Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » மர்மம்: பரிணாமத்தின் “தொலைந்த தொடர்புகள்”

மர்மம்: பரிணாமத்தின் “தொலைந்த தொடர்புகள்”

தொலைந்த தொடர்புகளும் பரிணாமத் தொடர்ச்சியும்!

தற்போது நிகழும் உயிரியல் நிகழ்வுகளை ஆராயும் சில/பல ஆய்வுகள் மாதிரி இல்லாம, பரிணாம ஆய்வானது பின்னோக்கி செல்லும் தன்மையுடையது. உதாரணமாக, ஒரு உயிரனு எப்படி செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்ய, தேவைப்படும்போது ஒரு உயிரனுவை எடுத்து தத்ரூபமாக மைக்ராஸ்கோப் மூலமாக பார்த்துக்கொண்டே ஆராய முடியும்.

ஆனால், ஒரு அமீபாவோ இல்லை அனக்கோண்டாவோ எப்படி உருவானது அல்லது அதன் முந்தைய உயிரினம்/மூதாதையர் உயிரினம் எப்படி புதிய உயிராக மாறியது என்னும் பரிணாமக் கேள்விக்கான விடையை பின்னோக்கி சென்றால்தான் முடியும். ஆனால், துரதிஷ்டவசமாக செவ்வாய் கிரகம் வரையெல்லாம் சென்றுவிட்ட மனிதனுக்கு இன்னும் காலத்தில் பின்னோக்கிச் செல்லும் சூத்திரம் மட்டும் கைவரவில்லை!

அதனால, பரிணாமம் சார்ந்த ஆய்வுகள் மொத்தமுமே நிலம், பனி, கடல், மலை போன்ற பல்வேறு இடங்களில் புதையுண்ட மனிதன் உட்பட்ட பண்டைய விலங்குகளின் எஞ்சிய உடல் பாகங்களான, தலை, முழு எழும்புக்கூடு, கை/கால் போன்ற உடல் பாகங்களை அகழ்வாராய்ச்சி மூலம் தோண்டியெடுத்து, அப்பாகங்களின் பல்வேறு தன்மைகளை தற்போதுள்ள விலங்குகளுடன் ஒப்பிட்டு, ஒப்புமையுள்ள/நேர்மாறான குணாதிசியங்களை கணித்து உருவாக்கப்பட்டதே பரிணாம ஆய்வறிக்கை களஞ்சியம்!

ஆர்கியாப்டெரிக்ஸ் (Archaeopteryx), ஒரு டினோசர்-பறவைக் கலவை!

டினோசர்-பறவை ஆர்கியாப்டெரிக்ஸ்

இந்தக் களஞ்சியத்துல, பரிணாம ஏனியில இருக்குற ஒரு விலங்குக்கும், அதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட மற்றொரு விலங்குக்கும் இடைப்பட்ட குணாதிசீயங்களைக் கொண்டு சில விலங்குகள் இருக்கும். இவ்விலங்குகளுக்கு, முற்றிலும் வேறுபட்ட இருவிலங்குகளின் பல்வேறு உடல் பாகங்கள் மற்றும் குணாதீசியங்கள் இருக்கும். இந்த வகையான விலங்குகளைத்தான் பரிணாமத்தில் “தொலைந்த தொடர்புகள்” என்று சொல்வார்கள்!

உதாரணமாக, நிலவாழ் ஊர்வன விலங்கான டினோசர்கள், நிலவாழ் பறப்பன விலங்கான பறவைகளாக உருமாறிய பரிணாம வளர்ச்சி நிலையில் உள்ள ஒரு வினோதமான விலங்குதான் ஆர்கியாப்டெரிக்ஸ் (Archaeopteryx). இது ஒரு ஊர்வன-பறப்பன கலவை விலங்கு! தீரோபாட் இன டினோசரின் பல குணாதிசியங்களையும், நிகழ்கால பறவைகளின் பல்வேறு குணாதீசியங்களையும் ஒன்றாக பெற்றிருந்தது ஆர்கியாப்டெரிக்ஸ்.

https://www.youtube.com/watch?v=ToMpqhTw9ko

இந்த விலங்கை டினோசரிலிரிந்து பறவை உருவானபோது இடைநிலையில் தோன்றிய விலங்குன்னு சொல்லி, “தொலைந்த தொடர்பு” (missing link) வரிசையில வச்சிட்டாங்க பரிணாமவியல் விஞ்ஞானிகள்! ஆனா, பிரச்சினையே இங்கேதான். ஏன்னா, பரிணாமக் களஞ்சியத்துல இந்த விலங்கு மாதிரியே, மத்த எல்லா பரிணாம வளர்ச்சி நிலைகள்லயும் இருக்குற பெரும்பாலான விலங்கினத்துக்கும் தொலைந்த தொடர்புகள் இருக்கு!
ஆனா கேள்வி என்னன்னா, உண்மையாவே இந்த விலங்குகள் தொலந்த தொடர்புகளா? அதாவது, நாம மேலே பார்த்த டினோசருக்கும் பறவைக்கும் இடையில/மத்தியில ஆர்க்கியாப்டெரிக்ஸ் அப்படீங்கிற ஒரே ஒரு விலங்குதான் இருக்குதா? வேறு விலங்குகள் இருக்க வாய்ப்பு இல்லையா? இப்படி சில/பல கேள்விகள் இன்னும் மர்மமாவே இருக்கு. அதைப்பத்தித்தான் இனிமே நாம கொஞ்சம் விளக்கமா பார்க்கப்போறோம்…..
47 மில்லியன் ஆண்டு வயதான இடாவும், மனிதப் பரிணாமமும்!

http://www.vivekabharathi.com/avanam/wp-admin/post.php?post=676&action=edit#
மனிதனுக்கும் குரங்குக்கும் இடையில் அல்லது குரங்குக்கும் அதற்க்கு சற்று முந்தைய உயிரனங்களான ஆடு/மாடு, புலி/சிங்கம் ஆகிய விலங்குகளுக்குமான இடைநிலை (தொலைந்த தொடர்புகள்?) விலங்குகளுக்கான தேடல் இன்னும் தொடர்ந்துக்கிட்டெதான் இருக்கு!
அந்தத் தேடல்களின் பயனாக, அவ்வப்போது சில புதைபொருள்கள் (ஃபாசில்/Fossils) கண்டுபிடிக்கப்பட்டு, அது மக்களின் பார்வைக்கும் மியூசியங்களில் வைக்கப்படுவது வழக்கம். அந்த வரிசையில கடந்த 2009 ஆண்டு மே மாதம், 47 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக நம்பப்படும், பூனை அளவுள்ள “இடா (Ida)” என்னும் குரங்கினத்துக்கும் முந்தைய விலங்கினம்/புதைபொருள், அமெரிக்காவின் நியூயார்க் நகர மியூசியத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது!
இந்த இடா இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புதைபொருள்களிலேயே மிகவும் பிரபலாமனதாகவும், சிறப்பானதாக கருதப்படுகிறது. காரணம்…..
நீண்ட வருடங்களாய் தேடப்பட்டு வந்த மனித/குரங்கு மூதாதையர் இவ்விலங்காகத்தான் இருக்க வேண்டும் என்று பெரும்பாலான உலக பரிணாமவியல் விஞ்ஞானிகள் கருத்துத்தெரிவித்திருக்கிறார்களே என்பதே!
இடாவின் 95% எலும்புகள் சிதைவுறாமல் முழுமையாக இருக்கிறது
இடாவின் வயிற்றுப் பகுதியும் முழுமையாக இருப்பதால், அது என்னென்ன உண்டிருக்கும் என்பதை ஆய்வு செய்து கண்டறிய முடியும்.
ஆக, இவையெல்லாம் சேர்ந்து இடாவின் மீதான ஆய்வுகளை மேற்கொள்ள உதவும்பட்சத்தில், மனிதனின் பரிணாமத்தை இன்னும் ஆழமாக ஆய்வு செய்து உண்மையை கண்டறிய முடியும் என்பது பரிணாம ஆய்வாளர்களின் நம்பிக்கை! இடா குறித்த மேலதிக விவரங்கள் இங்கே
தொலைந்த தொடர்புகள்; ஒரு பெயர்க்காரண சர்ச்சை!
எது எப்படியிருந்தாலும், தொலைந்த தொடர்புகள் அப்படீங்கிற பெயரில் பொதுமக்களுக்கும், கலைஞர்களுக்கும் ஒரு பெரிய ஈர்ப்பு இருந்தாலும், பரிணாமவியலாளர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் அது ஒரு குழப்பமாகவே இருக்கிறது. ஏன்னா, தொலைந்த தொடர்புகள்னு நாம குறிப்பிடுற இந்த விலங்கின புதைபொருள்கள் எல்லாம் இரு விலங்குகளுக்கு மத்தியிலான பரிணாம வளர்ச்சி/முன்னேற்றத்தை முழுமையாகச் சொல்லக்கூடியவையல்ல!
அதாவது, பரிணாம வளர்ச்சியானது பல்வேறு நிலைகளை கொண்டது. நாம் கண்டுபிடிக்கும் இடா மாதிரியான விலங்கு புதைபொருள்கள், “ஒரு விலங்கு மற்றொரு விலங்காக மாறும்போது (ஆயிரக்கணக்காண வருடங்களில்) உருவாகும் எத்தனையோ தற்காலிக விலங்குகளில் (transitional fossils) ஒன்றாக இருக்கலாமே தவிர, இடா மட்டுமே குரங்கு-மனிதப்பரிணாமத்தின் மூதாதையராக இருக்க முடியாது”! ஆக, இரு விலங்குகளுக்கு இடைப்பட்ட பல்வேறு விலங்குகளை கண்டறியும் வரை அந்த பரிணாம வளர்ச்சியினை முழுமையாக வரையறுத்துச் சொல்ல இயலாது என்கிறார்கள் பரிணாம ஆய்வாளர்கள்!
உதாரணத்துக்கு, “ஒரு குதிரைப் பந்தயத்தின் பல்வேறு நிமிடங்களில் எடுத்த புகைப்படங்களில் ஒரு சிலதை மட்டும் வைத்துக்கொண்டு, குதிரைப்பந்தயத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் என்னாயிற்று என்பதை கணிப்பது என்பது, எப்படி முடியாதோ அப்படித்தான் இந்த தொலைந்த தொடர்புகள் என அழைக்கப்படும் விலங்கு புதைபொருள்களைக்கொண்டு, ஒரு விலங்கு மற்றொரு விலங்காக பரிணமிப்பதை மிகச்சரியாக வரையறுத்துச் சொல்லமுடியாது!”
தொலைந்த தொடர்புகள் எனும் சொல்லாடல் குறித்த மற்றொரு கருத்து, fossilization எனப்படும் மணல்/பாறை/பனி/தண்ணீர் இப்படி ஏதோ ஒரு பொருளில் புதையுண்ட, விலங்கு/மனித உடல் பாகங்களின் இயற்கை முறையிலான பாதுகாப்பு என்பது மிக அரிதாக ஏற்படும் ஒரு இயற்க்கை நிகழ்வு! ஆக, புதையுறும் உயிரின உடல் பாகங்களும் அரிதானவையே. அப்படியிருக்க, பாதுகாக்கப்படும் உயிர்களும் ஒன்றிரண்டாகத்தான் இருக்குமென்பதால், பரிணாம வளர்ச்சி நிலையின் முழுமையும் பாதுகாக்கப்படுவதில்லை!
ஆக, இடா மனிதப் பரிணாம வளர்ச்சியின் பல்வேறு நிலைகளில் ஒன்றுதானே தவிர, குரங்கு/மனிதனை அதன் மூதாதையர் விலங்குடன் இணைக்கும் ஒரேயொரு தொலைந்த தொடர்பல்ல என்பதை கவனத்தில் கொள்வது அவசியம் என்கிறார்கள் பரிணாமவியல் விஞ்ஞானிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top