Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » புரியாத புதிர் – யார் ? இவர்கள் 04

புரியாத புதிர் – யார் ? இவர்கள் 04

குறிப்பிட்ட வேற்றுக்கிரகவாசிகளின் கிரகங்கள் வேறுபட்ட பௌதிக இயல்புகளை கொண்டிருத்தல்.
எமது பூமியிலுள்ள கருவிகள், உலோகங்கள் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வகையிலான கருவிகளை அவர்களுடைய விஞ்ஞானிகள் பயன்படுத்துவதன் மூலம் அவை எமது அவதானிப்பு சாதனங்களை தோற்கடிக்கக்கூடிய சாத்தியம் உண்டு என்று அமெரிக்காவின் பிரபல ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளார்கள்.
இதுவரை எமது விஞ்ஞானிகளால் மேற்படி வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான பாரிய தடயங்கள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாமை இச்சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
அவ் ஆய்வாளர்களின் கருத்திலிருந்து ஆராய்ந்து பார்க்கையில் சில விளக்கங்களை பெற்றுக் கொள்ளலாமென எண்ணுகிறேன்.
1. அவர்களின் கிரகத்தில் உள்ள உலோகங்கள் உள்ளடங்கலான மூலகங்கள் உறுதி, அடர்த்தி, உருகுநிலை, கொதிநிலை ஆகியவற்றை இயல்பாக மாற்றி அமைக்கக்கூடியதாக இருக்குமிடத்து அவர்களின் ஏனைய கிரகங்கள் மீதான பிரவேசம் சவால்கள், பிரச்சினைகளை குறைவாகவே உள்ளடக்கியிருக்கும்.
2. சூழலுக்கேற்ப ( பௌதிக நிலை மாற்றங்களுக்கு ஏற்ப ) உடலமைப்பை மாற்றக்கூடிய பரிமாண வளர்ச்சியை வேற்றுக்கிரகவாசிகள் தங்களுடைய கிரகத்தின் பௌதிக நிலையில் காணப்படும் வித்தியாசமான தன்மை காரணமாக கொண்டிருக்கலாம். எமது பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் எமது மக்களுக்கு திடீர் திடீரென தோற்றமளிப்பதும் அதேவேகத்தில் மறைந்து போவதும் இக்கருத்தை மேலும் வலியுறுத்துகின்றன.
3. எமது பூமியில் நாம் மூன்றுவகைப்பரிமாணங்களை மாத்திரமே கொண்டு இயங்குகிறோம். ஆனால் பூமியில் வசிப்பவர்களுக்கு புலப்படாத பல பரிமாணங்களை உள்ளடக்கியதாக வேற்றுக்கிரகவாசிகள் தமது இயக்கத்தை மேற்கொள்ளக்கூடிய திறனை கொண்டிருக்கக்கூடும். இவ்வாறான நிலை இருப்பதுவும் இவர்கள் எமது கண்களுக்கு திடீரென தோற்றமளித்தல், மறைதல் ஆகியவற்றிற்குரிய விளக்கமாக இருக்கும்.
4. பூமியலுள்ள எமக்கு
புலன்கள் :- கேட்டல், பார்த்தல், சுவைத்தல், உணர்தல், மணத்தல்
 
பொறிகள் :- காது, மூக்கு, கண், நாக்கு, தோல்
ஆனால் அவ்வேற்றுக்கிரக வாசிகள் இவற்றில் மேலும் பலவற்றைக்கொண்டிருந்தால் எம்மால் அவற்றைக்கண்டுபிடிக்க முடியுமா? அவை எவை என்று ஊகிக்கவே முடியவில்லையே? எவ்வாறு தான் கண்டுபிடிப்பது?
அவர்களின் இனப்பெருக்க முறையானது மேற்குறிப்பிட்ட ஏனைய புலன்களின் ஒன்றை அடிப்படையாக்க்கொண்டு கூட அமையலாம்.
பறக்கும் தட்டுக்களை ஆக்கப்பயன்படும் உலோகங்களின் வேறுபட்ட இயல்புகளின் சாத்தியம்

1947ம் ஆண்டு தொழில் அதிபரும் விஞ்ஞானியுமான கென்னத் ஆர்னல்ட் என்பவர் தனது சொந்தவிமானத்தில் பறந்து சென்றார். வொஷிங்டன் அருகே ”காஸ்கட்” மலைப்பகுதியில் அவர்விமானத்தை ஓட்டிச்சென்ற போது பறக்கும் தட்டு போன்ற பொருளை அவர் கண்டார்.

அது மணிக்கு சுமார் 1700 மைல் வேகத்தில் பறந்துசென்றதாகவும் குறிப்பிட்டார். விமானி கென்னத் மட்டுமன்றி தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தினரும் இதை ரேடார் கருவி மூலம் பார்த்தனர். இது தவிர பொதுமக்கள் பலரும் பறக்கும் தட்டைப்பார்த்தனர்.

இச்சம்பவம் சார்ந்த படங்களே இப்பதிவில் இடப்பட்டுள்ளன.
தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top