் ஒரு மைக்ரோ இன்வெர்ட்டர் இணைக்க வேண்டும்.அதன் ஏ.சி அவுட்புட்டை பேரலெல் ஆக இணைக்க வேண்டும். இப்பொழுது மொத்த பேனலின் அவுட்புட் மின்சாரமும் 230 வோல்ட் ஏ.சி-யாக இருக்கும். இதை சேமிக்க முடியாது. உடனே நாம் உபயோகிக்க வேண்டும். இது கிரிட்-டை (GRID-TIE) சிஸ்டத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். நாம் இதுவரை தெரிந்து கொண்டது OFF-GRID SYSTEM.

OFF-GRID SYSTEM:  நாம் இதுவரை பார்த்த ஆஃப்-கிரீட் சிஸ்டத்தை நம் வசதிக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம்.

நாம் ஒரு நாளைக்கு உற்பத்தி செய்யும் சோலார் மின்சாரம் தினசரி உபயோகத்திற்கு போதுமானதாக இருந்தால் அதையே உபயோகப்படுத்தலாம். மின் வாரிய இணைப்பை எமெர்ஜென்ஸிக்கு மட்டுமே பயன்படுத்தலாம். ஒரு சேஞ் ஓவர் சுவிட்ச் இணைப்பதன் மூலமாக மின்வாரிய மின்சாரம், இன்வெர்ட்டரிலிருந்து வரும் சோலார் மின்சாரம் இவற்றை நம் விருப்பப்படி உபயோகிக்கலாம். ஜெனரேட்டர் உபயோகிப்பவர்கள் இந்த சேஞ்ச் ஓவர் சுவிட்ச்சைதான் பயன்படுத்துவார்கள்.

அடுத்த பதிவில் GRID-TIE SYSTEM பற்றி விரிவாக பார்க்கலாம்…………….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top