Home » பொது » உலகப் பொதுமறை கண்ட தமிழர்
உலகப் பொதுமறை கண்ட தமிழர்

உலகப் பொதுமறை கண்ட தமிழர்

திருவள்ளுவர்
(குருபூஜை தினம்:  மாசி – ஹஸ்தம்)
(மார்ச் 8)

”வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று பாடி மகிழ்வார் மகாகவி பாரதி.

ஈரடிகளால் ஆனா குறட்பா வடிவில், 1330  பாக்களில், அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்கள் மூலமாக வீடு என்னும் உயரிய பேறினை அடைய வழிகாட்டுகிறார் திருவள்ளுவர்.

திருவள்ளுவர் குறித்த ஆதாரப்பூர்வமான விபரங்கள் கிடைக்கவில்லை. எனினும், சென்னை- மயிலாப்பூரில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன், வைகாசி மாத அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார்; மாசி மாத ஹஸ்தம் நட்சத்திரத்தில் முக்தியடைந்தார் என்பது  நம்பிக்கை. மயிலையிலுள்ள திருவள்ளுவர் கோயிலில் காணப்படும் குறிப்பு இது.

இவரது மனைவி பெயர் வாசுகி. குலம்: வள்ளுவர் குலம். மக்களுக்கு யானை  மீது  முரசறைந்து  நற்கருத்துக்களை  வெளிப்படுத்துவது  இவர்தம் குலத்தினரின்  பணியாக  இருந்ததாக  அறிகிறோம்.   இவர் சமயத்தால் சனாதன தர்மத்தை சார்ந்திருந்தவர் என்றும் சமணர் என்றும் வாதப் பிரதிவாதங்கள் உண்டு. ஆயினும் இவர்தம் குறளில் எங்கும் சமயம் சார்ந்த உபதேசங்கள் இல்லை. அதனாலேயே திருக்குறள் ‘உலகப்பொதுமறை’  என்ற பெயர் பெற்றது. உலக மொழிகள் அதிகமானவற்றில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்நூல் என்ற பெருமை குறளுக்கு உண்டு.

திருவள்ளுவரின் நினைவைப் போற்றும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் தை இரண்டாம் நாளை ‘திருவள்ளுவர் தினம்’ என்று தமிழக அரசு அறிவித்து கடைபிடிக்கிறது. இவரை திருவள்ளுவ நாயனார் என்று தமிழ் உலகம் ஏத்திப் புகழ்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top