பூசணிக்காய், சுண்டைக்காய்…
என்னென்ன சத்துகள் உள்ளது?
–––––––––––––––––––––––
கொத்தவரைக்காய்:
இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. சிறுவர்கள், நோயுற்றோர் இதனை தவிர்ப்பது நல்லது. குறிப்பிடும் படியான சத்துக்கள் இல்லை. வாயுத் தொல்லை லேசான நெஞ்சுவலியை உண்டாக்கும்.
பூசணிக்காய்:
இதில் புரதம், கொழுப்பு சத்துக்கள் உள்ளது. இதனை, ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது.
யாருக்கு நல்லது: குழந்தைகளுக்கும், மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கும் மிகமிக நல்லது. இது, நரம்புகளுக்கு வலுவூட்டும். வயிற்றுப் புண்களை ஆற்றும். உடல் எடையைக் கூட்டும். வெண் பூசணியே நல்லது.
கண்டங்கத்தரி: (Solarium xanthocarpum)
கண்டங்கத்தரிப் பழ விதையைக் காய வைத்து, அனலில் இட்டு, வரும் புகையை வாயில்படும் படி செய்ய, சொத்தைப்பல் குணமாகும், பல்வலி குறையும்.
வாழைக்காய்:
இதில் கொழுப்புச் சத்து, விட்டமின் இ ஆகியவை உள்ளது.
வயிற்றுப்புண், ரத்தமூலம் உள்ளவர்களுக்கு நல்லது. பிஞ்சாக சாப்பிட, நோய் கட்டுப்படும். வாய்வு, இதய, மூட்டுவலியுள்ளவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது
பலன்கள்: உடலுக்கு உரம் அளிக்கும். மலச்சிக்கலை உடைக்கும்.
சுண்டைக்காய்!
இதில் விட்டமின் சி சத்து உள்ளது. சிறுவர்கள் வாரம் இருமுறை சாப்பிட்டால், வயிற்றில் பூச்சிகள் சேராது. ஆஸ்துமா நோயாளிகள் தினசரி சாப்பிட, மூச்சுத்திணறல் குறையும். கர்ப்பிணிப் பெண்கள் மாதம் ஒரு நாள் சாப்பிடலாம்.
பலன்கள்: கிருமிகளை, வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். நுரையீரலுக்கு செயல் திறன் தரும். சளியைக் கரைக்கும். மேலும் சில காய்களைப் பற்றி நாளை பார்க்கலாம்…