தத்துவக் கதையொன்று….
“ஓர் இளைஞன் சிறந்த வாள் பயிற்சி பெறுவதற்காக குருவைத் தேடிப் புறப்பட்டான்.வல்லமை வாய்ந்த குரு ஒருவர் மலைமீது இருப்பதாகச் சொன்னார்கள். இளைஞன் ஆவலோடு மலையேறிச்சென்று குருவைக் கண்டான். வணங்கினான். தன் வேண்டுகோளைத் தெரிவித்தான்.
“குருவே, நான் கடினமாக உழைத்து தீவிரமாகப் பயிற்சி எடுத்தால் எவ்வளவு காலத்தில் வல்லமை பெற முடியும்? என்று கேட்டான். “பத்து ஆண்டுகள் பிடிக்கும்“என்றார் ஆசான்.
“என் தந்தை தள்ளாத வயதில் இருக்கிறார். நான் அவ்வளவு காலம் இங்கேதங்கியிருக்க முடியாது. நான் சீக்கிரம் ஊர் திரும்பி அவரைக் கவனிக்கவேண்டும்.மிகக் கடுமையாகப் பயிற்சி எடுத்தால் எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியும்? என்று கேட்டான் இளைஞன்.
அநேகமாக முப்பது ஆண்டுகள் பிடிக்கலாம் என்றார் அவர்.
என்ன இப்படிச் சொல்லுகிறீர்கள்..? முதலில் பத்து ஆண்டுகள் என்றுதானேசொன்னீர்கள். கடுமையாகப் பயிற்சி எடுத்தால் சீக்கிரம் முடிக்கமுடியுமல்லவா..?என்றான் அவன்.