Home » சிறுகதைகள் » நம்பிக்கை!!!
நம்பிக்கை!!!

நம்பிக்கை!!!

ஓசோவின் கதைகள்:

சூபி ஞானியான ஜுன்னேய்த்தின்மீது நம்பிக்கை வைத்திருந்த ஒரு சீடர்,ஒரு நாள் காட்டில் வேட்டை ஆடச் சென்றபோது,தூரத்தில்,ஜுன்னேய்த்தின் அருகில் முகத்திரை அணிந்த ஒரு இஸ்லாமியப்பெண் அமர்ந்து,

மதுவை ஒரு கோப்பையில் அவருக்காக ஊற்றிக்கொண்டிருப்பதைக் கண்டு ஜுன்னேய்த் ஒருஏமாற்றுக்காரர் என்ற முடிவுக்கு வந்தான். அவனைக் கவனித்த ஜுன்னேய்த் அவனை அருகே அழைத்தார். அவன் முகக்குறிப்பை அறிந்த ஜுன்னேய்த் அப்பெண்ணின் முகத்திரையை விலக்கினார்.

அப்பெண் அவரதுதாயார்.ஜுன்னேய்த் கூறினார்,”நீ கற்பனை செய்த அழகான பெண் எங்கே?உன்னால் ஒரு மூதாட்டியைக் கற்பனை செய்ய முடியுமா?இங்கே வந்து இந்தப் புட்டியை எடுத்து ருசித்துப்பார்.சுத்தமான தண்ணீர்.

மது அல்ல.புட்டி மட்டும் மது இருந்த புட்டி.”சீடன் மன்னிக்கும்படி அவர்காலில் விழுந்தான்.ஜுன்னேய்த் கூறினார்,”இது மன்னிப்புக்குரிய விஷயம் அல்ல,இது புரிந்து கொள்ளுதளுக்கான விஷயம்.உன்னிடம் உள்ள நம்பிக்கை வற்புறுத்தி ஏற்படுத்தப்பட்டது. நீ பிற சீடர்களைப்போல நடக்க முயற்சிக்கிறாய்.

கட்டாயத்தின் பேரில் உள்ள நம்பிக்கை இப்பொழுதோ,எப்பொழுதோ நிச்சயம் உடைந்து போகும். உனது அன்பு ஒரு முயற்சி.உண்மையான அன்பு ஒரு முயற்சியாக இருக்க முடியாது. நம்பிக்கை வலுக்கட்டாயமாக இருக்கக் கூடாது.இயற்கையாக வரும்போது அது அழகாக இருக்கும்.அப்போது அதை எதாலும் அழிக்க முடியாது.”

ஒரு அரசியல்வாதி சாகும் தருவாயில் நினைத்தார்,”நான் செய்த பாவங்களுக்குநரகத்திற்குத்தான் செல்ல வேண்டியிருக்கும்.”ஆனால் அவர் இறந்தவுடன் சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டார்.

அவருக்கு ஒரே வியப்பு.ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும் என்று நினைத்தார்.அங்கிருந்தவர்களிடம் கேட்டார்,”வாழ்நாள் முழுவதும் நான் நல்லசெயல்கள் எதுவும் செய்ததில்லை.எனக்கு எப்படி சொர்க்கம்…?”அவர்கள் சொன்னார்கள்,”வாழ்நாள் முழுவதும் நீ நரகத்தில் இருந்துவிட்டாய்.

அதனால் உனக்கு சொர்க்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.மேலும் நீ இருந்தது ஒரு நவீன நரகம்.இங்கு எங்கள் நரகம் எல்லாம் பழமையாகவே இருக்கிறது.இன்னும் இங்கே பழைய தண்டனைகளையே அளித்துக் கொண்டு இருக்கிறோம்.பூமியில் நீங்கள் அதையெல்லாம் நவீனமாக மாற்றிவிட்டீர்கள்.

உன்னை நரகத்தில் போட்டால் இது தான் நரகமா என்று எங்களைப் பார்த்து சிரிப்பாய்.அதனால் கடவுளுக்கே என்ன செய்வது என்று தெரியாமல் உன்னை சொர்க்கத்திற்கு அனுப்பச் சொல்லிவிட்டார்.”

மக்கள் இன்னும் நரகம் எங்கோ இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.நாம் வாழ்வதே நரக வாழ்க்கைதான்.இதை விடக் கொடிய நரகம் இன்னொன்று இருக்க முடியாது.ஆனால் நாம் வாழும் இடத்தை சொர்க்கமாக்குவதும் நம் கையில் தான் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top