1272 – மூன்றாம் ஹென்றி நவம்பர் 16 இல் இறந்ததையடுத்து அவனது மகன் எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னன் ஆனான்
1783 – பாரிசில் Francois Pilatre de Rosier என்பவரும் Marquisd Arlandes என்பவரும் வெப்பக் காற்று நிரப்பப்பட்ட பலூனில் முதன்முதலாக பறந்து காட்டினார்கள்.
1789 – வட கரொலைனா ஐக்கிய அமெரிக்காவின் 12வது மாநிலமாக இணைக்கப்பட்டது.
1791 – நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சு இராணுவத்தின் தளபதியானான்.
1877 – ஒலியைப் பதியவும் கேட்கவும் உதவக்கூடிய போனோகிராஃப் என்ற கருவியைத் தாம் கண்டுபிடித்ததாக தோமஸ் எடிசன் அறிவித்தார்.
1894 – சீனாவின் மஞ்சூரியாவில் ஆர்தர் துறைமுகத்தை ஜப்பான் கைப்பற்றியது.
1905 – ஆற்றலுக்கும் திணிவுக்கும் இடையேயான தொடர்பை விளக்கும் ஆய்வுக் கட்டுரையை அல்பேர்ட் ஐன்ஸ்டைன் வெளியிட்டார்.
1920 – டப்ளினில் காற்பந்துப் போட்டி நிகழ்வொன்றில் பிரித்தானியப் படையினர் சுட்டதில் 14 ஐரிஷ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1942 – அலாஸ்கா நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
1947 – இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. “ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையுடன் வெளியிடப்பட்ட முதல் அஞ்சல் தலையின் விலை மூன்றரை அணா.
1962 – சீன மக்கள் விடுதலை இராணுவம் இந்தோ-சீனப் போரில் போர் நிறுத்தம் செய்வதாக ஒருதலைப் பட்சமாக அறிவித்தது.
1963 – பாரதத்தின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை நைக்-அபாச்சி (Nike Apache) ஏவப்பட்டது.
1969 – முதலாவது ஆர்ப்பநெட் (ARPANET) தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.
1969 – ஓக்கினாவா தீவை 1972 இல் ஜப்பானியரிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சனுக்கும் ஜப்பான் பிரதமர் ஐசாக்கு சாட்டோவுக்கும் இடையில் வாஷிங்டனில் கையெழுத்திடப்பட்டது.
1971 – வங்காள தீவிரவாதக் குழுவான முக்தி பாஹினியின் உதவியுடன் இந்திய படைகள் கரிப்பூர் என்ற இடத்தில் பாகிஸ்தான் படைகளைத் தோற்கடித்தன.
1990 – புலிகளின் குரல் வானொலி தொடங்கப்பட்டது.
1990 – மாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல் ஆரம்பமானது.
1995 -பிரான்ஸ் நான்காவது முறையாக நிலத்தடி அணுவெடிச் சோதனையை நடத்தியது.
– See more at: http://www.tamilnews.cc/news.php?id=47517#sthash.xMKKbjaa.dpuf