சூரியனுக்கு அருகேயுள்ள கிரகம் புதன். இதனால் இங்கு எப்போதும் கடும் வெப்பம் நிலவுகிறது. அதாவது இதன் மேற்பரப்பில் 430 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலை உள்ளது. இது பூமியில் நிலவும் 58 நாள் வெப்பத்துக்கு ஈடாக கருதப்படுகிறது.
அதே நேரத்தில் அங்கு தண்ணீர் ஐஸ் ஆக உறைந்த நிலையில் உள்ளது. இதை அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் கண்டுபிடித்துள்ளது.
ரேடியோ டெலஸ்கோப் எடுத்து அனுப்பிய போட்டோகளில் இது தெரியவந்துள்ளது. இது ரேடார் கருவி அனுப்பியுள்ள சிக்னல் மூலமும் தெரியவந்துள்ளது. புதன் கிரகத்தின் வடக்கு முனையில் உள்ள எரிமலையில் ‘நாசா’ பல ஆய்வுகளை நடத்தியது. அங்கு தண்ணீர் ஐஸ் ஆக உறைந்து கிடப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது.