தேசிய உழவர்கள் நாள்.
1783 – ஜோர்ஜ் வாஷிங்டன் இராணுவத்தளபதி பதவியில் இருந்து விலகினார்.
1914 – முதலாம் உலகப் போர்: அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்துப் படைகள் கெய்ரோவில் தரையிறங்கினர்.
1916 – முதலாம் உலகப் போர்: எகிப்தின் சினாய்க் குடாவில் கூட்டுப் படைகள் துருக்கியப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் வெற்றி பெற்றனர்.
1922 – தினசரி செய்திகளை வழங்கத் தொடங்கியது பிபிசி எனப்படும் பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகம்.
1947 – முதலாவது டிரான்சிஸ்டர் பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
1948 – முன்னாள் ஜப்பானியப் பிரதமர் Hideki Tojo -வும் ஆறு ஜப்பானிய ராணுவத் தலைவர்களும் தோக்கியோவில் தூக்கிலிடப்பட்டனர். மனுக்குலத்துக்கு எதிராக அவர்கள் இழைத்த கொடுமைகளுக்காக அந்தத் தண்டனை.
1954 – முதலாவது மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மேற்கொள்ளப்பட்டது.
1958 – டோக்கியோ கோபுரம், உலகின் மிகப்பெரிய இரும்பினாலான கோபுரம், திறக்கப்பட்டது.
1972 – தென்னமெரிக்காவில் ஆண்டீஸ் மலைத்தொடரில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிர் தப்பிய 16 பேர் 73 நாட்களுக்குப் பின்னர் காப்பாற்றப்பட்டனர்.
1979 – சோவியத் படையினர் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலைக் கைப்பற்றினர்.
1986 – எங்கும் தரையிறங்காமல் முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த வொயேஜர் விமானம், டிக் ரூட்டன், ஜீனா யேகர் ஆகிய விமானிகளுடன் கலிபோர்னியாவில் தரையிறங்கியது.
1990 – 88% சிலொவேனிய மக்கள் யூகொஸ்லாவியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
2005 – சாட் சூடானுடன் போரை அறிவித்தது.
– See more at: http://www.tamilnews.cc/news.php?id=49446#sthash.BF8ZzIIK.dpuf