விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றோடு ஒன்று ஒட்டிய விரல்களுடன் மூன்று குழந்தைகள் அவதிப்படுகின்றனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பெரியசெவலையை சேர்ந்த கோவிந்தராஜ்(39), செங்கல் சூலைத் தொழிலாளி. இவருக்கு மொத்தம் 5 குழந்தைகள் உள்ளன. இதில் தேவி(13), மகேந்திரன்(8), ஐயப்பன்(7) ஆகிய 3 பேரும் பிறவியிலேயே வினோதமாக பிறந்துள்ளனர். 3 பேரின் கை மற்றும் கால்விரல்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு உள்ளது. இதனால் சாப்பிடுவதற்கும், மற்ற வேலைகளுக்கும் பிறரை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இதனை குணப்படுத்த முடியும் என்றாலும் போதிய பண வசதியில்லாமல் தவித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளி என அடையாள அட்டை வழங்கப்பட்டும், 90% ஊனம் என்று மருத்துவர்களால் சான்று அளிக்கப்பட்டும் அரசு வழங்கும் மாதாந்திர உதவித் தொகை கூட இன்னமும் கிடைக்கவில்லை. இதற்காக பெற்றோர் வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என பலரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஒரே குடும்பத்தில் 3 மாற்றுத்திறனாளி மற்றும் வினோத குழந்தைகளை வைத்துக்கொண்டு கோவிந்தராஜ் வறுமையில் தவித்து வருவதாக கூறப்படுகிறது. –
Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » ஒரே குடும்பத்தில் மூன்று விநோத பிறவிகள்: திண்டாடும் குடும்பம் –