உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் தன்னை பிற எதிரி விலங்குகளிடம் இருந்து தற்காத்து கொள்வதற்கு சில சிறப்பு பண்புகள் இருக்கும். பொதுவாக எதிரி விலங்கினங்கள் உணவிற்காக தன்னைவிட பலம் குறைந்த விலங்குகளை கொன்று உண்ணும், ஆனால் பலம் குறைந்த உயிரினத்திற்கும் சில சிறப்பு பண்புகள் இருக்கும் அதன் மூலம் முடிந்தளவு தன்னை தற்காத்து கொள்ளும். அதில் நாம் அறிந்திராத சில சிறப்பு பண்புகளை கொண்ட விலங்கினங்கள் பற்றி இந்த பதிவில்…..
Malaysian exploding ant (தற்கொலை படை எறும்புகள்)
இந்த உயிரின எறும்புகளின் கூடுகளில் உள்ள எறும்புகளை தாக்க வரும் பிற உயிரினங்களை தாக்குவதற்காக படை வீர எறும்புகள் வெளியேறி எஹ்டிரிகளை தாகும் முடியாத பட்சத்தில் தனது உடலை வெடிக்க செய்து வயிற்றில் உள்ள விஷத்தை வெளியேற்றி எதிரிகளை கொல்லும்.
Sea cucumber (கடல் வெள்ளரி)
கடல் வெள்ளரியானது தன்னை தாக்க வரும் எதிரிகளை தாக்கும் முறை மிகவும் வித்தியாசமானதாகும். அதாவது எதிரிகளை சம்மாளிக்க தனது குடலை வெளியேற்றிவிடும், வயிற்றில் இருக்கும் ஒருவிதமான விஷத்தை வெளியேற்றி எதிரிகளை நிலைகுலைய செய்துவிடும்.
Hagfish
பசுபிக் கடலில் காணப்படும் இந்த மீன் தன்னை தாக்க வரும் எதிரி விலங்கினத்தை தனது உடலில் உள்ள துவாரங்கள் வழியாக ஒருவிதமான கொலை போன்ற திரவத்தை சுரந்து தன்னை தானே சுற்றிகொள்ளும். அதனை பார்த்து அருவருப்பு அடைந்து எதிரி விலங்குகள் ஓடிவிடும்.
Hairy frog
இந்த தவளையானது தனது கால் எலும்பையே உடைத்து பூனையின் நகத்தை போன்று தனது காலில் உருவாக்கிக்கொள்ளும். இதன் மூலம் எதிரிகளை பயமுறுத்தி துரத்தி விடும்.
பார்பதற்கு அமைதியாக காணப்படும் இந்த வண்டானது, தன்னை தாக்க வரும் எதிரி உயிரினனகளை தனது உடலில் சுரக்கும் நச்சு கெமிக்கல் தனது பின்புறத்தின் வழியாக பீச்சியடித்து கொன்று விடும், அல்லது மயக்கமடைய செய்து விடும்.
Opossum
இந்த விலங்கானது தன்னை தாக்க வரும் விலங்கினங்கள் முன்னால் இறந்தது போன்று நாடகமாடி ஏமாற்றிவிடும். (படத்தை பார்த்தால் புரியும்)
இந்த பூச்சியின குட்டிகளை (லார்வாக்கள்) எதிரியின விலங்குகளிடம் இருந்து பாதுகாத்து கொள்ள தனது கழிவினை குட்டியின் மீது பூசி விடும் இதனால் ஏற்படும் வாடையாலும் அதன் கழிவில் உள்ள விஷதன்மையாலும் மற்ற விலங்கினங்கள் அதனை உண்ணாமல் (தாக்காமல்) ஓடிவிடும்