Home » உடல் நலக் குறிப்புகள் » வலிப்பு நோய்!!!
வலிப்பு நோய்!!!

வலிப்பு நோய்!!!

வலிப்பு நோய் – ஒரு விளக்கம்

ஒவ்வொரு நோய்க்கும் அதற்குரிய மருந்துண்டு. மனிதனுக்கு ஏற்படும் துன்பங்களில் நோய் தவிர்க்க முடியாத ஒன்றாகும். எந்த ஒரு நோயும் அதற்குரிய நிவாரணி இன்றி இறக்கப்படுவதில்லை என இஸ்லாம் தீர்க்கமாகக் கூறுகிறது.

பல நோய்களின் தீவிரம் அதிகரிப்பதற்கு, அந்நோயைக் குறித்த போதிய அறிவின்றி தானாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளும் நடவடிக்கைகளும் காரணமாக அமைகின்றன. எந்த ஒரு நோயாக இருந்தாலும் அதனைக் குறித்த விவரங்கள் அறிந்திருப்பது கட்டாயமாகும்.
மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத நோய்களில் வலிப்பு நோயும் ஒன்றாகும். அதனைக் குறித்த விவரங்களை இங்குக் காண்போம்:

* வலிப்பு என்றால் என்ன?

வலிப்பு அல்லது ‘காக்கா வலிப்பு’ என அறியப்படும் நோய் மூளையைத் தாக்கும் ஒரு நோயாகும். மூளையிலிருந்து மைய நரம்பு மண்டலம் மூலம் உடலின் பல உறுப்புகளுக்கு நரம்புகள் வழியே வரும் கட்டளைத் தொகுப்புகளில் (நரம்புகளில்) சிறிது நேரம் தடங்கல் ஏற்படுவதையே வலிப்பு எனப் பொதுவழக்கில் அழைக்கிறார்கள்.

* வலிப்பு நோய்க்கான மூல காரணம் என்ன?

மைய நரம்பு மண்டலத்திற்கு இழைக்கப்படும் சேதங்களால்,
பிறப்பின்போது தலைப்பகுதியில் ஏற்படும் காயங்கள்/சிராய்ப்புகளால்,
சிலருக்குப் பிறப்பின்போதே இருக்கும் நரம்புமண்டலக் குறைப்பாட்டினால்,
விபத்தினால் தலையில் ஏற்படும் காயங்களினால்,
மூளையில் ஏற்படும் கட்டிகளால்,
ஆல்கஹால், போதை மருந்து உட்கொள்வதால் ஏற்படும் நரம்பு மண்டலம் சிதிலத்தால்,
மூளைக் காய்ச்சலால் வலிப்பு வர வாய்ப்புள்ளது.

* எத்தனை வகை வலிப்புகள் உள்ளன?

மேலோட்டமாக இவற்றை இருவகைப் படுத்தலாம். முதலாவது, பகுதி (Partial) வலிப்பு; இரண்டாவது பொது (General) வலிப்பு.

பகுதி வலிப்பில் மூளையின் ஒரு பகுதி மட்டும் பாதிக்கப்படும். அப்பகுதியினால் இயக்கப்படும் உறுப்புகள் வலிப்புக்கு உள்ளாகும். கை, கால், வாய் இவற்றைக் கட்டுப் படுத்தும் மூளையின் பகுதியில் வலிப்பு ஏற்பட்டால் அந்த உறுப்புகள் மட்டும் பாதிக்கப்படும்.
பொதுவலிப்பு மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் பாதிக்கப்படுவதால் உண்டாவதாகும். இதிலும் இருவகைகள் உள்ளன. ‘பெடிட்மால்’ (Petit Mal), ‘கிராண்ட்மால்’ (Grand Mal) என இவ்விரு வகைகளும் அழைக்கப்படுகின்றன.

பெடிட்மால் மிகச் சிறிய அளவில் தோன்றி மறையும் ஒரு வலிப்பாகும். சில சமயம் இது கண்டுகொள்ளப்படாமலேயே வந்து போகலாம். இது ஒரு நொடியிலிருந்து பத்து முதல் இருபது நொடிகள் வரை நீடிக்கலாம். திடீரென விழிகள் செருகிக் கொள்ளுதல், காரணம் ஏதுமில்லாமல் ஓர் அறையினுள் அங்குமிங்கும் அலைதல் போன்றவை இந்நோயின் குறியீடுகளாம்.
கிராண்ட்மால் தாக்கியவர் முதலில் கண் முன் ஒரு பிரகாசமான காட்சி தோன்றுவது போல உணர்வார். கை கால்கள் உதறிக் கொள்ளும். பின், சுய நினைவின்றி மயங்கி விழுவார். மலம், சிறுநீர் போன்றவை அவரது கட்டுப்பாட்டில் இல்லாமல் பிரிய நேரலாம்.

* வலிப்பு நோய் தாக்கியவரைப் பார்க்கும்போது என்ன செய்ய வேண்டும்?

1. வலிப்பு கண்டவர் அருகில் கூரான பொருட்கள் ஏதுமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேசையின் கூரான முனைகள், சுவர் விளிம்புகள் இவற்றினருகில் அவர் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

2. அமைதியாக அவரை ஓரிடத்தில் அமர வைக்க முயலலாம்; ஆனால் கட்டாயப் படுத்துதல் கூடாது.

3. தரையில் விழ நேரிட்டால் அவரை ஒருக்களித்து இருக்குமாறு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், வலிப்பால் வெளிப்படும் உமிழ்நீர் எச்சில், மூச்சுக் குழலுக்குள் புகுந்து மூச்சுத் திணறலோ மரணமோ ஏற்படுவதைத் தடுக்கலாம்.

4. தலையில் அணைவாக மிருதுவான பொருட்களை வைக்க வேண்டும். இது, தலை வேகமாக தரையோடு முட்டிக் கொள்வதைத் தடுக்கும்.

5. வலிப்பு எவ்வளவு நேரம் நீடிக்கிறது எனச் சரியாகக் கணக்கிட வேண்டும். பொதுவாக 5 நிமிடங்களுக்குள் எல்லா வலிப்புகளும் அடங்கி விடும். அவ்வாறு அடங்காவிட்டாலோ, மீண்டும் மீண்டும் வலிப்பு வந்தாலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

* வலிப்பு இருப்பதாக அறியப்பட்டவர்கள் என்னென்ன செய்யக்கூடாது?

வலிப்பு நோய் இருப்பதாக அறியப்பட்டவர் சாதாரணமாகப் பிறரைப் போலவே வாழ்க்கை நடத்தலாம். இருப்பினும் வாகனங்கள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், மரம் ஏறுதல், உயரமான இடங்களுக்குத் துணையின்றிச் செல்லல், கனரக வாகனங்கள், கேட்டர்பில்லர், போக்லைன் போன்ற மலை உடைக்கும் மண் அள்ளும் கருவிகளை இயக்குதல், போன்ற பணிகளில் ஈடுபடக்கூடாது.

“வலிப்பு வந்தவரின் கைகளில் இரும்பை அல்லது சாவிக் கொத்தைத் திணித்தால் வலிப்புப் போய் விடும்” என்று ஒரு நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. இது தவறான நம்பிக்கையாகும். வலிப்பு வந்தவரின் கைகளில் இரும்பைக் கொடுப்பதால் ஒரு பலனும் இல்லை. அதனைக் கொண்டு அவர் தன்னைத் தாக்கிக் கொள்ள நேரிடலாம். அதனால் சாவிகொத்து, கம்பி, கத்தி போன்ற இரும்பாலான பொருட்களை வலிப்பு வந்தவரின் கையில் கொடுப்பது கூடாது.

வலிப்பும் மற்ற நோய்களைப் போன்ற ஒரு நோயே. சரியான சிகிச்சை அளிப்பதன் மூலம் அதனைக் குணப்படுத்தி விடவும் முடியும். எனவே இத்தகைய நோய் உள்ளவர்களைக் கண்டு அச்சம் கொள்ளவும் தேவையில்லை. மாறாக, முடிந்தவரையிலும் வலிப்பு நோயுள்ளவர்களைக் கண்காணிப்பதும் வலிப்பு ஏற்பட்டு விட்ட ஒருவருக்கு நம்மாலான தகுந்த உதவிகளைச் செய்வதும் மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவரது கடமையாகும்.

வலிப்பு நோய் பற்றிய மனோபாவம்

வலிப்புநோய் நோய்நிர்ணயம் செய்யப்பட்டதும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனோநிலை சிரமமான விடயமாகும். காரணம் வலிப்பு நோய் பற்றிய தவறான அல்லது பிற்போக்கான அபிப்பிராயங்களாகும். சில பெற்றோர்கள் வலிப்பு நோயுடைய சிறுவர்கள் மீது அளவுக்கதிகமான அக்கறைகாட்டிவதற்கு ஆரம்பித்து விடுவார்கள். இது புரிந்து கொள்ளக் கூடிய விடயம். ஆயினும் சிறுவர்களின் விருப்புகளுக்கு இடமளித்தலும் அவசியமாகும்.

வேறு பலவகையான நோய்களைப் போன்றே இந்நோய் பற்றிய மனோபாவமானது இந் நோயினை விட மிகவும் கடினமானது ஆகும். வலிப்பு நோய் காரணமாக அளவுக்கதிகமான மனப் பதட்டத்துக்கோ மன இறுக்கத்துக்கோ உள்ளாகி இருப்பின் உளவள ஆலோசனை பெறுவது உகந்தது. தங்களது வைத்தியரிடம் இது பற்றி ஆலோசனை பெற முடியும்.

ஒன்று சேரப் பார்க்கும் போது பலரும் கருதுவதை விட சிறந்த பெறு பேறுகளே கிடைக்கின்றன. மருந்துகள் மூலம் வலிப்பினை கட்டுப் படுத்துகின்றதன் / தடுப்பதன் வெற்றி வலிப்பு நோயின் வகையிலேயே தங்கி உள்ளது அநேகமான வலிப்பு நோயுடையவர்கள் முழுமையான, துடிப்பான வாழ்க்கையினை வாழக்கூடியதாக இருக்கும். மிக மிகச் சிறிதளவு நோயாளிகள் திடீர் மரணங்களை சம்பவித்துள்ளனர். ஆயின் அவர்கள் தமது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கும். உ-ம். குறிப்பிட்ட காலப்பகுதிக்கு வாகனங்களை ஓட்டுதல் தடை செய்யப் பட்டுள்ளது

வலிப்பு மருந்துகளை நிறுத்துவதற்கு உத்தேசிக்கும் போது முதலில் தற்காலிகமாக மருந்துகளை நிறுத்திப் பரீட்சிக்கப்பட்டு பின்னரே நிறுத்தப்படும். ஒருபோதும் சடுதியாக நிறுத்தக் கூடாது.

வலிப்பு நோயின் நீண்ட கால விளைவுகள்

மருந்துகள் மூலம் வலிப்பினை கட்டுப்படுத்துவதன் அல்லது தடுப்பதன் வெற்றி வலிப்பு நோயின் வகையிலேயே தங்கியுள்ளது. உ-ம். வலிப்பு உருவாகுவதற்கு காரணம் எதுவும் கண்டறியப்பட முடியாத வலிப்பு நோயானது மாத்திரைகள் மூலம் முற்றாக நன்கு கட்டுப்படுத்தப்படுகிறது. ஆயின் வேறு அறியப்பட்ட மூளைப்பாதிப்புக்கள் காரணமாக உருவாகும் வலிப்பினைக் கட்டுப்படுத்துவது சிரமமான காரியமாகும்.

ஒன்றுசேரப் பார்க்கும் போது பலரும் கருதுவதை விட சிறந்த பெறுபேறுகளே கிடைக்கின்றன. கீழே குறிப்பிடப்படும் தரவுகள் ஐந்து வருடகாலமாக வலிப்பு நோயுடையவர்களைத் தொடர்ந்து ஆராய்வதன் மூலம் இங்கிலாந்திலே பெறப்பட்ட தகவல்களாகும்.

* ஏறத்தாள வலிப்பு நோயுள்ள 10பேரில் ஐவரில் ஐந்துவருடங்களாக மீண்டும் வலிப்பு ஏற்படவில்லை. அநேகமானோர் தொடர்ந்து வலிப்பு மருந்துகளை உபயோகித்து வந்தனர். சிலர் இரண்டு/ இரண்டுக்கு மேற்பட்ட வருடங்கள் தொடர்ந்து மருந்துகளை பாவித்து வரும் போது வலிப்பு ஏற்படாமையால் நிறுத்தி இருந்தனர்.

* ஏறத்தாள 10 பேரில் 3வரில் ஐந்துவருட காலத்தினுள் சில வலிப்புகள் ஏற்பட்டிருந்தன. ஆயின் வலிப்பு மருந்துகளை உட்கொள்ளாதவர்களுடன் ஒப்பிடுகையில் மிக அரிதாகவே ஆகும்.

* ஆகவே கூட்டாகப் பார்க்கும் போது வலிப்பு மருந்துகளை பாவிக்கும்போது 10 பேரில் 8வரில் வலிப்பு நோயானது நன்கு கட்டுப்படுத்தப்படுகிறது.

* மீதமுள்ள 10 பேரில் இருவரில் வலிப்பு மருந்தினைப் பயன்படுத்தும் போதும் தொடர்ச்சியாக வலிப்பு ஏற்படுகிறது.

* மிகமிகச் சிறிதளவு நோயாளிகள் திடீர் மரணங்களை சம்பவித்துள்ளனர். இதற்குரிய சரியான காரணம் அறியப்படவில்லை. ஆயினும் வலிப்பின் போது சுவாசத்தில் ஏற்பட்ட தடங்கல்/ இதயத்துடிப்பில் ஏற்பட்ட சந்தக்குழப்பம் காரணமாக இருக்க வேண்டும். ஆயின் இது மிக அரிதாகும், அநேகமாக பெரும்பாலானோர் வலிப்பின் பின்னர் முற்றாக சாதாரண நிலைக்குத் திரும்புவார்கள்.

வலிப்பு மருந்துகளை நிறுத்துவதற்கு உத்தேசிக்கும் போது முதலில் தற்காலிகமாக மருந்துகளை நிறுத்திப் பரீட்சிக்கப்படும். இது வலிப்பானது 2-3 வருடங்களுக்கு தொடர்ச்சியாக ஏற்படாதவிடத்து மாத்திரமே முயற்சிக்கப்படலாம்.

இவ்வாறு மருந்தினை நிறுத்துவதற்கு தீர்மானிக்கும் போது படிப்படியாக சில மாதங்களிலேயே மருந்தின் அளவைக் குறைத்துச் செல்ல வேண்டும். ஒருபோதும் வைத்திய ஆலோசனை இன்றி மருந்தினை நிறுத்தக்கூடாது.

அநேகமான வலிப்பு நோயுடையவர்கள் முழுமையான, சுறுசுறுப்பான வாழ்க்கையினை வாழக்கூடியதாக இருக்கும். ஆயின் அவர்கள் தமது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கும். உ-ம். குறிப்பிட்ட காலப்பகுதிக்கு வாகனங்களை ஓட்டுதல் தடைசெய்யப்பட்டுள்ளது.


சிறுவர்களுக்குரிய அறிவுறுத்தல்கள்

மருந்து வகைகள்

வலிப்பினை மிகச் சிறந்த முறையில் கட்டுப்படுத்திக் கொள்வதற்கு வைத்திய ஆலோசனைக்கு இணங்க ஒழுங்கான முறையில் மருந்துகளை உள்ளெடுத்தல் வேண்டும். இதனை தினசரி வழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். ஒருதடவை மறந்து விடுவது சிலரில் சிக்கல்களை ஏற்படுத்தாத போதும் வேறு சிலரில் சடுதியாக வலிப்பினை ஏற்படுத்தக் கூடும்

பாடசாலை

அநேக வலிப்பு நோயுடைய சிறுவர்கள் சாதாரண பாடசாலைகளிலேயே கல்வி கற்பர். அநேகரில் வேறு விதமான குறைபாடுகள் ஏதும் காணப்படுவதில்லை.

ஆசிரியர்கள் இச் சிறுவர்கள் பற்றி அறிந்திருப்பதும் மருந்துகளின் உபயோகம் பற்றி விளங்கி இருப்பதும் வலிப்பு ஏற்படும் போது கையாளும் முறையினை அறிந்திருப்பதும் அவசியம். சில சிறுவர்களில் வலிப்பு நோயுடன் வேறு சில குறைபாடுகளும் காணப்படலாம். அத்துடன் அவர்களுக்கு விசேட பாடசாலைகளும் அவசியப்படலாம்.

விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு

அநேக விளையாட்டுக்களில் பங்குபற்றலாம். ஆயின் தகுந்த அறிந்த மேற்பார்வை அவசியம். முன்னெச்சரிக்கை எடுத்தல் வேண்டும்.

பயணங்கள்

போதுமான மருந்தினை எடுத்துச் செல்லல் அவசியம். நீண்ட தூர பயணம் மற்றும் விமான சத்தம் போன்றவை களைப்படைய செய்வதுடன் வலிப்பினை ஏற்படுத்தக் கூடும்.

மற்றையவர்களுக்கு தெரிவித்தல்

வலிப்பின் வகை பற்றி ஏனையவர்களுக்கு அறிவுறுத்தல் உசிதமானது. நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் போன்றோர்களுக்கு வலிப்பு எவ்விதமாக ஏற்படுகிறது என்பதை தெரிவிக்க முடியும். அவர்களுக்கு மயக்கம் ஏற்படின் மீள்தல் நிலையில் நோயாளியை வைத்திருப்பது பற்றி விளக்கமளித்தல் உகந்தது. வலிப்பின் வகையினைப் பொறுத்து நோயாளியின் நடத்தையின் மாற்றங்கள் ஏற்படுமாயின் (சிக்கலான பகுதியான வலிப்பு) இது பற்றி ஏனையவர்கள் அறிந்திருப்பதன் மூலம் அவர்கள் உதவிகளை மேற்கொள்ள முடியும்.

பாதுகாப்பு நடவடிக்கைகள். அதாவது ஆபத்தான காயங்கள் ஏற்படாது தவிர்ப்பதற்கான விபரம்.

* தீக்காயம் – நேரடித் தீயினைத் தவிர்த்தல் வேண்டும். சமையலறை, அடுப்புகள் போன்றவற்றை பாதுகாப்பான முறையில் அமைத்தல் வேண்டும்.

* நீர் – குளிக்கச் செல்லுமுன் யாரிடமாவது தெரிவித்து விட்டுச் செல்ல வேண்டும். கதவுகளை தாளிடாது விடுதல் வேண்டும். நீந்த செல்லும் போது வேறு யாருடனாவது சேர்ந்து செல்ல வேண்டும். ஆழமற்ற பிரதேசங்களிலேயே நீந்த வேண்டும்.

* உயரங்கள் – போதுமான பாதுகாப்பு வேலிகள் அமைந்திருக்க வேண்டும்.

* மின்சாரம் – இவை மிகச் சரியான பாதுகாப்பான முறையில் அமைக்கப் பட்டிருத்தல் அவசியம்.

* கூர்மையான தளபாடங்கள் – கூரிய மூலைகளை மூடுதல் மற்றும் மென்மையான தளபாடங்களை உபயோகித்தல்.

வலிப்பு நோயாளிகளுக்குரிய அறிவுறுத்தல்கள்

ஆயத்தமாக இருத்தல்

அநேகமானவர்களில் மருந்துகள் மூலம் வலிப்பு நோய் நன்கு கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். ஆயின் வலிப்பினை எதிர் கொள்ள ஆயத்தமாக இருத்தல் சிறந்தது.

மற்றையவர்களுக்கு தெரிவித்தல். வலிப்பின் வகை பற்றி ஏனையவர்களுக்கு அறிவுறுத்தல் உசிதமானது. நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் போன்றோர்களுக்கு வலிப்பு எவ்விதமாக ஏற்படுகிறது என்பதை தெரிவிக்க முடியும். அவர்களுக்கு மயக்கம் ஏற்படின் மீள்தல் நிலையில் நோயாளியை வைத்திருப்பது பற்றி விளக்கமளித்தல் உகந்தது. வலிப்பின் வகையினைப் பொறுத்து நோயாளியின் நடத்தையின் மாற்றங்கள் ஏற்படுமாயின் (சிக்கலான பகுதியான வலிப்பு) இது பற்றி ஏனையவர்கள் அறிந்திருப்பதன் மூலம் அவர்கள் உதவிகளை மேற்கொள்ள முடியும்.


பாதுகாப்பு நடவடிக்கைகள். அதாவது ஆபத்தான காயங்கள் ஏற்படாது தவிர்ப்பதற்கான விபரம்.

* தீக்காயம் – நேரடித் தீயினைத் தவிர்த்தல் வேண்டும். சமையலறை, அடுப்புகள் போன்றவற்றை பாதுகாப்பான முறையில் அமைத்தல் வேண்டும்.

* நீர் – குளிக்கச் செல்லுமுன் யாரிடமாவது தெரிவித்து விட்டுச் செல்ல வேண்டும். கதவுகளை தாளிடாது விடுதல் வேண்டும். நீந்துவதற்குச் செல்லும் போது வேறு ஒருவருடன் சேர்ந்து செல்ல வேண்டும். ஆழமற்ற பிரதேசங்களிலேயே நீந்த வேண்டும்.

* உயரங்கள் – போதுமான பாதுகாப்பு வேலிகள் அமைந்திருக்க வேண்டும்.

* மின்சாரம் – இவை மிகச்சரியான பாதுகாப்பான முறையில் அமைக்கப் பட்டிருத்தல் அவசியம்.

* கூர்மையான தளபாடங்கள் – கூரிய மூலைகளை மூடுதல் மற்றும் மென்மையான தளபாடங்களை உபயோகித்தல்.

வலிப்பு நோயானது உங்களை வெளியே சென்று சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ்வதை தடுப்பதற்கு இடமளிக்கக் கூடாது. ஆபத்துக்கள் யாவற்றையும் தவிர்க்க முடியாது ஆயின் பொதுவான அவதானங்கள் மூலம் அவற்றிலிருந்து பாதுகாக்கலாம்.

வலிப்பு நோயாளிகளுக்குரிய அறிவுறுத்தல்கள்

மருந்து வகைகள்

வலிப்பினை மிகச் சிறந்த முறையில் கட்டுப்படுத்திக் கொள்வதற்கு வைத்திய ஆலோசனைக்கு இணங்க ஒழுங்கான முறையில் மருந்துகளை உள்ளெடுத்தல் வேண்டும். இதனை தினசரி வழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு தடவை மறந்து விடுவது சிலரில் சிக்கல்களை ஏற்படுத்தாத போதும் வேறு சிலரில் சடுதியாக வலிப்பினை ஏற்படுத்தக் கூடும்.

வாகனங்களை ஓட்டுதல்

சட்ட திட்டங்களுக்கு அமைய வலிப்பு நோய் உடையவர்கள் வாகனங்கள் ஓட்டுவதை நிறுத்த வேண்டும். உங்களிடம் சாரதி அனுமதிப் பத்திரம் இருப்பின் தங்களுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதை சாரதி அனுமதிப்பத்திர வழங்குனர்களிடம் தெரியப்படுத்தல் வேண்டும். அவர்கள் மீண்டும் எச்சந்தர்ப்பத்தில் சாரதி அனுமதி பத்திரம் பெறக்கூடியதாக இருக்குமென ஆலோசனை வழங்குவர். இது பொதுவாக ஒருவருடம் முற்றாக வலிப்பு இன்றி காணப்பட்ட பின்னராகும். பாரிய வாகனங்களை ஓட்டுவதற்கு இது மிகவும் இறுக்கமான சட்டதிட்டமாகும். சட்டங்கள் மற்றவர்களை பாதுகாப்பதையே குறிக்கோளாகக் கொண்டவை.

வாகனம் ஓட்டுதல் மருந்துச் சிகிச்சையினை தொடர்வதையும் நிறுத்துவதையும் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாகும். இரண்டு வருடங்களுக்கு மேல் வலிப்பு வராதவிடத்து மருந்து சிகிச்சையினை நிறுத்துவதற்கு பயிற்சிக்கப் படலாம். ஆயின் இதன் பின் வலிப்பு ஏற்படின் வாகனம் ஓட்டுவது குறைந்தது ஒரு வருடம் ஆயினும் நிறுத்துதல் வேண்டும். அதனுடன் மருந்துகளை நிறுத்துவதற்கு தீர்மானிக்கும் போது இவ்வாறு படிப்படியாக நிறுத்தி வரும் காலப்பகுதியில் (சில மாதங்கள்) மற்றும் மேலும் 6 மாதங்களுக்கு வாகனங்கள் ஓட்டுவதை நிறுத்த வேண்டும்.

வேலை

மிகச் சில வேலைகளிலேயே வலிப்பு நோயுடையவர்கள் இணைக்கப்படுவதில்லை. ஆயின் அவர்களால் மேற்கொள்ளக் கூடிய வேலைகள் பல உள்ளன. சில சந்தர்ப்பங்களில் வேலைகளை இழப்பதற்கு காரணம் சக தொழிலாளர்களின் வலிப்பு நோய் பற்றிய தவறான மனோபாவமாகும்.

பயணங்கள்

போதுமான மருந்தினை எடுத்துச் செல்லல் அவசியம். நீண்ட தூர பயணம் மற்றும் விமான சத்தம் போன்றவை களைப்படைய செய்வதுடன் வலிப்பினை ஏற்படுத்தக் கூடும்.

கருத்தடை மருந்துகள்

வலிப்பு மருந்துகள் இவற்றுக்கிடையே தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடும். எனவே கருத்தடையினை மேற்கொள்ள உயர்ந்தளவிலான கருத்தடை மருந்துகள் தேவைப்படும். வைத்தியர் ஆலோசனை அவசியம்.

கர்ப்பம் தரித்தல்

கர்ப்பமடைதல் வலிப்பு ஏற்படுவதினை அதிகரிக்கவோ குறைக்கவோ மாட்டாது. ஆயின் வலிப்பு மருந்துகள் சில சிசுவினைப் பாதிக்கக் கூடிய தன்மை கொண்டவை. எனவே கருத்தரிக்க முன்னர் வைத்திய ஆலோசனை பெற்றுக் கொள்வது மிக அவசியம். ஒரு முக்கிய விடயம் யாதெனில் கூடியளவில் போலிக் அமிலம் உட்கொள்ளல் வேண்டும். அதனை கருத்தரிக்க முன்னர் ஆரம்பித்து தொடர்ந்து தொடர்ந்து கர்ப்ப காலத்தில் பயன்படுத்த வேண்டும். இது சில குறைபாடுகள் ஏற்படுவதை தடுக்கிறது. திட்டமிடப்படாத கர்ப்பம் எனில் வலிப்பு மருந்துகளை நிறுத்தல் கூடாது. அதன் மூலம் வலிப்பு ஏற்பட ஆரம்பிக்கலாம். உடனடியாக வைத்தியரின் ஆலோசனை பெறுதல் வேண்டும்.

வலிப்பினை தடுத்தலும் ஏனைய சிகிச்சைகளும் 

வலிப்பினை தடுத்தல்

தூண்டல்க் காரணிகளைத் தவிர்த்தல்

சிலரில் குறிப்பிட்ட வகையான தூண்டல் காரணிகள் வலிப்பினை அதிகமாக ஏற்படுத்தக் கூடியன. இவை வலிப்பு நோய்க்குரிய காரணங்கள் அல்ல ஆயின் இவை சில சந்தர்ப்பங்களில் வலிப்பினை தூண்டக் கூடியன.

அவையாவன

* மனஉளைச்சல், பதற்றம்

* மிதமிஞ்சிய மதுப்பாவனை

* போதை மருந்துகள்

* சில மருந்துகள் உ-ம். மனஇறுக்கத்துக்கு எதிரான மற்றும் மனநோய்க்குரிய மருந்துகள்

* போதுமான நித்திரை இன்மை, உடல் களைப்படைதல்

* ஒழுங்கற்ற உணவுப்பழக்கம் – குருதி குளுக்கோஸ் குறைதல்

* ஒளிரும் வெளிச்சங்கள்

* மாதவிடாய்

* நோய்கள் – காய்ச்சல், தடிமல் போன்றன

வலிப்பு நாட் காட்டியைப் பேணுவது இவற்றை அடையாளம் காண உதவிகரமாக இருக்கும். அத்துடன் இவற்றை தவிர்க்கக்கூடியதாக இருக்கும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சமச்சீரான உணவு, ஒழுங்கான உணவுப் பழக்கங்கள், அளவுக்கதிகமான களைப்பினைத் தவிர்த்தல் போன்றன வலிப்பினை தவிர்க்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும்.

ஏனைய சிகிச்சை முறைகள்

* சத்திர சிகிச்சை – இதன் மூலம் வலிப்பினை ஏற்படுத்துகின்ற மூளையின் பாதிப்புக்குள்ளான பகுதியை அகற்ற முடியும். மருந்து வகைகள் மூலம் வலிப்பினைக் கட்டுப்படுத்த முடியாத நிலையை அடையும் போது சத்திரசிகிச்சையினைப் பயன்படுத்த உத்தேசிக்கலாம். இது சில வகையான மூளைப் பாதிப்புகளுக்கும், மூளையின் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கும் மட்டுமே பயன்படுத்தக்கூடியது. எனவே குறிப்பிட்ட மிகச்சில நோயாளிகளே சத்திர சிகிச்சைக்குப் பொருத்தமானவர்களாக இருப்பர். அத்துடன் மூளையில் சத்திரசிகிச்சையானது ஆபத்தினை கொண்டுள்ளதும் ஆகும். ஆயின் சத்திர சிகிச்சை நுட்பங்கள் முன்னேறி வருவதனால் எதிர்காலங்களில் பல நோயாளிகளில் சத்திர சிகிச்சை முறை உபயோகிக்கப்படலாம்.

* (Vagal) நரம்பு தூண்டுதல் – சிலரில் பயன்படுத்தக்கூடும்.

* கீற்றோன்கள் எனப்படும் பதார்த்தங்களைக் கொண்டுள்ள உணவுப்பொருட்கள். இது அனுபவம் வாய்ந்த போசணை தொடர்பான நிபுணரின் மேற் பார்வையின் கீழ் சில சிறுவர்களிலும் பெரியவர்களிலும் குறிப்பிட்ட வகையான வலிப்பு நோய்களுக்கு வழங்கப்படலாம்.

* அத்துடன் ஒத்திசைவுச் சிகிச்சைகள். உ-ம். சுவாசப்பயிற்சி, மனதையும் உடலையும் தளர்த்தும் பயிற்சி, மனஉளைச்சலை குறைத்தல் போன்றன.

வலிப்பு

அரைக்கீரையுடன் சுக்கு, இஞ்சி, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் குளிர் சன்னி, வலிப்பு நோய் போன்றவை குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top