159 பேர் பலி.
1729 : அமெரிக்காவின் மிசிசிப்பியில் குழந்தைகள், பெண்கள் உட்பட 239 பிரெஞ்சு இன மக்களை நட்சே இந்தியர்கள் கொன்றனர்.
1821 : ஸ்பெய்னிடம் இருந்து பனாமா பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது.
1843 : ஹவாய் இராச்சியத்தை ஐக்கிய இராச்சியம்இ பிரான்ஸ் ஆகியன
சுதந்திரமடைந்த தனி நாடாக அங்கீகரித்தன. பின்னர் இது அமெரிக்காவின் ஒரு மாநிலமாகியது.
1905 : ஐரிஷ் தேசியவாதி ஆர்தர் கிறிபித், அயர்லாந்தின் விடுதலைக்காக சின்
ஃபெயின் என்ற அரசியல் கட்சியை உருவாக்கினார்.
1942 : அமெரிக்காவின் மசாசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 491 பேர் உயிரிழந்தனர்.
1943 : இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியையும், ஜப்பானையும் ஒடுக்குவது பற்றி, அமெரிக்க ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில், ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் ஆகிய மூவரும் டெஹ்ரானில் சந்தித்துப் பேசினார்கள்.
1944 : இரண்டாம் உலகப் போர்: அல்பேனியா அல்பேனியப் பார்ட்டிசான்களினால் விடுவிக்கப்பட்டது.
1958 : சாட்இ கொங்கோ குடியரசு, காபோன் ஆகியன பிரெஞ்சு ஆட்சியின் கீழ் சுயாட்சி பெற்றன.
1960 : பிரான்ஸிடமிருந்து மௌரிட்டானியா சுதந்திரம் பெற்றது.
1964 : நாசா செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது.
1975 : போர்த்துக்கல்லிடம் இருந்து சுதந்திரம் பெறுவதாக கிழக்குத் திமோர்
பிரகடனம் செய்தது.
1979 : நியூஸிலாந்து விமானமொன்று அந்தார்ட்டிக்காவின் எரெபஸ் மலையில்
மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 257 பேரும் கொல்லப்பட்டனர்.
1980: ஈரான் ஈராக் யுத்தத்தில் ஈராக்கிய கடற்படையின் பெரும் பகுதி ஈரானிய
கடற்படையினரால் அழிக்கப்பட்டது.
1987 : தென்னாபிரிக்காவின் விமானமொன்று இந்து சமுத்திரத்தில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 159 பேரும் கொல்லப்பட்டனர்.
1989 : பனிப்போர்: செக்கஸ்லோவாக்கியாவின் தனியாதிக்க உரிமையை
விட்டுத்தருவதாக அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.
1990 : ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சர் மார்கரெட் தாட்சர் தனது பதவியை விட்டு விலகினார்.
1990 : சிங்கப்பூர் பிரதமர் பதவியிலிருந்து லீ குவான் யூ விலகினார். கோ சொக்
டொங் புதிய பிரதமரானார்.
1991 : ஜோர்ஜியாவிடம் பிரிவதாக தெற்கு ஒசேத்தியா பிரகடனம் செய்தது.
1994 : ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு எதிராக நோர்வே மக்கள் வாக்களித்தனர்.
2006 : நாசாவின் நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது.