உலகின் 10 புகழ்பெற்ற கட்டிடங்கள் – தெரிந்துகொள்வோம்
நமது உலகில் எவ்வளவோ ஆச்சர்யம் ஊட்டக்கூடிய பிரம்மாண்டமான கட்டிடங்கள் உள்ளன. அவற்றுள் உலகப்புகழ்பெற்ற முதல் 10 கட்டிடங்கள் எவை என்று உங்களுக்குத் தெர்யுமா?
இஸ்தான்புல் நகரில் ஹாகியா சோஃபியா எனும் சர்ச் 4 ஆம் நூற்றாண்டில், கான்ஸ்டன்டைன் அரசாட்சியாளரால் 360 ல் கட்டப்பட்டது.
லொவ்ரி அரண்மனை ஃப்ரான்சில் 12 ஆம் நூற்றாண்டில் 2 ஆம் ஃபிலிப் எனும் மன்னனால் உருவானது. இது இப்போது பொதுமக்கள் காணும் அரண்மனையாகத் திகழ்கிறது.
புர்ஜ் அல் அரபு எனும் விடுதி இன்று உலகிலேயே 2 வது பணக்கார விடுதியாகத் திகழ்கிறது. இது அட்கின்ஸ் என்பவரால் 1994 ல் உருவாக்கப்பட்டது.
சிட்னி ஒபேரா மாளிகை உட்சன் எனும் கட்டிட தொழில் நுட்பவாதியால் 1955 ல் உருவாக்கப்பட்டது.
எம்பயர் ஸ்டெட் பில்டிங் எனும் கட்டிடம் 1930ல் வில்லியம் லாப் என்பவரால் உருவாக்கபட்டு, உலகிலேயே மிக உயரமான கட்டிடம் என்று 1930 களில் பெயர் எடுத்தது.
தாஜ் மஹால் கட்டிடம் 20,000 வேலையாட்கள் மூலமாக 1632 ல் தொடங்கி 1648 ல் கட்டி முடிக்கப்பட்டது.
ஈஃபிள் டவர், ஃபிரான்சில் குஸ்டவே ஈஃபிள் எனும் பொறியாளரால் 1887 முதல் 1889 ஆம் ஆண்டு வரை கட்டப்பட்டது.
பிக் பென் எனும் பெரிய மணிக்கூண்டு 1858 ஆம் ஆண்டு புகின் என்பவரால், வெஸ்ட்மின்ஸ்டெர் என்ற அரண்மையை சீர்செய்யும் பொழுது உருவாக்கப்பட்டது.
கொலொஸ்ஸியம் எனும் பெரிய மைதான மாளிகை கி.பி. 70 ல் தொடங்கி கி.பி. 80 ல் வேஸ்பியான் எனும் அரசனால் உருவானது.
பிரமிட்ஸ் எனப்படும் கட்டிடம் உலகிலேயே மிக பழைமயான ஒன்றாக திகழ்கிறது.இது குஃபு மற்றும் அவரின் சந்ததிகளால் கி.மு 2551 வாக்கில் கட்டப்பட்டது.