1511: பிரான்ஸுக்கு எதிராக ஸ்பெய்னும் இங்கிலாந்தும் கூட்டுச்சேர்ந்தன.
1558: இங்கிலாந்தில் எலிஸபெத் யுகம் ஆரம்பம். மகாராணியார் முதலாம் மேரி இறந்தபின் அவரின் சகோதரரி முதலாம் எலிஸபெத் ஆட்சிக்கு வந்தார்.
1800: அமெரிக்க நாடாளுமன்றம் முதல் தடவையாக வாஷிங்டன் டி.சியில் கூடியது.
1831: கொலம்பியாவிலிருந்து ஈக்குவடோரும் வெனிசூலாவும் பிரிந்தன.
1869: மத்தியத்தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் சுயஸ் கால்வாய் திறந்துவைக்கபப்ட்டது.
1903: ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி போல்ஷ்விக் (பெரும்பான்மை) மேன்ஷ்விக் (சிறுபான்மை) என இரு குழுக்களாகப் பிரிந்தது.
1922: ஒட்டோமான் இராஜ்ஜியத்தின் முன்னாள் மன்னர் சுல்தான் 6 ஆம் மெஷ்மெத் இத்தாலியில் தஞ்சம்புகுந்தார்.
1933: சோவியத் யூனியனை அமெரிக்கா அங்கீகரித்து.
1969: ஆயுதக்குறைப்பு தொடர்பாக அமெரிக்காவும் சோவியத் யூனியனும் ஹெல்சிங்கியில் பேச்சுவார்த்தை நடத்தின.
1970: சோவியத் யூனியனின் லூனாகோட் -1 எனும் ரோபோ சந்திரனின் தரையில் இறங்கியது. மற்றொரு கோளில் அல்லது உபகோளில் தரையிறங்கிய முதலாவது ரோபோ இதுவாகும்.
1970: டக்ளஸ் ஏங்கல்பர்ட் என்பவர் முதலாவது கணினி மௌஸுக்கு காப்புரிமை பெற்றார்.
1997: எகிப்தில் யாத்திரிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 62 பேர் பலி.