உண்மையைச் செய்ய முயற்சி செய். அப்பொழுது
உன் தகுதியை உடனே அறிந்து கொள்வாய்.
-கதே
பிறருடைய பழிச்சொல்லுக்கு விடையளிக்க வேண்டுமா?
ஆம் எனில் உன் கடமையைச் செய்துவிட்டு மௌனமாய்
இருந்துவிடு, அதைவிடச் சிறந்த விடை கிடையாது.
-வாஷிங்டன்
செய்து முடிக்கப்பட்ட கடமை, நம்பிக்கைக்குத் தெளிவையும்
உறுதியையும் அளிக்கவல்லது. ஆகவே நம்பிக்கைக்கு பலம்
அளிப்பது கடமையே.
-ட்ரைடன் எட்வர்ட்ஸ்
தீமைகளை விலக்குவது என்பதைக் கடமையாகக்
கொள்ளுதல் நன்மைகளைச் செய்வதற்குச் சமம்.
-காந்தியடிகள்
கடமையைச் செய்ய நேரத்தைக் கடத்தாதே.
அரிய வாய்ப்பு பறந்துவிடும்.
-லாங்ஃபெல்லோ
கடமை ஆற்றும்போது குறுக்கிடும் உன் விருப்பத்தைக்
கூடத் தியாகம் செய்.
-எச். மூர்
சிறு கடமையில் கூடக் கருத்தாயிருத்தல் மகிழ்ச்சியான
வாழ்க்கைக்கு மிகச் சிறந்த வழி.
-ஃபேபர்
கடமைகளை எந்த ஓர் ஆணும், பெண்ணும் தேர்ந்தெடுக்க
முடியாது. ஏனெனில் அவர்களால் அவர்களது தாய் தந்தையரையும்
தேர்ந்தெடுக்க முடியாது.
-ஜி.எலியட்
நம்மால் புறக்கணிக்கப்படும் ஒவ்வொரு கடமையும் நாம்
தெரிந்துகொள்ளத் தவறிய ஓர் உண்மையைப் புலப்படுத்தும்.
-ரஸ்கின்
உன் முன் தோன்றும் முதல் கடமையை உடனே செய்.
அடுத்து நீ செய்ய வேண்டிய கடமை உனக்குத் தெளிவாகப்
புலப்படும்.
-கார்லைல்