Home » பொது » சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்!!!
சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்!!!

சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்!!!

சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் (ஜனவரி 19, 1933 – மார்ச் 24, 1988) தமிழ் கருநாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு.

பெயர் :சி.கோவிந்தராசன்

பிறப்பு:19 ஜனவரி 1933; இறப்பு:24 மார்ச் 1988.

பெற்றோர்:சிவசிதம்பரம்,அவையாம்பாள்

ஆரம்ப கல்வி:வாணிவிலாஸ் பாடசாலை,சீர்காழி
இளமைப் பருவத்தில் விரும்பிப்பாடிய பாடல்கள் சில:
தியானமே எனது -தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்
வதனமே சந்திர பிம்பமோ-தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்
செந்தாமரை முகமே-பி.யூ.சின்னப்பா பாடிய பாடல்
கோடையிலே இளைப்பாறி-எல்.ஜி.கிட்டப்பா பாடிய பாடல்

சீர்காழியின் தந்தை சிவசிதம்பரம் கலைநாட்டம் மிக்கவர். சீர்காழி கோவிலொன்றில் இராமயண இசை நாடம் நடத்தி வந்தார். அதில் குட்டி ராமனாக நடித்து பாடல்களும் பாடினார்.

கோவிந்தராஜன்,இளைமையிலேயே தேவி நாடகக் குழுவிலும் , பாய்ஸ் கம்பெனியிலும் இணைந்து தனது நடிப்புத் திறமையையும் இசைத் திறமையையும் வளர்த்துக் கொண்டார்.

கோவிந்தராஜனை அவரது சித்தப்பா பி.எஸ்.செட்டியார் சேலம் மார்டன் தியேட்டர்ஸில் துணை நடிகராகச் சேர்த்துவிட்டார்.

மாடர்ன் தியேட்டர்ஸ் அரங்கின் தனி அறை ஒன்றில் தங்கிய படியே சங்கீத சாதகம் செய்வதை வழக்கமாகக் கொண்டார்.

கோவிந்தராஜன் பாடுவதைக் கேட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும் , இசையமைப்பாளர் ஜி.ராமநாதனும் கோவிந்தராஜனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று அப்போதே கணித்துச்சொன்னார்கள்.

பி.ஏஸ்.செட்டியார், கோவிந்தராஜனை சென்னைக்கு அழைத்து வந்து தமிழ் இசைக்கல்லூரியில் சேர்த்துவிட்டார்.

பதினெட்டு வயதிலேயே(1951) சங்கீத வித்வான் , இசைமணி ஆகிய பட்டங்களைப் பெற்றார்.

1951 இல் சென்னை வித்வத் சபையில் நடந்த போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார். இதன் பிறகே சினிமா வாய்ப்பு கோவிந்தராஜன் கதவைத் தட்டியது.

கல்கி எழுதிய பொய்மான் காடு பொன்வயல் என்ற பெயரில் திரைப்படமாக உருவானது. துறையூர் ராஜகோபால் சர்மா இசையில் சுத்தானந்த பாரதி வரிகளில் தனது வெங்கலக் குரலை சிரிப்புத் தான் வருதைய்யா என்ற பாடல் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார் கோவிந்தராஜன். ஆனால் இந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த அவ்வையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார். திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.

ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆருக்கு சீர்காழியும் சிவாஜிக்கு டி.எம்.எஸ்ஸும் பாடி வந்தார்கள். கண்ணதாசன் எழுதிய அறுபடை வீடு கொண்ட திருமுருகா என்ற நீளப்பாடலை (ஏழு நிமிடங்கள்) ஒரே டேக்கில் பாடிவிட்டு அசத்தியிருக்கிறார். இந்த சாதனைக்கு முருகன் அருள் தான் காரணம் என்றிருக்கிறார். பக்திப் பாடல்கள் பல பாடிக் குவித்த கோவிந்தராஜன் தனது 55 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு முருகனடி சேர்ந்தார் (24/03/88).

சீர்காழி கோவிந்த ராஜன் குரலில் மெலடி கிடையாது. முரட்டு குரல்.

டிஎம் எஸ் குரலில் உள்ள ‘கனிவு’ ‘தண்மை’ ‘குழைவு ‘சீர்காழியிடம் அறவே கிடையாது.

பாடும்போது ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு விடுவார்.

நான் பாடுவதில் மேதையாக்கும் என்ற கர்வம் குரலில் வெளிப்படும்.

தமிழ் உச்சரிப்பு சுத்தம். ஆனால் தேவைக்கு மேல் அழுத்தம் கொடுத்து வார்த்தைகளை கடித்து விடுவார்.

அந்த காலத்தில் பல தமிழ் படங்களில் கதாநாயகி கலங்கி தவித்து தக்காளி விக்கும்போது
சீர்காழி செயற்கை உருக்கத்துடன் “துள்ளி வரும் சூறை காற்று துடிக்குதொரு தென்னம்தோப்பு இல்லை ஒரு பாதுகாப்பு இது தானா இறைவன் தீர்ப்பு……காவல் இல்லா கன்னி என்றால் கண்கலங்கும் வாழ்க்கை உண்டு ”என்று கதறுவார் .” நீதி மத யானை வீதிவழி சென்றதம்மா !” என கேவுவார்.சிகரட் பிடிக்க ,ஒண்ணுக்கு அடிக்க பலரும் எழுந்து போவார்கள்.

சில பாடல்களை சவால் போல பாடி விடுவார்.
டிஎம் எஸ் ” முருகா என்றழைக்கவா? முத்துக்குமரா என்றழைக்கவா?…எப்படி அழைப்பேன் உன்னை எங்கே காண்பேன் ” என்றுபக்திபாடல் உருக்கமாய் பாடியதற்கு
சீர்காழி எதிர்ப்பாட்டு ” முருகா என்றழைத்தால் என்ன ? கந்தா என்றழைத்தால் என்ன? கார்த்திகேயன் என்றால் என்ன?…எப்படியும் அழைக்கலாம்! எங்கிருந்தும் காணலாம் ”
இதில் பக்தி கூட வேடிக்கையாக ஆகும்படி கூச்சலாக சீர்காழி ஆக்கியிருந்தார்.

சீர்காழியின் நளினமற்ற அபத்த கூப்பாடு க்கு ஒரு உதாரணம்.

‘திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம் ‘ பாட்டில் டிஎம் எஸ் குரலை அமுக்கி மெலடி இல்லாமல் கூப்பாடு போடுவார்.
என்றாலும் கூட சீர்காழி பல பாடல்களை கணீரென்று தன் வெண்கல குரலில் அற்புதமாக பாடியிருக்கிறார்.

திரைப்படப் பாடகர்:-

திரைப்படத்துக்காக பாடிய முதல்பாடல்:1953 இல் பொன்வயல் என்ற படத்துக்காக சிரிப்புத் தான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல்,ஆனால் அந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த ஔவையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார். திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.

திரைப்படத்துக்காக பாடிய பிரபல பாடல்கள் சில:-

1. பட்டணந்தான் போகலாமடி – படம்: எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை: எம்.வேணு

2. அமுதும் தேனும் எதற்கு – படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்,இசை: கே.வி.மகாதேவன்

3. மாட்டுக்கார வேலா – படம்: வண்ணக்கிளி, இசை : கே.வி.மகாதேவன்

4. வில் எங்கே கணை இங்கே – படம்: மாலையிட்ட மங்கை, இசை : எம்.எஸ்.விஸ்வநாதன், இராமமூர்த்தி

5. வானமிதில் நீந்தியோடும் வெண்ணிலாவே – படம்: கோமதியின் காதலன், இசை: ஜி.இராமநாதன்

6. கொங்கு நாட்டுச் செங்கரும்பே – படம்: கோமதியின் காதலன், இசை :ஜி. இராமநாதன்

7. மலையே என் நிலையே – வணங்காமுடி, இசை: ஜி. இராமநாதன்

8. ஜக்கம்மா – வீரபாண்டிய கட்டபொம்மன், இசை: ஜி.இராமநாதன்

9. பட்டணந்தான் போகலாமடி – படம்: எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை: எம்.வேணு

10. ஒற்றுமையாய் வாழ்வதாலே (பாகப்பிரிவினை 1959)

11. எங்கிருந்தோ வந்தான் (படிக்காத மேதை 1960)பாரதியார் பாடல், இசை: கே. வி. மகாதேவன்

12. ஓடம் நதியினிலே (காத்திருந்த கண்கள்)

13. கோட்டையிலே ஒரு ஆலமரம் (முரடன் முத்து)

14. நல்ல மனைவி நல்ல பிள்ளை (நம்ம வீட்டு லட்சுமி 1966)

15. பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா (அக்கா தங்கை 1969)

16. கண்ணான கண்மணிக்கு அவசரமா(ஆலயமணி 1962)

17. கண்ணன் வந்தான் (ராமு)

பிரபல நகைச்சுவைப் பாடல்கள் சில:-

1. பட்டணந்தான் போகலாமடி – படம்: எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை:எம்.வேணு

2. மாமியாளுக்கு ஒரு சேதி – படம்: பனித்திரை

3. காதலிக்க நேரமில்லை – படம்: காதலிக்க நேரமில்லை

4. ஆசைக்கிளியே கோபமா- சபாஷ் மீனா (இதற்கு நடித்தவர் சந்திரபாபு)

எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள்:-

சக்ரவர்த்தித் திருமகள், புதுமைப் பித்தன் மற்றும் ராஜராஜன் போன்ற படங்களில் எம்.ஜி.ஆருக்கான அனைத்து பாடல்களையும் இவரே பாடியிருந்தார்.

1. நிலவோடு வான்முகில், இதயம் தன்னையே (ராஜராஜன் 1957)

2. எல்லை இல்லாத இன்பத்திலே – (சக்கரவர்த்தி திருமகள்)

3. உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா -(நாடோடி மன்னன் 1958)

4. வண்டு ஆடாத சோலையில் , ஒன்றல்ல இரண்டல்ல தம்பி (தாய் மகளுக்கு கட்டிய தாலி 1959)

5. சிரிப்பது சிலபேர், யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிள்ளை1961)

6. ஓடிவந்து மீட்பதற்கு (நான் ஆணையிட்டால்) – ஆலங்குடி சோமு இயற்றிய பாடல்

7. யாருக்கு யார் சொந்தம் என்பது (சபாஷ் மாப்பிளே)

8. ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் (நல்லவன் வாழ்வான்)

பிற ஆண் பாடகர்களுடன் பாடிய புகழ் பெற்ற பாடல்கள்:-

1. கண்ணன் வந்தான் (படம்: ராமு)(உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன்)

2. தேவன் வந்தான் (படம்: குழந்தைக்காக) (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன் மற்றும் பி. பி. ஸ்ரீனிவாஸ்)

3. வெள்ளிப் பனிமலையின் (படம்: கப்பலோட்டிய தமிழன்) (உடன் பாடியவர்: திருச்சி லோகநாதன்)

4. இரவு நடக்கின்றது (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன்)

5. ஆயிரம் கரங்கள் நீட்டி (படம்: கர்ணன்) (உடன் பாடியவர்: டி. எம். சௌந்திரராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ்)

விருதுகள்:-

சங்கீத நாடக அகாதமி விருது, 1980

இசைப்பேரறிஞர் விருது, 1984

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top