Home » பொது » இந்து, இஸ்லாம், கிருத்துவம் இவற்றிற்குள்ள மிகப்பெரிய ஒற்றுமை என்ன தெரியுமா?

இந்து, இஸ்லாம், கிருத்துவம் இவற்றிற்குள்ள மிகப்பெரிய ஒற்றுமை என்ன தெரியுமா?

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கட்டுரைக்குள் செல்வதற்கு முன் :

( நாட்டால்,இனத்தால்,மதத்தால்,ஜாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும்.
முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.)
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இன்றைய நிலையில் மிகப்பெரிய மதங்களாக கருத்தப்படுவது இந்து, இஸ்லாம், கிருத்துவம். இவற்றிற்குள் பல ஒற்றுமைகள் உள்ளது. இங்கே நான் சொல்லப்போவது ஒரே ஒரு ஒற்றுமை.

அந்த ஒற்றுமை சொல்வது மிகப்பெரிய மிக சூட்சுமமான உண்மை. இது சிலருக்கு தெரிந்திருக்கலாம்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அது என்ன ஒற்றுமை?

அதுதான் அ உ ம். இது அனைத்து மதங்களிலும் முக்கிய இடம் பெறுகின்றது. இது இல்லையேல் பிரபஞ்சமும் இல்லை , இந்த உயிரும் இல்லை என்பது சிலரின் கருத்து.

இது இந்து மதத்தில் ஓம் என்று அழைக்கப்படுகின்றது.
இது இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்தில் ஆமின் என்றழைக்கபடுகின்றது.

இந்த மதத்தில் ஓம் என்பது எதற்கும் முதிலில் உபயோகப்படுத்தப் படுகின்றது. இதேபோல் கிருத்துவம் மற்றும் இஸ்லாமில் ஆமின் என்பது எதற்கும் முடிவில் உபயோகப்படுத்தபடுகின்றது.

அ உ ம் என்பது மிகப்பெரிய ரகசியம் பொருந்திய உண்மையான ஒற்றுமை. இதை ஏன் அனைத்து மதங்களும் பயன் படுத்த வேண்டும்?

அனைத்தின் மூலம் இதுதான் எனபதை அவர்களின் முன்னோர்கள் உணர்ந்திருந்தனர் என்பதையே காட்டுகின்றது.

மூலமே ஒன்றாக இருக்கும் பொழுது
நான் வேறு நீ வேறு என்பது எப்படி சாத்தியம்?
என் கடவுள் வேறு உன் கடவுள் வேறு என்பது மூடத்தனம் அல்லவா?
11

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒரு சிறு கதை :

imgres

எங்கோ மிக தூரத்தில் ஒரு மலையையும் , மலை உச்சியில் ஒரு மரமும் அதற்க்கு பின் புறம் நிலவு ஒளியும்

பார்த்த மூவரின் மன ஓட்டங்கள் கீழே …………………………

1. இந்து என்று அழைக்கபட்டவன் அந்த மலையை அப்படியே சிவலிங்கமாகவும் ,

2. இஸ்லாமியன் என்று அழைக்கப்பட்டவன் அந்த நிலவு ஒளியை நபிகள் என்றும்,

3. கிறிஸ்துவன் என்று அழைக்கப்பட்டவன் அந்த மரத்தை கண்டு சிலுவை என்றும் ,

தங்கள் மதங்களில் கூறியபடி பிரார்த்தனை செய்து கொண்டார்கள்.

ஆனால் இங்கு மூவராலும் பார்க்க பட்ட விஷயங்கள் ஒன்றாக இருந்தாலும் , அவர்களுடைய அறிவில் அதிகம் எது புகுத்த பட்டதோ, அதுவாகவே அவர்கள் பார்த்தனர்……………….. ஆனால் உண்மை அந்த மூன்றும் அங்கு உள்ளது என்பதே நிஜம் .

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சிந்தியுங்கள் மக்களே…சிந்தியுங்கள்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top