பள்ளிக்கூடத்தில் நன்றாக படிக்காததால், அவனை உபாத்தியார் “அறிவீலி” என்று ஏசினார். இதனால் வெகுண்ட இவர் தாயார், எடிசனை பள்ளியிலிருந்து எடுத்துவிட்டு வீட்டிலேயே பாடம் கற்றுத்தந்தார். எடிசன் சிறு வயதிலேயே, இயந்திர பொருட்களிலும், வேதியல் சோதனைகள் செய்வதிலும் ஆர்வம் கொண்டார்.
1859ம் வருடம் டெட்ராய்ட் செல்லும் கிராண்ட் ட்ரங்க் ரெயில் ரோடில் ( Grandtruk Rail road to Detroit) செய்திதாளும், இனிப்பும் விற்கும் பையனாக வேலையில் சேர்ந்தார். சரக்கு ஏற்றும் பெட்டி (Baggage car) ஒன்றில், வேதியல் சோதனை செய்வதற்கு வசதியாக ஓர் சோதனை சாலையும், ஒரு அச்சகமும் நிறுவினார் “Grand Trunk Herald” என்னும் பத்திரிகையை வெளியிட்டார். தற்செயலாக ஏற்பட்ட தீ விபத்து அவருடைய சோதனை செய்யும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
12 வது வயதில் கிட்டத்தட்ட அவர் செவிப்புலனை இழந்தார். ஆனால் அவர் சிறிதும் மனம் தளரவில்லை. அந்த குறைபாட்டை ஒரு வரப்பிராசதமாக கருதினார். ஏனென்றால் இதனால் அவர் தன்னுடைய சோதனையிலும் ஆராய்ச்சியிலும் முழுமையாக ஈடுபட முடிந்தது.
1862ம் வருடம் எடிசன், காரில் அடிபடவிருந்த,ஒரு மூன்று வயது குழந்தையை, காப்பாற்றினார். அந்த குழந்தையின் தகப்பனார்,J.U. MacKenzie கடமை உணர்ச்சியுடன், பரிசாக, எடிசனுக்கு ரெயில்ரோட் தந்தி யைப்பற்றி கற்றுத்தந்தார். எடிசன் Port Huron என்னும் இடத்தில் தந்தி ஆபரேடராக சேர்ந்தார். அதன் பிறகு 1863 லிருந்து 1867 வரை,யூ.எஸ் ஸில் எங்கெல்லாம் தந்தி ஆபரேடராக வேலை கிடைத்ததோ அங்கெல்லாம்,மாறிக்கொண்டிருந்தார். அவர் சோதனைகளையும் ஆராய்ச்சி செய்வதை மட்டும் விடவில்லை. 1868 ல் Bostanல் இருந்த Western Union office ல் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் 1869ல் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேரமும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
ஜூன் 1869 ல் அவருடைய முதல் கண்டுப்டிப்பான electric vote recorder க்கு காப்புரிமை (Patent) பெற்றார். அரசியல்வாதிகள் யாரும் அந்த இயந்திரத்தை உபயோகிக்க விரும்பவில்லை. விரக்தியடைந்த எடிசன், இனிமேல் மக்கள் வேண்டாத பொருளை கண்டுபிடிபதில் நேரத்தை வீணாக்கக்கூடாது என்று தீர்மானித்தார்.
ஏடிசன் நியூயார்க்குக்கு சென்ற போது அவருடைய நண்பர் Franklin L. Pope, தான் வேலை செய்துகொண்டிருந்தSamuel Laws’ Gold Indicator Company ல் ஒர் அறையில் தங்க அனுமதித்தார். அப்பொழுது எடிசன் பழுதடைந்த ஒரு இயந்திரத்தை சரி செய்து இயங்க வைத்தார். இதைக்கண்ட உரிமையாளர் எடிசனை அச்சு இயந்திரத்தை பராமரிக்கவும், அதனை, இன்னும் செம்மையாக்கும் பணியில் அமர்த்திக்கொண்டார்.
அக்டோபர் மாதம் 1869ல் Franklin L. Pope and James Ashley the organization Pope, இவர்களுடன் சேர்ந்து, எடிசன் Edison and Co என்ற பெயரில் ஒரு கம்பெனியை நிறுவினார். தாங்கள், மின்சார பொறியாளர்கள் என்றும், மின்சாதனங்க்கள் தயாரிப்பவர்கள் என்றும் விளம்பரப்படுத்திக்கொண்டார்கள்.
தந்தி அனுப்பும் பொறியை செம்மையாக்கிய (Improvement) வகையில் பல காப்புரிமைகளை(Patents) எடிசன் பெற்றார். 1874ல் ஒரேசமயத்தில் இரண்டு திசைகளிலும் தந்தி அனுப்பும் quadruplex என்னும் பொறியை உருவாக்கினார். இதனுடைய காப்புரிமையை, எடிசன் Atlantic & Pacific Telegraph Co., என்ற கமபெனிக்கு விற்க, அதனால் Western Union கம்பெனிக்கும் Atlantic & Pacific Telegraph Co கம்பெனிக்கும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, கடைசியில் Western Union வெற்றி கண்டது. இன்னும் பல தந்தி பொறி கண்டுப்டிப்புகளுக்கு இடையில் 1875 ல் மின்சார பேனா ஒன்றும் உருவாக்கினார்.
இதற்கிடையில் அவருடைய சொந்த வாழ்கையில் (personal life ) பல மாறுதல்கள் ஏற்ப்பட்டன, 1871 வருடம் தாயார் இறந்தார். அதே வருடம் கிருத்துமஸ் தினத்தன்று Mary Stilwell, என்பவரை மணந்தார். எடிசன் மனைவியை மிகவும் நேசித்தார்.
இருந்தபோதிலும் அவர்களுக்கிடையே உறவு அவ்வளவு நன்றாக இல்லை. ஏனென்றால்,எடிசன் எப்பொழுதும் தன் வேலையிலேயே ஈடுபட்டுயிருப்பார், மனைவி நிரந்தர நோயாளி. முதல் குழந்தை Marion பிப்ரவரி 1873 லும் அதன் பின் மகன் Thomas, Jr., ஜனவரி 1876 லும் பிறநதனர். எடிசன், குழந்தைகள் இருவருக்கும் டாட்; டாஷ் தந்தி சங்கேத மொழியில்(“Dot” and “Dash,” referring to telegraphic terms) செல்லப் பெயரிட்டார்( Nickname). அக்டோபர் 1878ல் மூன்றாவது குழந்தை William Leslie பிறந்தது.
1876ல் Menlo Park, NJ ல் ஒரு சோதனைக்கூடத்தை திறந்தார். பிற்காலத்தில் அது ” புதிய கண்டுபிடுப்பு தொழிற்சாலை” ( “invention factory,”) என்று அழைக்கப்பட்டது. 1877 ல் எடிசன்,Alexander Graham Bell’s கண்டுபிடிப்பான தொலை பேசியில் நிறைய மாற்றங்கள் செய்து, செம்மையாக்கி, நன்றாகவும், தெளிவாகவும்,சத்தமாகவும், ஸ்டாண்டெர்ட் தந்தி கம்பி மூலம் (over standard telephone lines. ) கேட்கும்படி செய்தார். இந்த சோதனைகள், எடிசன் 1877ல் phonograph கண்டுபிடிக்க வழிகாட்டியானது.
வெள்ளீயம் பூசின உருளையில் முதன் முதலாக “Mary had a little lamb” என்று phonograph ல் பேசி தன்னுடைய குரலை பதிவு செய்தார். அந்த வார்த்தைகளை அந்த பொறி திரும்ப ஒலித்தது.(“”He eventually formulated a machine with a tinfoil-coated cylinder and a diaphragm and needle. When Edison spoke the words “Mary had a little lamb” into the mouthpiece, to his amazement the machine played the phrase back to him.””). இந்த கருவியை விற்பனை செய்ய 1878 The Edison Speaking Phonograph Company நிறுவப்பட்டது.
இதன் பிறகு எடிசனுடைய சிந்தனைகள் வேறு கண்டுபிடிப்பில் திரும்பியது, அவருடைய கவனம் மின்சார விளக்குகள் பக்கம் திரும்பியது. நவம்பர் 15 1878 ல் The Edison Electric Light Co கம்பெனி நிறுவப்பட்டது. அதிகமாக விளக்குகள் தேவைப்பட்டதால், நிறைய கம்பெனிகள் எடிசன் பல இடங்களில் ஸ்தாபித்தார். 1881 பாரிஸ் நகரிலும், 1882ல் லண்டனிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. மாஸ்கோவில் czar யுடைய முடிசூட்டு விழாவிற்கு பிறகு, பல ஐரோப்பிய நாடுகளில் கம்பெனி நிறுவவேண்டியதாயிற்று.
எடிசனின் மனைவி மேரி மூளையில் ஏற்பட்ட கட்டியினால் 1894 ம் வருடம் ஆகஸ்ட் 8 ம் தேதி உயிர் துறந்தார். 1886 ம் வருடம் பிப்ரவரி 24 ம் தேதி Mina Miller என்னும் பெண்ணை மணம் புரிந்தார். மனைவி Mina Miller உடன் West Orange, New Jersey உள்ள Glenmont என்னும் பெரிய மாளிகையில் குடியேறினார், இவர்களுக்கு 1888, 1890, 1898, இந்த வருடங்களில்,Madeleine, Charles Theodore என்னும் மூன்று குழைந்தைகள் பிறந்தன.
முதல் மனைவி மேரியை போல் அல்லாமல், மினா மிக சுறுசுறுபானவள். சமூக நிகழ்ச்சிகள், நிவாரண அமைப்புகள் இவைகளிலெல்லாம் பங்கெடுத்துக்கொண்டாள். மேலும் தன் கணவனின் சில கவனக்குறைவாக, அக்கறை இல்லாமல் செயல்படும் பழக்க வழக்கங்களை திருத்தினாள்
1887ல் எடிசன் West Orange, New Jersey னில் எல்லா வசதிகளும் கொண்ட பெரிய சோதனைச்சாலையை கட்டி தான் கண்டுபிடித்த phonograph யை இன்னும் நன்றாக செய்து, தான் விற்று விட்ட இதன் காப்புரிமையை திரும்ப வாங்கி 1912ல் disc phonograph என்பதை மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டுவந்தார். இதை தயாரிப்பதில் போட்டிகள் அதிகமானதால் 1929ல் disc phonograph தயாரிப்பதை நிறுத்திவிட்டார்.
எடிசன், கனிபொருளிலிருந்து உலோகம் எடுக்கும் கருவி, சலனப்படம்( Movie) தயாரித்தல், 1913 ல் சினிமா படத்துடன், பேச்சும் வர Kinetophone என்னும் கருவியை கண்டுபிடித்தார். ஆனால் இது 1915 ல் உபயோகத்திலிருந்து போய்விட்டது.1918ல் எடிசன் இந்த மூவி தொழிலிருந்து வெளியேறிவிட்டார்.
1920ம் வருடம் அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதனால் அவர் அதிகமாக தன் பொழுதை வீட்டிலேயே தன் மனைவியுடன் கழித்தார்.எடிசனுடைய ஆப்த நணபர் ஹென்றி ஃப்போர்ட்(Henry Ford, ), எடிசனுடைய invention factory யை ஒரு மியூசியமாக மற்றினார். எடிசினுடைய மின்சார விளக்கின் 50 வது வருட உபயோகத்தின் ஞாபகார்த்தமாக மியூசியம் 1929ல் திறக்கப்பட்டது.
எடிசனை கௌரவிக்கும் வகையில் ஒரு பெரிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் President Hoover, John D. Rockefeller, Jr., George Eastman, Marie Curie, and Orville Wright. முதலியோர் கலந்துகொண்டனர். உடல் நிலை காரணமாக எடிசினால் விருந்து முடியும் வரை இருக்கமுடியவில்லை. அவருடைய ஆரோக்கியம் குறைந்துகொண்டே வந்தது, அக்டோபர் 14ம் தேதி 1931 கோமாவில் படுத்தார் 18ம்தேதி West Orange, New Jersey உள்ள அவருடைய இல்லமான Glenmont ல் அவர் ஆவி பிரிந்தது.