Home » படித்ததில் பிடித்தது » வாழ்கை தத்துவம்!!!
வாழ்கை தத்துவம்!!!

வாழ்கை தத்துவம்!!!

தற்போதுள்ள மனித அறிவின் படி ஒரே ஒரு தடவைதான் எமது வாழ்கையாகும்.இவ்வாழ்க்கையானது ஒரு குறுகிய காலப்பகுதியை வரையறையாக கொண்டுள்ளது.(ஒவ்வொரு மனிதனுக்குமான இக்கால அவகாசம் சமமாக இருப்பதில்லை) இக்கால இடைவெளிக்குள் ,

  • வாழ்க்கை என்றால் என்ன?
  •  ஏன் வாழவேண்டும்?
  • ஏன் உறவுகளை மதிக்க வேண்டும்.?
  • ஏன் உண்மையாக இருக்கவேண்டும்?
  • யாரை முழுமையாக நம்புவது?
  • ஏன் கோபம் வருகிறது? ஏன் சிந்திக்கின்றோம்?
  • எதுவும் சில காலம் தான் எனத் தெரிந்தும் பொறாமைப்படுகிறோம்?
  • எப்படியோ ஒரு நாள் உடலை மண்ணுக்கு கொடுக்க இருக்கிறோம், ஏன்?
இப்படியாக பல கேள்விகள் வாழ்க்கை சம்பந்தமாக எழுகின்றன?
வாழ்கை சம்பந்தமான கேள்விகளுக் விடையை பார்ப்போமானால் மனம் இதன் பிரதிபலிப்பே வாழ்க்கையின் ஒவ்வொரு படிநிலைக்கும் நேரடியாகவே அல்லது மறைமுகமாகவே இருந்துள்ளதென்பதை அறியமுடிகிறது.
இவ்வுலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் வெற்றியை நேக்கியே தங்களுடைய அன்றாடபொழுதைக்கழிக்கிறார்கள்.
  • ஆனால் பல சோதனைகளுக்கூடாக வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவதை நன்றாக அவதானிக்கமுடிகிறது. இதில் மனத்தின் வேலை என்ன?
  • வாழ்கையில் வரும் சோதனைகளை மனம் கையாளுகிற விதத்தைப்பொறுத்து வெற்றியே தோல்வியே அமைகிறது. எப்படி என்றால்?
  • எந்தவொரு சோதனைக்கும் மனம் முதலில் எதிர்மறையான முடிவையே எடுப்பதே காரணமாகும்.இதனால் நிச்சயமாக வாழ்கையில் முன்னேறமுடியாது
  • மனமானது நேர்மறையாக வரும் சோதனைகளை சிந்தித்தால் எந்தவொரு சோதனையையும் துனிந்து செய்யலாம்.இதனால் வெற்றியடைவது நிச்சயமாகும்
  • சில வேளைகளில் நமக்கும் விதிக்கும் நடக்கும் விளையாட்டே வாழ்க்கை எனப்படுகிறது.
  • ஆகவே மற்றவர்கள் ஊக்கபடுத்தவேண்டும் என்ற சிந்தனையை அகற்றிவிட்டு.மனதில் எழும் பிரச்சனைகளை ஆராய்ந்து நேர்மறையான சிந்தனைகளைவளர்த்துக்கொண்டால் ,நமது மனம் எப்பொழுதும் வெற்றிப்பாதைக்கு நல்லவழிகாட்டியாகவிருக்கும்.
  • வாழ்க்கை வாழ்ந்ததுக்கான அர்த்தம் இருக்க வேண்டு மெனில், வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்
மனிதர்கள் பல வண்ணங்களில் படைக்கப்பட்டாலும்,அவர்களில் 
நல்ல எண்ணங்களை படைத்தவர்களே அழகானவர்கள்…… 
வண்ணங்கள் இல்லை வாழ்க்கை 
 மன எண்ணங்கள்தான் 
உண்மையான வாழ்க்கையாகும்.
இறுதியாக மனத்தின் செயல்பாடுகளினாலேதான் வாழ்கை தத்துவம் தங்கியுள்ளது.ஆகவே மனத்தினை அடக்கி ஆரோக்கிமாக வைத்திருக்கப் பழகிக்கொண்டால் வாழ்கையின் தத்துவம் நன்றாக விளங்கும்.
வாழ்க்கையில் இந்த மூன்று பேரை மட்டும்
எந்நாளும் மறக்காதீர்கள்.
1. கஷ்டமான சமயங்களில் உதவியவர்.
2. கஷ்டமான சமயத்தில் விட்டு சென்றவர்.
3. கஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளியவர்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top