Home » பொது » எம்.ஜி.ஆர்!!!
எம்.ஜி.ஆர்!!!

எம்.ஜி.ஆர்!!!

எம். ஜி. ராமச்சந்திரன்

மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். அவருடைய வாழ்க்கையில், நடிப்பும், அரசியலும் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. அவருடைய இளமைக்காலத்திலேயே, பல நாடக குழுக்களில் பிரபலமாக திகழ்ந்தார். அவர் காந்தியின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் மிகவும் பற்றுடையவராக இருந்ததால், அவருடைய இளம்வயதிலேயே இந்திய நேஷனல் காங்கிரஸில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள், தமிழ் திரையுலகை முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆதிக்கம் செய்தார். பின்னர், திமுக அரசியல் கட்சியுடன் கைகோர்த்தார். ஒரு தமிழ் நடிகர் என்ற மகத்தான புகழ் பெற்றிருந்தாலும், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் சமமான வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையையும் அனுபவித்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டப்பின், அவர் தனது சொந்தக் கட்சியான அ.தி.மு.கவை உருவாக்கினார்.

மக்கள் எம்.ஜி.ஆரை மிகவும் நேசிக்க முக்கிய காரணம், அவர் ஏழை மக்களின் இதய தெய்வமாக விளங்கினார். நாட்டின் மாநில முதலமைச்சர் நாற்காலியை ஆக்ரமித்த, முதல் இந்திய திரையுலக பிரமுகர் என்ற பெருமை எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களையே சேரும். ஒரு நடிகராக இருந்து அரசியலில் பதவி அடைந்த போதும், அவர் ஏழைகளின் தோழனாகவும், இல்லாதோருக்குக் கொடையாளியாகவும் விளங்கினார். தனது மனிதநேய பண்புகளால் அன்பு செலுத்தியதால் பெருமளவில் பிரபலமானார்.

பிறந்த தேதி:  ஜனவரி 17, 1917
பிறந்த இடம்:  நாவலப்பிட்டி, கண்டி, இலங்கை
இறந்த தேதி:  டிசம்பர் 24, 1987
தொழில்:  நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி
குடியுரிமை:  இந்தியா

குடும்ப பின்னணி மற்றும் ஆரம்பகால வாழ்க்கை

கேரள பெற்றோருக்கு பிறந்தவர், மருதூர் கோபாலன் ராமச்சந்திரன். அவருடைய பெற்றோரான மேலக்காடு கோபால மேனன் மற்றும் மருதூர் சத்யபாமா அவர்கள், கேரளாவின் பாலக்காடு பகுதியில் வடவனூர் பகுதியில் வசித்து வந்தனர். ஆனால், எம்.ஜி.ஆரின் தந்தை வழக்கறிஞர் என்பதால், அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் இருந்தது. இதன் காரணமாக அவர் கேரளாவிலுள்ள தனது சொந்த வீட்டில் இருந்து தப்பி ஓடினார். அவர் இலங்கை சென்று வாழ்க்கையைத் தொடங்கினார். அங்கு தான் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் பிறந்தார்.

மேலக்காடு கோபால மேனன் அவர்கள் ஒரு பிராமண விதவையுடன் தொடர்பு வைத்திருந்ததால், அவர் கேரளாவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக, அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கேரள சமூகத்தின் மரபுகளை பின்பற்றி, சக மனிதர்கள் அவருக்கு ‘ஸ்மார்தவிசாரம்’ செய்து அவரை ஊரை விட்டு ஒதுக்கிவைத்தனர். அவருடைய குடும்பமும் இதை ஏற்றுக்கொண்டது. இதன் காரணமாகவே அவர் சிலோனுக்குத் தப்பி ஓடினார். மேலக்காடு கோபால மேனன் அவர்கள், சிலோனில் மருதூர் சத்யபாமா என்பவரை திருமணம் செய்தார்.

அங்கு அவர்களுக்கு ஜனவரி 17, 1917 ஆம் ஆண்டு, எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் மகனாக பிறந்தார். எம்.ஜி.ஆரின் பிறந்த இடம் இன்றும் இலங்கையில் இருக்கிறது. தனது குழந்தை பருவ தொடக்கத்தில் இருந்தே, எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள், இந்து மதத்தைத் தீவிரமாகவும், உறுதியாகவும் நம்பினார்.  இந்துக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தெய்வமாக இருக்கும் முருகக்கடவுளைத் தனது ஆஸ்தான கடவுளாக எண்ணித் தீவிரமாக வழிபாடு செய்து வந்தார்.

திரையுலக வாழ்க்கை

எம்.ஜி.ஆர் தனது இளமைப்பருவத்திலேயே, நடிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவர் சிறுவனாக இருந்த போதே அவரது தந்தை இறந்துவிட்டார். அவரது தந்தையின் மறைவுக்குப் பின், குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாமல், பணம் சம்பாதிக்கும் நிர்பந்தம் ஏற்பட்டதால், இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.

பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில், தனது  பெயரை முதல்முறையாக ‘ஒரிஜினல் பாய்ஸ்’ என்ற நாடக குழுவில் பதிவு செய்தார். அவருடைய சகோதரரும் இந்த குழுவில் உறுப்பினராக இருந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு, நாடகத்தில் நடிப்பதை விட்டுவிட்டு, 1935ல் தமிழ் திரையுலகில் சேர்ந்தார்.

1936ல் ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் துணை கதாபாத்திரமாக முதல்முறையாக நடித்தார். 1940களில் தான் அவருக்கு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. தமிழ் சினிமாவிலேயே இதுவரை பார்த்திராத வர்ததகரீதியான ரொமாண்டிக் மற்றும் ஆக்க்ஷன் ஹீரோ என்று அவரை உருவாக்கிய படம், ‘இராஜகுமாரி’. இது கலைஞரால் எழுதி உருவாக்கப்பட்டது. 1947ல், இராஜகுமாரி’ திரைப்படம் தமிழக திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

பின்னர், தமிழ் திரையுலகம் மூன்று தசாப்தங்களுக்கும் எம்.ஜி.ஆரை முழக்கமிட்டனர். 1956ல், எம்.ஜி.ஆர், திரையுலகில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் உருவெடுத்தார். அவர் இயக்கிய முதல் படமான ‘நாடோடி மன்னன்’, தமிழ்நாட்டில் பல திரையரங்குளில் ஓடி, பெரிய வெற்றிப்பெற்று, தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றது.  ஒரு இயக்குனராக தனது முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் இரண்டு படங்களை இயக்கி நடிக்கவும் செய்தார்.

அவை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ மற்றும் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ ஆகும்.  1971ல் வெளியான ‘ரிக்க்ஷாக்காரன்’ படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததால், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு, சிறந்த நடிகருக்கான ‘தேசிய விருது’ கிடைத்தது.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

  • 1960ல், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் இந்தியாவின் ‘பத்மஸ்ரீ விருதுக்காகத்’ தேர்வு செய்யப்பட்டார்.  ஆனால், அவர் அரசாங்கத்தின் பற்றற்ற நடத்தையின் காரணமாக அதை ஏற்க மறுத்துவிட்டார். ஏனென்றால், விருதில் பாரம்பரிய ஹிந்தி வார்த்தைகளுக்கு பதிலாக தனது தாய்மொழியான தமிழில் இருக்க வேண்டுமென்று அவர் விரும்பினார்.
  • ‘ரிக்க்ஷாக்காரன்’ படத்திற்காக, தனது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 1972ல், எம்.ஜி.ஆர் பெற்றார்.
  • சென்னை மற்றும் உலக பல்கலைக்கழகமும் அவருக்கு ‘முனைவர் பட்டம்’ வழங்கி சிறப்பித்தது.
  • தமிழ்நாட்டின் சமுதாயத்தின் நன்மைக்காக அவருடைய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக அவர் இறந்த பிறகு 1988ல் ‘பாரத ரத்னா விருதை’ வழங்கப்பட்டது.

தனிப்பட்ட வாழ்க்கை

எம்.ஜி.ராமச்சந்திரன் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் இரண்டு மனைவிகள் நோயின் காரணமாக இறந்துவிட்டனர். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அவரது மூன்றாவது மனைவியான ஜானகி ராமச்சந்திரன் அவர்கள் அ.இ.அ.தி.மு.கவின் பொறுப்பை ஏற்றார்.

இறப்பு

எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுக்கு சிறுநீரக பிரச்சினைகள் இருந்தது. சிறுநீரகக் கோளாறு காரணமாக 1984ஆம் ஆண்டு அக்டோபரில், அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் உள்ள டவுன்ஸ்டேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதே ஆண்டு, சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொண்டார். இறுதியாக 1987ல் நோய்வாய்ப்பட்டார். டிசம்பர் 24ஆம் தேதி, 1987ல் இயற்கை எய்தினார். எம்.ஜி.ஆருடைய மரணம் தமிழ்நாட்டில் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கட்டுக்கடங்காத மக்களையும், அதிகளவில் போராடி உயிரிழந்த உணர்ச்சித் தமிழர்களையும் நிர்வகிக்க தமிழக அரசும், போலீஸ் அதிகாரிகளும் கடுமையாக போராடினர். அவரது மறைவுக்குப் பின், அஇதிமுக இரண்டு பிரிவுகளாக பிரிந்தது.

ஒன்று அவரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலும், மற்றொன்று ஜே.ஜெயலலிதா தலைமையிலும் தனித்தனி கட்சிகள் உருவாகின. அவரது ‘சத்யா ஸ்டுடியோ’ இப்போது ஒரு பெண்கள் கல்லூரியாக உள்ளது. சென்னை டி.நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டை தமிழக அரசு நினைவு இல்லமாக மாற்றி பராமரித்து வருகிறது.

காலவரிசை

1917 : எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் ஜனவரி ம் தேதி 17 பிறந்தார்.

1936 : தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

1947 : அவரின் முதல் வெற்றிப்படமான ‘ராஜகுமாரி’ வெளியானது.

1953 : அரசியல் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்தார்.

1956 : முதல் முறையாக திரைப்பட இயக்குனராக மாறினார்.

1960 : பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்து விட்டார்.

1962 : மாநில சட்ட மன்றத்தின் உறுப்பினரானார்.

1967 : தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.

1967: எம். ராதாவால் கழுத்தில் சுடப்பட்டார்.

1969 : திமுக பொருளாளராக மாறினார்.

1972 : தனது சொந்த அரசியல் கட்சியான, அ.தி.மு.கவை உருவாக்கினார்.

1972 : ‘ரிக்க்ஷாக்காரன்’ படத்திற்காக தேசிய விருதை வென்றார்.

1977 : முதல் முறையாகவும், மூன்று முறை தொடர்ந்தும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்.

1984 : சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்..

1987 : டிசம்பர் 24ஆம் தேதி,1987ல் இறந்தார்.

1988 : இறப்பிற்கு பின், பாரத ரத்னா விருதை அரசு அவருக்கு வழங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top