ஒரு மனிதனுக்கு அறிவுக் கூர்மை இருக்கின்றதோ இல்லையோ ஆனால்,சமயோசிதம் மட்டும் நிச்சயம் இருக்க வேண்டும். அறிவுக் கூர்மையால் கூட சில காரியங்களை சாதிக்க முடியாத துர்பாக்கிய நிலை ஏற்படுகிறது. ஆனால், சமயோசித பண்பால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை.
ஒரு மனிதன் வெற்றிக்கு அறிவுக் கூர்மை 20 சதவீதம் மட்டுமே அணுசரனையாகஇருக்கிறது, சமயோசித ஆளுமையோ 80 சதவீதம் துணைபுரிகிறது என்று பரிசோதனைகள் தெரிவிக்கின்றன.
பள்ளிகள் கல்லுரிகள் மற்றும் பல கல்வி நிறுவனங்கள், அறிவுக் கூர்மை மட்டுமேஒரு மாணவனின் முன்னேற்றத்துக்கு முக்கியம் என்று கருதி அதன் அடிப்படையில்கல்வியைக் கற்றுக் கொடுக்கின்றன.
ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் சட்டம், மருத்துவம், ஆசிரியர் கல்வி, வியாபாரம் ஆகியவற்றைப் பற்றி மாணவர்களிடம் ஆராய்ச்சி நடத்தினர். அவர்கள் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களுக்கும் (இந்தத் தேர்வு அறிவுக் கூர்மையை மட்டுமே மையப்படுத்தியது) பிறகு பணியில் பெற்ற வெற்றிக்கும் சம்பந்தமேயில்லை என்று தெரிய வந்தது. உயர்ந்த படிப்பு, பள்ளிகளில் வாங்கும் மதிப்பெண்கள், கல்விக் கூடங்கள் வாங்கும் நற்சாட்சி சான்றிதழ்கள் எவையும் பணியில் வெறும் வெற்றிகளை சிறிதும் கணிப்பதில்லை.
இந்த ஆராய்ச்சியில் மேலும் முரண்பாடான செய்திகளும் வெளிவந்தன. மக்களின்வெற்றிக்கு அறிவுக் கூர்மை மிகச் சிறிய அளவு பங்கே வகித்தது. ஆனால், உயர்ந்த பணிகளில் சேர விரும்பியவர்களுக்கு சமயோசித ஆளுமையே பெரிய அளவில்கைகொடுத்தது.
மேலாண்மை, பொறியியல், சட்டம், மருத்துவம் ஆகிய கல்விகளில் பெரும் வெற்றி பெற சமயோசித ஆளுமையே மிக அதிகமாகத் துணை செய்கிறது.
அதனால் ‘ஹார்ட் ஃபீல்ட்’ என்ற கடினத் துறைகளிலும் பணியேற்க ‘ சாஃப்ட் ஸ்கில்’கள் என்று கூறப்படும் சமயோசித ஆளுமை அத்தியாவசியமாகிறது, மற்றவர்களைப் புரிந்து நடப்பது, தைரியமாக செயல்படுவது ஒரு வெற்றியாளரை மற்றவர்களிடம் இருந்து தனித்துக் காண்பிக்கும்.
மேற்கூறிய அனைத்து புள்ளி விவரங்களும் சொந்த திறமையும் சமூகத்துடன்இணங்கிப் போகும் திறமையும் மட்டுமே சமயோசித ஆளுமையின் முக்கியமான தன்மைகள் என்று கூறுகின்றன.