பார் வளம் பெற நீர் வளம் காப்போம்
உயிருள்ள அனைத்து ஜீவன்களினதும் இயக்கத்துக்கு ஆதாரம் நீர். உயிரற்ற ஜடங்களின் தூய்மை பேணவும் உதவுவது நீர். நீரின்றி உலகமே இல்லை. எல்லா வளங்களுக்கும் மூலவளம் நீரே.
உலக மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த உன்னத பொக்கிசமே நீர். நீர் வளமானது சகல உயிரினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையாகும். அதனை பயன்படுத்துவோர்களிடையே மேலும் மேலும் தேவைகள் அதிகரிப்பதனால் இன்று நீர் போட்டிப் பொருளாகவும், சந்தைப் பொருளாகவும் கூட மாறிவிட்டது.
துணிதுவைத்தல்
* துணி துவைக்கும் இயந்திரம் முழுமையாக துணிகள் நிறைந்தால் மட்டுமே அதை இயக்க வேண்டும். இதன் வழி நீரையும் எரிச்சக்தியையும் சிக்கனப்படுத்தலாம்.
* செயல்திறன்மிக்க சலவை இயந்திரத்தைப் பொருந்தினால் ஒரு தடவை துவைக்கும் துணிகளுக்கு 64 லிட்டர் தண்ணீரைச் சேமிக்கலாம்.
* அடர்ந்த நிறம் கொண்ட ஆடைகளைக் குளிர் நீரில் துவைத்தால், நீரும் சக்தியும் மட்டுமின்றி ஆடையின் நிறமும் மங்காமல் இருக்கும்.
சமையலறை
* கையைப் பயன்படுத்தி இயற்கையாக தட்டுகளைக் கழுவும் போது நீரை வழிய விடாதீர்கள். தொட்டியில் முழுமையாக நீரை நிரப்பி அதில் அலசலாம்.
* பாத்திரம் கழுவும் இயந்திரத்தில் பாத்திரங்களைக் கழுவினால் நீர் அதிகம் விரயமாகாது.
* புதிய பாத்திரமாக இருந்தால் அடிக்கடி கழுவுவதைத் தவிர்க்கவும்.
* நீர்க்குழாயைத் திறந்து கொண்டே பானை மற்றும் வாணலியைக் கழுவுவதை விட அவற்றை ஊற வைத்து கழுவ வேண்டும்.
* பானை அல்லது வாணலியில் தண்ணீரை வைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளைக் அலசினால் நீரைச் சிக்கனப்படுத்தலாம்.
* குளிர்ச்சாதன பெட்டியில் இருக்கும் உறைய வைக்கப்பட்ட பொருட்களை அதிக நீரில் கழுவாமல் அதனை ஊற வைத்தால் நீரைச் சேமிக்கலாம்.
* கொஞ்சமான நீரில் உணவு சமைக்கும் உணவில் உள்ள ஊட்டச்சத்து அதிக அளவில் கிடைக்கிறது
* அளவான வாணலியைத் தேர்ந்தெடுத்து சமைக்கலாம். ஏனெனில் பெரிய வாணலி அல்லது பானையில் சமைத்தால் அதிகமான நீர் தேவைப்படும்.
* தெரியாமல் ஐஸ்கட்டிகள் கீழே விழுந்து விட்டால் அதை எடுத்து சிங்கில் வீச வேண்டாம். அதனை எடுத்து பூச்சாடியிலோ அல்லது மரத்தடியிலோ போடலாம்.
* பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கழுவ பயன்படுத்திய நீரைக் கீழே ஊற்றாமல் வீட்டில் உள்ள பூச்செடிகளுக்கு ஊற்றலாம்.
குளியலறை
* குறைந்த வேகம் கொண்ட நீர் பீச்சியைப் பொருந்தவும். 10 லிட்டர் நீரைச் சேமிக்கலாம்.
* குளியல் அறையின் திறப்புக் குழாய்களில் காற்று வசதியுடனான இயந்திரத்தைப் பொருந்தினால் ஒரு நாளுக்கு 4.8 லிட்டர் நீரை ஒருவரால் சேமிக்க முடியும்.
* பல் துலக்கும் போதும் அல்லது சவரம் செய்யும் போதும் நீர்க்குழாய்களை அடைக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் வழி ஒரு நாளைக்கு 40 லிட்டர் நீரைச் சேமிக்க முடியும்.
* விவேகமான கழிப்பறைக் குடுவை பொருத்தினால் சுமார் ஒரு நாளைக்கு ஒருவரால் 76 லிட்டர் தண்ணீரை சிக்கனப்படுத்த முடியும்.
* கழிவறையில் கசிவு உள்ளதா என்பதனை குறைந்தது ஒரு வருடத்திற்கு ஒரு முறையாவது பரிசோதிக்கவும்.
* கழிவறை தொட்டியில் உணவிற்காக பயன்படுத்தப்படும் வர்ணத்தைக் கலக்கவும். வர்ணம், நீர் பாய்ச்சாமல் வெளியேறுகிறது என்றால் நீர்க் கசிவு உள்ளது என அர்த்தம். அதனை உடனடியாக சரி செய்தல் வேண்டும்.
* கழிவறையில் இரட்டை பறிப்பு (Dual-flush) கொண்ட கழிவறைக் கிண்ணத்தைப் பயன்படுத்தலாம்.
* சவரக் கத்தியை ஒரு குவளையில் ஊற வைத்துக் கழுவினால் மாதத்திற்கு 1200 லிட்டரைச் சேமிக்கலாம்.
* முடியைக் கழுவும்போது நீர்க்குழாயை அடைத்து வைத்தால் ஒரு மாதத்திற்கு 600 லிட்டர் தண்ணீரை மிச்சப்படுத்தலாம்.
* நுரையோடு கை கழுவும் போது நீர்க்குழாயை அடைக்கும் வழி நீர் குறைவாக பயன்படுத்தலாம்.
* அதிக நேரம் குளிப்பதைத் தவிர்க்கவும். குளியல் தொட்டியில் நீரை நிரப்பி குளிப்பது 280 லிட்டருக்குச் சமமாகும்.
மூலிகை நீர்
சித்தர்களின் வாக்குப்படி மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நீர்கள் நோய் தடுப்பில் சிறப்பிடம் பெறுகின்றன. உணவுக்கு உணவாகவும், மருந்துக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. இச்சுவை நீர்களை காலை, மாலை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் விரைவில் பலன் கிடைக்கிறது. சாதாரண சுவைநீர்கள், மூலிகை சேர்வதால் நோய் தடுக்கும் சுகநீராய் மாறுகிறது.
ஆவாரம்பூ நீர்
“ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ” என்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.
கரிசாலை நீர்
சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் கரிசாலை சுவைநீர் தடுக்கிறது. மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும்.
செம்பருத்தி நீர்
செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது.
காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
நன்னாரி நீர்
“தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.
துளசி நீர்
குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து,
தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.
வல்லாரை நீர்
யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும். “காய சித்திக்கு புளியாரை„ கபால கோளாறுக்கு வல்லாரை” என்பார்கள். வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம் எடுத்து மேற்கண்டுள்ள துளசி சுவை நீர் தயாரிப்பதுபோல் வல்லாரை சுவை நீர் தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும் என்றும் ஏற்றது வல்லாரை சுவை நீராகும். இச்சுவை நீர்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது. எனவே நோயுள்ளோரும், பயன்படுத்தி பயன் பெறலாம்.
நீர் – தெரிந்து கொள்வோம்