கீரைகளில் இதயபலத்துக்கு உதவும் சத்துக்கள் உள்ளன.
எனவே தினமும் ஏதேனும் ஒரு கீரையை சாப்பிடுவது
நல்லது.
* முழுதானியங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக்
கொள்ளலாம். சிவப்பு அரிசியும் உடலுக்கு வலு சேர்க்கும்.
இதயத்தைப் பாதுகாக்கும்.
* ஓட்ஸில் நார்ச்சத்துகள் மிகுந்துள்ளன. இது கொழுப்பின்
அளவைக் கட்டுப்படுத்துவதுடன் இரத்த ஒட்டத்தையும்
சீராக்கும். இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
* ஆப்பிள் இதயத்துக்கு மிகவும் நல்லது. இது இரத்தம்
உறைவதைத் தடுக்கும்.
* பாதாம் எண்ணெய்யில் விட்டமின் “இ’ உள்ளது. இது
உடலிலுள்ள கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைக்கும்.
இதயநோய் அண்டாமல் தடுக்கும்.
* தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜுஸ் குடிப்பது இதய
நோய் வராமல் நம்மை காப்பாற்றும்.
* ஸ்ட்ராபெர்ரி, ப்ளுபெர்ரி, மல்பெர்ரி போன்ற பழவகைகளில்
அதிக அளவு விட்டமின்”சி’ கால்சியம், பீட்டா கரோட்டின்
சத்துக்கள் உள்ளன. தினமும் காலையில் ஓட்ஸூடன்
ப்ளுபெர்ரி பழம் சாப்பிட இதயம் சீராக இயங்கும்.
* சோயா உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து
இதயநோய் வருவதைத் தடுக்கிறது. பாலுக்கு பதில்
சோயா பாலை காலையில் அருந்தலாம். இதயம்
வலுப்பெறும்.
* உப்பு இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக்
கொறிக்கும் போதெல்லாம் இதயம் பாதிக்கப்படுவதாக
உணருங்கள்.