அழகான பூக்களை ரசித்தால் மனம் புத்துணர்வடையும். இது அனைவரும் அறிந்த உண்மை. பூக்கள் நறுமணத்தையும், புத்துணர்வையும் கொடுக்கும் தன்மை கொண்டவை. இந்த பூக்களில் அபூர்வமான மருத்துவக் குணங்களும் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றின் மருத்துவத் தன்மை பற்றி விரிவாக அறிந்து வருகிறோம்.
நீரில் மிதக்கும் அகன்ற நீள்வட்ட இலைகளையும் நுண்குழலுடைய இலைக் காம்புகளையும் உடைய நீர்ச்செடி அல்லி. இதன் மலர்கள் நீர்மேல் மிதந்து கொண்டிருக்கும்.
வெள்ளை நிற மலர்களையுடையது வெள்ளையல்லியெனவும் செந்நிற மலர்களையுடையது செவ்வல்லியெனவும் வழங்கப் பெறும். இது குளம் குட்டைகளில் வளர்கின்றன. இதன் இலை, பூ, விதை, கிழங்கு ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
பெண்களில் முகத்தை தாமரைக்கும், அல்லிக்கும் ஒப்பாக குறிப்பிடுகின்றனர் சங்ககால புலவர்கள். அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி குளம், பொய்கை, நீர்ச்சுனைகளிலும், மெதுவாக ஓடும் ஆறுகளிலும் பார்க்கலாம்.
அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்).
எகிப்தில் உள்ள நைல் ஆற்றில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.
இந்த இதழில் அல்லி மலரின் மருத்துவக் குணத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
தாமரையைப் போல் நீரில் பூக்கும் பூ தான் அல்லி. இந்த மலர் இறைவனுக்கு படைக்கும் மலராகும். மாலைப் பொழுதில் தான் அல்லி மலர் மலரும். அல்லிக்கு ஆல்பம், குமுதம், கைவரம் என்ற பெயர்களும் உண்டு.
Tamil – Alli
English – Water lily
Sanskri – Kumudam
Malayalam – Neerampal
Telugu – Alli-kada
Botanical Name – Nymphaea alba
இது இந்தியாவில் குளங்களிலும், குட்டைகளிலும் பயிராகும் கொடி வகுப்பைச் சேர்ந்தது.
சிவப்பு, வெண்சிவப்பு நிற பூக்களைக் கொண்டது. குளிர்காலத்திலும், மழைக்காலத்திலும் இது ஏராளமாய்ப் பூக்கும்.
அல்லி மலரின் நன்மைகள்:
1. அல்லி இலையை நீரிலிட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வந்தால் எளிதில் புண்கள் ஆறும்.
2. 200 கிராம் உலர்ந்த வெள்ளை இதழ்களை 6 லிட்டர் நீரில் ஊறவைத்து வடித்த நீரை 30 மி.லி. யாகக் காலை மாலை குடித்து வர சிறுநீரில் இரத்தம், சிறுநீர்ப்பாதைப்புண், சிறுநீர் மிகுதியாகக் கழிதல், தாகம், உட்காய்ச்சல் ஆகியவை தீரும்.
3. அல்லிக் கிழங்கை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு 5 கிராம் பாலில் கலந்து காலை மாலையாகச் சாப்பிட்டு வர குடல்புண், வயிற்றுப்போக்கு, மூலம் ஆகியவை குணமாகும்.
4. அல்லி பூ 50 கிராம் 250 மி.லி. நீரிலிட்டு 125 மி.லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டியதில் 30 கிராம் சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி காலை மாலை 15 மி.லி யாகச் சாப்பிட்டு வர மூளைக்கொதிப்பு தணியும். கண் குளிர்ச்சியடையும். இதயப்படபடப்பைத் தணிக்கும்.
5. அல்லி மலரில் உள்ள மகரந்தப் பொடியை உலர்த்தி நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிக்க உடல் எரிச்சல், இரத்த மூலம், பெரும்பாடு ஆகியவை தணியும்.
அல்லி மலரின் மருத்துவ குணங்களும் மகத்துவங்களும்
மேகமறும் புண்ணாறும் விட்டேகும் நீரிழிவு
தாகந் தணியும் தழலகலும் – வாகான
மெல்லியலே! ஆயுள்மறை வேதிய ரெலாமுரைக்கும்
அல்லி மலரால் அறி
(அகத்தியர் குணபாடம்)
உடல் சூடு தணிய
உடல் சூட்டால் பல வியாதிகள் தொற்றிக் கொள்ளும். கண்கள் பாதிப்படையும். ஈரல் பாதிப்படைந்து பித்த நீர் அதிகரிக்கும். மேலும் மலச்சிக்கல், சரும நோய்கள் உண்டாகும். இரத்த ஓட்ட மண்டலம் பாதிக்கப்படும். இதனால் சிறுநீரக பாதிப்பு உண்டாகும். தூக்கமின்மை, அதிக வெப்பமுள்ள இடங்களில் வேலை செய்தல், சூட்டை அதிகரிக்கக்கூடிய உணவுகள் இவற்றால் உடல் சூடு அடைகிறது. இவர்கள் வெள்ளை அல்லியின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடித்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சூடு குறையும். உடல் சூட்டினால் உண்டாகும் நோய்களின் தாக்கமும் குறையும்.
நீரிழிவு பாதிப்பு நீங்க
சர்க்கரை நோயானது பாரபட்சமின்றி அனைத்து தர மக்களையும் பாதிப்படையச் செய்கிறது.
இந்த பாதிப்பு நீங்க வெள்ளை அல்லி மலரின் இதழ்களை காயவைத்துபொடித்து கஷாயம் செய்து காலையும் மாலையும் அருந்தி வர நீரிழிவு நோயின் பாதிப்பு நீங்கும்.
சிறுநீர் எரிச்சல் குறைய
சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது நீர்த்தாரையில் எரிச்சல் உண்டாகும். இவர்கள் வெள்ளை அல்லியின் இதழ்களை கஷாயம் செய்து அருந்தி வந்தால் நீர் எரிச்சல் நீங்கும்.
தாகம் தணிய
சிலருக்கு அடிக்கடி நாவறட்சி உண்டாகும். எவ்வளவுதான் நீர் அருந்தினாலும் தாகம் தணியாது. இவர்கள் வெள்ளை அல்லி மலரின் இதழ்களை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தி வந்தால் தாகம் தணியும்.
செவ்வல்லியின் மருத்துவக் குணங்கள்
செவ்வல்லிப் பூவுக்குச் சேர்ந்திறங்கு நீர்ப்பிணியோ
டொவ்வுமே கப்பிணியும் ஓய்வதன்றி இவ்வுலகிற்
கண்ணின்நோய் தீரும் கனத்தபித்த ரத்தமொடு
புண்ணின் நோய் பன்னோயும் போம்
-அகத்தியர் குணபாடம்.
கண்ணோய்கள் நீங்க
கண்கள் உடலின் பிரதான உறுப்புகளுள் ஒன்று. இன்று கணினி முன்பு அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வதால் கண் பார்வை நரம்புகள் நீர்கோர்த்து கண் சம்பந்தமான நோய்களை உண்டாக்குகின்றன.
இதனைப் போக்க செவ்வல்லியின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும்.
இரத்தம் சுத்தமாக
உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால்தான் மனிதன் ஆரோக்கியமாக வாழமுடியும். செவ்வல்லியின் இதழ்களை காயவைத்து பொடி செய்து காலை மாலை இருவேளையும் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும்.
கண் நோய்களை குணமாக்கும்
அல்லியின் வேர், கிழங்கு, விதை, பூ போன்றவை மருத்துவ குணம் கொண்டவை. இது துவர்ப்பி,சமனப்படுத்தி, குன்மம்,பேதி, மூலம் போகும், அக்கிப்புண் போகும். நீரிழிவு நோய் குணமாகும். இருதயத்தை பலப்படுத்தும்.
அல்லிப்பூ தாமரையைப் போல் இருந்தாலும் மிகச் சிறியதாக காணப்படுகின்றது. வெள்ளை அல்லிப் பூ தான் அதிக மருத்துவ குணம் கொண்டது. அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்கள் அல்லி இதழ்களையும், உள்ளேயுள்ள முடிச்சுக்களையும் பச்சையாகச் சாப்பிடலாம். நீரிழிவு உள்ளவர்கள் அல்லிப்பூவில் சர்பத் செய்து சாப்பிட்டால் நோய் கட்டுப்படும்.
அல்லிப் பூவிற்கு நீரிழிவை சீராக்கும் குணம் உள்ளது. இது புண்களை ஆற்றும். வெப்பச் சூட்டால் ஏற்படும் கண் நோய்களைத் தீர்க்கும். அல்லிப் பூவை அரைத்து சர்பத் செய்து சாப்பிடலாம்.
நினைவாற்றலை அதிகரிக்கும் தாமரை
அல்லியைப் போல தாமரையும் மருத்துவ குணம் கொண்டது. தாமரை மலர் மிகவும் அழகானது. இதன் மத்தியில் சரஸ்வதி வீற்றிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. நினைவாற்றலுக்கு தாமரைப்பூ சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
தாமரைப் பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரை, திரை, மூப்பு ஆகிய மூன்றும் ஏற்படாது. அத்துடன் உயிரையும் வளர்க்கும் என்று சித்த நூல்கள் கூறுகின்றன. நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ தாமரைப் பூ மருந்தாகப் பயன்படுகின்றது. வெள்ளைத் தாமரைப் பூவைச் சுத்தம் செய்து குடிநீர் தயாரித்து பருகி வந்தால் இரத்த மூலம், சீதபேதி குணமடையும் என்பர்.
மூளை வளர்ச்சிக்கு இது முக்கிய மருந்தாகும். இதன் அடிப்படையில் தான் கல்வி வளர்ச்சியும் ஞான வளர்ச்சியும் இருக்கும். தாமரை விதைகளை பச்சையாகச் சாப்பிடலாம். இதைச் சாப்பிட்டால் இரத்த விருத்தி ஏற்படும். உடல் உஷ்ணம் குறையும். பண்டைய எகிப்தியர்கள் வெள்ளை தாமரையினை உடல் நலத்திற்காகவும் பாலுணர்வு தூண்டவும் பயன்படுத்தி வந்துள்ளனர். இது இன்றைய வயாக்கராவிற்கு ஈடாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
மருத்துவக் குணங்கள்:
1. அல்லி இதழ்களை மட்டும் சேகரித்து அதனுடன் 200 மில்லி நீர் விட்டு காய்ச்சி பாதியாக வற்றியதும் குடித்து வர நீரிழிவு நோய் கட்டுப்படும்.
2. கண்சிவப்பு, எரிச்சல், நீர் வடிதல் இவற்றுக்கு அல்லி இதழ்களை அரிந்து கண்களின் மீது வைத்து கட்டி வர நல்ல குணம் கிடைக்கும். அல்லி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து பால் அல்லது தேனில் கலந்து உட்கொண்டு வர அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவைத் தடுக்கலாம்.
3. வெள்ளை அல்லி இதழ்கள் 100 கிராம் அளவு எடுத்து அதே அளவு ஆவாரம்பூவை சேர்த்து ஒரு லிட்டர் நீர் விட்டு காய்ச்சி அரை லிட்டராக சுண்டியபின் அதனை வடிகட்டி அதனுடன் அரை கிலோ சர்க்கரையை கலந்து நன்கு காய்ச்சி பாகு பதத்தில் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும். இதில் 30 மில்லி அளவு எடுத்து அதை 100 மில்லி பசும் பாலில் கலந்து தினமும் இருவேளை குடித்து வர உஷ்ணம் தணியும். ரத்தக் கொதிப்பும், நீரிழிவு நோயும் கட்டுப்படும். வெள்ளை நோய், மேகவெட்டை குணமாகும். உஷ்ணத்தால் ஏற்படக் கூடிய கண் நோயும் தீரும்.
4. கோடைக் காலத்தில் உஷ்ணத்தினால் குழந்தைகளுக்கு கட்டிகள் உண்டாகும். இதற்கு அல்லி இலையும் அவுரி இலையும் சம அளவில் எடுத்து அரிசி கழுவிய நீரில் அரிது பூசினால் கட்டி உடைந்து குணமாகும். அவுரி இலைக்குப் பதில் ஆவாரைக் கொழுந்தை சேர்த்து அரைத்துப் பூச அக்கி கொப்புளம் தீரும்.
5. அல்லி இதழ்களை நீரிலிட்டு காய்ச்சி கசாயமாக்கி பாலுடன் கலந்து பருகி வர நாவறட்சி, தீராத தாகம், சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
6. அல்லி விதையை சேகரித்து தூளாக்கி பாலுடன் கலந்து குடித்து வர தாதுவிருத்தி உண்டாகும். கல்லீரலும் மண்ணீரலும் பலமடையும்.
7. அவுரி இலைச் சாறு, மருதாணி இலைச் சாறு வகைக்கு 100 மில்லி அளவு எடுத்து 500 மில்லி தேங்காய் எண்ணையில் கலந்து, அதில் 100 கிராம் அல்லிக் கிழங்கும், 35 கிராம் தான்றிக் காயும் அரைத்து கலந்து காய்ச்சி பதமுடன் இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இதை தலைக்குத் தேய்த்து வர இளநரை மறையும். முடி கருத்து தழைத்து வளரும். அத்துடன் பித்தம் தணியும்.
8. சிவப்பு அல்லி இதழ்களுடன் செம்பருத்திப் பூ இதழ் சேர்த்து காய்ச்சி கசாயம் ஆக்கி குடித்து வர இதயம் பலமடையும். இதய படபடப்பு நீங்கும். ரத்தம் பெருகும்.
9. அல்லி விதையுடன் சம அளவு ஆவாரம் விதை சேர்த்து பொடியாக்கி 1-2 கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர வெள்ளை நோய் குணமாகும். நீரிழிவு நோய் தீரும். ஆண்மை பெருகும்.
10. சர்க்கரை நோயுக்கும், சிறுநீர் தொடர்பான நோய்களுக்கும் அல்லி மலர் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
11. நீரில் பூக்கும் அல்லிச்செடிகளை விட அதன் மலர்களுக்குத் தான் மருத்துவ குணம் அதிகம்.இதில் வெள்ளை அல்லி, சிவப்பு அல்லி ஆகிய இரண்டுமே பயன் தரக்கூடியது தான்.
12. அல்லி பூவை சாறெடுத்து சிறிதளவு செந்தூரம் கலந்து இருபது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் தொடர்பான பிரச்னைகள் தீர்ந்து விடும்.
13. வெள்ளை அல்லி பூவையும், ஆவாரம் பூவையும் சமஅளவில் எடுத்து போதிய அளவு சர்க்கரை சேர்த்து நீரில் காய்ச்ச வேண்டும்.
14. கூழ்போல கொதித்த பின் இறக்கி ஆறவைத்து காலையிலும், மாலையிலும் பசுவின் பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் தொடர்பான நோய்கள் குணமாகும்.
15. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடர்ந்து 40 நாட்கள் இதை சாப்பிட்டு வந்தால் நோய் குணமாகும்.
16. கண் சிவப்பு, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்ற கண் சம்பந்தமான பிரச்னைகளுக்கு அல்லி இலையை கண்களின் மீது தினமும் ஒரு மணி நேரம் வைத்து வந்தால் நோய் குணமாகும்.
17. அல்லி இலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து பால் மற்றும் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவை தடுக்கலாம்.
18. கோடை காலத்தில் உஷ்ணத்தினால் குழந்தைகளுக்கு சூடு கட்டி வரும். அல்லி இலையையும், அவுரி இலையையும் சம அளவில் எடுத்து அரிசி கழுவிய நீரில் அரைத்து பூசினால் கட்டி உடைந்து குணமடையும்.
19. சிவப்பு அல்லி இதழ்களுடன், செம்பருத்தி பூ இதழையும் சேர்த்து காய்ச்சி கசாயம் செய்து குடித்து வந்தால் இதயம் பலமடையும், இதய படபடப்பு வராது, உடலில் ரத்தம் பெருகும்.