Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » எச்சரிக்கை.! 2038 ஜனவரி 19 ஆம் திகதியுடன் கணினிகள் செயலிழக்குமா?

எச்சரிக்கை.! 2038 ஜனவரி 19 ஆம் திகதியுடன் கணினிகள் செயலிழக்குமா?

2038 ஆம் ஆண்டில் உல­கி­லுள்ள பெரும்­ப­லான கணி­னிகள் செய­லி­ழந்­துவி­டக்­கூ­டிய அபா­ய­மி­ருப்­ப­தாக நிபு­ணர்கள் எச்­ச­ரித்­துள்­ளனர். கணினி நேரத்தை கணக்­கிடும் முறை­யி­லுள்ள தொழில்­நுட்ப ரீதி­யான குறை­பா­டொன்றே இதற்குக் காரணம்.

இதன்­படி, இன்னும் 24 வரு­டங்­களில் அதா­வது 1938 ஜன­வரி 19 ஆம் திகதி கிறீன்விச் நேரப்­படி அதி­காலை 3 மணி 14 நிமிடம் 7 வினாடி எனும் நேரத்தை அடை­யும்­போது கணி­னி­களால் நேரத்தை புரிந்­து­கொள்ள முடி­யாமல் போய்விடும் எனக் கூறப்­ப­ட Year 2038 Problem (2038 ஆம் வருட பிரச்­சினை) என இக்­கோ­ளாறு குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.]

imgres

தற்­போது உலகின் பெரும்­பா­லான கணி­னி­களின் ஒப்­ப­ரேட்டிங் சிஸ்­டம்கள் 32 பைட் சிஸ்டம் முறை­மை­யி­லேயே இயங்­கு­கின்­றன. 32 பைட் இன்­டெஜர் முறையில் அதி­பட்­ச­மாக 2,147,483,647 விநா­டி­க­ளையே கணக்­கிட முடியும். இத்­த­கைய 32 பைட் இசிஸ்டம் கணினிச் செயன்­மு­றை­களில் ஆரம்ப நேர­மா­னது 1970 ஜன­வரி 1 ஆம் திகதி அதி­காலை 00.00 மணி­யாக குறிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் 2038 ஜன­வரி 19 ஆம் திகதி அதி­காலை 3.14 மணி­யா­கும்­போது 1970 ஜன­வரி முதலாம் திக­தி­யி­லி­ருந்­தான 2,147,483,647 விநாடி நேரம் கடந்­து­விடும். அதன்பின் நேரத்தை சரி­யாக கணக்­கிட முடி­யாமல் 32 பைட் சிஸ்டம் கணி­னிகள் செய­லி­ழக்­கலாம் என நிபு­ணர்கள் கூறு­கின்­றனர்.

y2k38

இதனால் 64 பைட் சிஸ்டம் முறை­மைக்கு கணி­னி­களின் மென்­பொ­ருட்கள் மாற்­றப்­பட வேண்­டி­யி­ருக்கும் எனவும் நிபு­ணர்கள் கூறு­கின்­றனர்.

ஏற்­கெ­னவே யூ ரியூப் இணை­யத்­தளம் இத்­த­கைய நெருக்­க­டி­யொன்றை எதிர்­கொண்­டி­ருந்­தது. யூ ரியூபில் எண்­ணிக்­கையை கணக்­கிடும் முறை­மை­யான 32 பைட் சிஸ்டம் அடிப்­ப­டையில் வடி­வ­மைக்­கப்­பட்­டி­ருந்தால் அத­தி­க­பட்­ச­மாக 2,147,483,647 இலக்­கம்­வ­ரையே அது கணக்­கி­டக்­கூ­டி­ய­தாக இருந்­தது. ஆனால் தென் கொரிய பாடகர் ஷையின் கங்ணம் ஸ்டைல் பாடல் யூரியூப் இணை­யத்­த­ளத்தில் பார்க்­கப்­பட்ட தட­வைகள் மேற்படி எண்­ணிக்­கையை கடந்து சென்­றது.

யூ ரியூப் இணை­யத்­த­ளத்தில் வீடி­யோவை பார்த்­த­வர்­களின் எண்­ணிக்­கையை கணக்­கிடும் முறை­மை­யான 64 பைட் முறை­மைக்கு மாற்­றப்­பட்­டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top