Home » சிறுகதைகள் » நன்றியுள்ள காக்கை!!!
நன்றியுள்ள காக்கை!!!

நன்றியுள்ள காக்கை!!!

மேகலாவுக்கும் சரவணனுக்கும் அர்ச்சனா என்ற 2 வயது மகள் இருந்தாள், அரச்சனாவுக்கு வீட்டின் முற்றத்தில் வைத்து சோறு ஓடினார் அவளின் அம்மா

முற்றத்தில் சோறு ஊட்டுவதை மரத்தில் நின்று பார்த்த ஏராளமான காகங்கள் கூடிவிட்டன.

காக்காவைக் காட்டிக் கொண்டே மகளுக்கு சோறு ஊட்டுவாள் மேகலா. ஆனால் காக்காவுக்கு சோறு போடுவதில்லை.

அப்போது அடுப்பில் விசில்… சத்தம் கேட்கவே, அர்ச்சனாவை கிழே இறக்கிவிட்டு, வீட்டிற்குள் ஓடினாள் மேகலா.

அர்ச்சனாவின்  தளிர்நடையால் அவள் நடக்கும் அழகோ தனி தான்.

அம்மா உள்ளே போனதும், அர்ச்சனா கண்ணால் சிரித்தபடி தளிர்நடை நடந்தபடி, சோற்றை அள்ளி காக்காவை நோக்கி நீட்டினாள். காகங்கள் அவளை நெருங்கி வர, “காக்கா இந்த… காக்கா இந்தா…” என்று சோறு போட்டாள்.

உள்ளே சென்ற மேகலா  திரும்பி வர, அர்ச்சனாவை திட்டி விட்டு,

“அரிசி விக்கிற விலைக்கு இதுகளுக்கு வேற  சோறு போடணுமாக்கும். உன் சாப்பாட்டை காக்காவுக்கு தியானம் பண்றியா?” காக்கைகளை விரட்டினாள்

அர்ச்சனாவுக்கு நாய், பூனை, காக்கா, எறும்பு எல்லோருமே நண்பர்கள்தான். கையில் என்ன பண்டம் வைத்திருந்தாலும் போட்டு விடுவாள். அவளுக்கு என்ன தெரியும்…!?

அதட்டிக் கொண்டே சோறூட்டிய மேகலா , விளையாட்டுச் சாமான்களை அர்சனாவிடம் கொடுத்துவிட்டு, வீட்டு வேலைகளைக் கவனிக்க வீட்டுற்குள் சென்றுவிட்டாள்.

அர்ச்சனா முற்றத்தில் விளையாட்டு சாமான்களை பரப்பி விளையாடிக் கொண்டிருந்தாள்.

திடீரென அர்ச்சனாவின் கூச்சலும், காக்காக்கள் கத்தும் சத்தமும் கேட்டு வெளியே ஓடி வந்தாள் மேகலா.

அங்கே குரங்கு ஒன்றை காக்கை கூட்டம் விரட்டி விரட்டி கொத்திக் கொண்டு இருந்தது.

“அம்மா என் டப்பா…” என்று அழுத அர்ச்சனா, அம்மாவை கட்டிக் கொண்டாள்.

ஒரு நொடியில் நடந்ததை புரிந்து கொண்டாள் மேகலா.

தன் மகள் விளையாடிய பாத்திரத்தில் ‘சாப்பிட ஏதேனும் இருக்குமோ?’ என எண்ணி குரங்கு பாத்திரத்தை தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறது. இதைப் பார்த்த காகங்கள் குரங்கினை விரட்டி கொத்துகின்றன என்பதைப் புரிந்து கொண்டாள்.

மகள் மற்ற ஜீவன்களுடன் நட்பாக இருந்தது, அவளுக்கு ஒரு இடையூறு நேர்ந்தபோது உதவியாக அமைந்ததை எண்ணி ஆச்சிரியப்பட்டாள் மேகலா.

அன்று முதல் மகளுக்கு சோறூட்ட வரும்  மேகலா  முதலில் காகங்களை ‘க்கா…க்கா…’ எனக் கூப்பிட்டு சாதம் வைத்த பின்னரே மகளுக்கு உணவூட்டினாள்!

நாய் மட்டுமல்ல நாம் பாசம் காட்டும் எல்லா உயிரினங்களும் நன்றியுள்ளவையே.

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.  ”

என்கின்ற குறள்  ஞாபகம் வருகிறது

குறள் விளக்கம்: கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top