தித்திக்கும் தேனைக் கொண்டு பருக்களைப் போக்க சில வழிகள்!!!
முகப்பருக்கள்!
ஒவ்வொருவரும் சந்திக்கும் மிகவும் எரிச்சல் தரக்கூடிய ஒரு சரும பிரச்சனை. முகப்பருக்கள் வருவதற்கு சிம்பிளான காரணம் ஒன்றை சொல்ல வேண்டுமெனில், அது நமது சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் பாக்டீரியாக்கள் தாக்கியிருப்பது தான்.
இதனால் எண்ணெய் சுரப்பியானது சீழ் நிரப்பப்பட்டு வீக்கமடைகிறது. இத்தகைய பருக்கள் முகத்தில் மட்டுமல்லாமல், கழுத்து, முதுகு, தோள்பட்டை போன்ற இடங்களிலும் வரும்.
ஒவ்வொருவருக்குமே பருக்கள் இல்லாத மென்மையான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக கடைகளில் பருக்களை போக்கும் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவோம்.
ஆனால் அப்படி பயன்படுத்தும் பொருட்களால் பருக்கள் போகிறதோ இல்லையோ, அதனால் பக்க விளைவுகள் மட்டும் தவறாமல் ஏற்படுகிறது.
பருக்கள் வருவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. அவை மன அழுத்தம் மற்றும் சில மருத்துவ காரணங்களும் தான்.
இந்த பருக்களைப் போக்க கடைகளில் விற்கப்படும் பொருட்களால் மட்டும் தான் முடியும் என்று நினைக்க வேண்டாம்.
அனைவரது வீட்டிலும் இருக்கும் தேனைக் கொண்டே பருக்களைப் போக்கலாம். சரி, இப்போது அந்த தேனைக் கொண்டு எப்படி பருக்களை போக்குவது என்று பார்ப்போம்.
கற்றாழை மற்றும் தேன் மாஸ்க்
கற்றாழையுடன், தேன் சேர்த்து கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், முகத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் தடுக்கலாம்.
அவகேடோ மற்றும் தேன் மாஸ்க்
அவகேடோவில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. மேலும் இது பருக்களையும் போக்கும். குறிப்பாக சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு இந்த பழம் மிகவும் நல்லது. எனவே அவகேடோவையும், தேனையும் கொண்டு முகத்திற்கு மாஸ்க் போடுங்கள்.
சர்க்கரை மற்றும் தேன்
சர்க்கரையுடன் தேன் சேர்த்து கலந்து, முகத்தை மென்மையாக ஸ்கரப் செய்தால், சருமத்துளைகளில் உள்ள அடைப்புகள் மற்றும் அழுக்குகள் முற்றிலும் நீங்கி, எண்ணெய் பசையின் சுரப்பும் குறைந்து, பருக்கள் வருவதும் தடுக்கப்படும்.
ஓட்ஸ் மற்றும் தேன் மாஸ்க்
ஓட்ஸ் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது. தேனை ஓட்ஸ் பொடியுடன் சேர்த்து கலந்து, முகத்தில் மாஸ்க் போட்டு வந்தால், அவை பருக்களை போக்குவதோடு, அதனால் ஏற்படும் வடுக்களையும் தடுக்கும்.
ஸ்ட்ராபெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அதனை கொண்டு சருமத்தைப் பராமரித்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புத்துயிர் பெறும். அதிலும் அந்த ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அதனுடன் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், முகப்பரு பிரச்சனையைப் போக்கலாம்.
பால் மற்றும் தேன் மாஸ்க்
பாலுக்கு சருமத்தை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் தன்மை உள்ளது. எனவே தேனுடன் அத்தகைய பாலை சிறிது சேர்த்து முகத்தில் தடவி உலர வைத்து கழுவினால், பருக்கள் மறையும்.
பட்டை மற்றும் தேன் மாஸ்க்
தேனில் ஆன்டி-பாக்டீரியல் தன்மையும், பட்டையில் ஆன்டி-மைக்ரோபியல் தன்மையும் இருப்பதால், இவற்றைக் கொண்டு, முகத்திற்கு மாஸ்க் போட்டால், பருக்களை போக்கலாம். அதற்கு பட்டை பொடியுடன் தேனை சேர்த்து கலந்து, பருக்கள் உள்ள இடத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.