குதிரைச் சிலைகளின் உருவ அமைப்பும் அதன் அர்த்தமும்:
மனித பரிமாணத்திலிருந்து அவனின் ஒவ்வொரு கலாச்சார மாற்றத்திலும் இந்தக் குதிரை பங்கெடுத்துக் கொண்டு தான் இருக்கிறது.
குதிரைக்கு இந்தளவு மவுசு வந்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். பல பழமொழிகளில் இதன் பெயர் இடம்பெற்றிருப்பத்தான் இதன் இன்னுமொரு தனிச் சிறப்பு.கம்பீரத்திற்காகத் தான் அதை விரும்பினார்களோ தெரியல.
இவற்றை விட அதன் வலு தான் மிக முக்கியமானது. இயந்திர வலுவைக் கூட குதிரை வலு என்று தான் அழைப்பர். ஒரு குதிரை வலு என்பது 246 வாற்று ஆகும். இதன் கால் அமைப்பால் இதனால் நின்றபடி தான் நித்திரை கொள்ள முடிகிறது.
இனி வாருங்கள் தலைப்பிற்கு வருவோம்.
நீங்கள் பல இடங்களில் குதிரையுடன் கூடிய அரச சிலைகளைக் கண்டிருப்பீர்கள் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அமைந்திருக்கும். பலர் அது சிற்பியின் வெளிப்பாடு என நினைப்பதுண்டு ஆனால் உண்மை காரணம் அதுவல்ல அச் சிலைகளை 3 விதமாக வகைப்பிரிக்கலாம்.
1- இரண்டு கால்களையும் தூக்கிய படி நிற்கும் சிலைகளைப் பார்த்தால்…
அந்த மன்னர் ஒரு போர் வீரனாக களத்தில இறந்திருக்கிறார் என்பதை குறிக்கிறது.
2- ஒற்றைக் காலை தூக்கிய படி நிற்கும் சிலைகளைப் பார்த்தால்…
இந்த மன்னர் இயற்கை மரணமடையவில்லை என்பதை குறிக்கிறது. சிலவேளை அந்த மன்னர் விழுப் புண் அடைந்து இறந்திருந்தால் கூட இப்படித் தான் கருதப்படும்.
3- நான்கு கால்களையும் தரையில் பதித்த படி நிற்கும் சிலைகளைப் பார்த்தால்…
அந்த மன்னர் இயற்கை மரணமெய்து விட்டார் என்பதைக் குறிக்கும்.
இப்போது காரணம் புரிந்திருக்குமே…
இப்படி பல சிலைகளை நீங்கள் கண்டிருப்பீர்கள். அதன் வரலாறு அறிந்திருப்பீர்கள்.