* துயரம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இன்பத்தை யாராலும் ரசிக்க முடியாது.ஒரு மனிதன் மற்றொரு மனிதனை வாழ்வில் முந்திச் சென்றாலோ, வெற்றியைப் படைத்தாலோ அதற்குக் காரணம் விதியோ, அதிர்ஷ்டமோ அல்ல. அவனது உழைப்புத்தான் காரணம்.
* பசி, வறுமை ஆகிய கொடிய நோய்களுக்கு உழைப்பு, வியர்வை ஆகியவைகளே மிகச் சிறந்த மருந்துகள்.
* எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால் இலட்சியவாதிகளான நாம் சரியாக இருக்கிறோம் என்று அர்த்தம்.
* வேற்றுமை பாராட்டாமல் மனித இனத்திற்கு உழைக்கும் உணர்ச்சி எமது உள்ளத்தில் உதிக்காத வரையில் இரைதேடி, இனம் பெருக்கி, உண்டு, உறங்கி வாழ்கின்ற மனித மிருகங்களே நாம்.
* மௌனமாக இருப்பதன்மூலம் மற்றவர்களுடைய குறைகளை நம்மால் அறிந்துகொள்ள முடியும். அதே சமயம் நம்மிடமிருக்கும் குறைகளை மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைத்து வைக்கவும் முடியும்.
* பிடிவாதமும் முயற்சியும் இருந்தும் “அறிவு” இல்லாவிட்டால் ஒருவன் தன் சாதனையை நிலையாக வைத்திருக்க முடியாது. அது வேறொருவருடையதாகவே ஆகிவிடும்.
* சத்தியம் தனியாகப் பயணம் செய்யும், பொய்யிற்குத்தான் துணை வேண்டும்.
* துயரம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இன்பத்தை யாராலும் ரசிக்க முடியாது.
* நாம் வாங்கிய கடனாகிய சுமையோடு காலையில் துயிலெழுவதைவிட கடன் வாங்காமல் பட்டினியோடு இரவில் உறங்கச் செல்வது மேல்.