Home » தன்னம்பிக்கை » மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ 8 பழக்கங்கள்!
மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ 8 பழக்கங்கள்!

மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ 8 பழக்கங்கள்!

சாதனையாளர்கள் மற்றவர்களை விட தங்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி தங்களின் மன நிலைகளை சரியான முறைகளில் தக்க வைத்து கொள்வது மட்டுமல்லாமல், தங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதனை திறம்பட வெளிப்படுத்துகின்றனர். சாதனையாளர்களிடமிருந்து கவனிக்கப்பட்ட 8 பழக்கங்களை இங்கே பார்ப்போம். அந்த பழக்கங்களை நாமும் கற்றுக்கொண்டு மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழ்வோம்.

1) 
ஃபோகஸ்கவனத்தை சிதறவிடக்கூடாது

சாதனையாளர்கள் தங்களின் கவனத்தை சிதறவிடமாட்டர்கள். ஒரு நேரத்தில் ஒரு பிரச்சினை மட்டும் தான் பார்ப்பார்கள். ஒரே நேரத்தில் பல பிரச்சனைகளை பார்ப்பது மன அழுத்தத்திற்கு பெரிய காரணமாக அமைகிறது. அதனால் மற்ற பிரச்சனைகளை பிறகு பார்த்துக்கொள்வதுதான் நல்லது. எனவே நீங்கள் நிகழ்கால பிரச்சனைகளை மட்டும் நிலைநிறுத்திக்கொள்ளுங்கள், கடந்த காலம் மற்றும் எதிர்கால பிரச்சனைகளை யோசித்து கவலைக்கொள்ளாதீர்கள். இதுவே மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த வழி ஆகும்!

2) பிரச்சனைகளை பார்த்து கவலை வேண்டாம்

நமது செயல்களில் ஏதேனும் தவறு ஏற்படும் என்று நினைத்தால் அதற்கானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ள வேண்டும், நம்முடைய செயல்கள் சரியான இலக்கை அடைய விழிப்புணர்வோடு செயல்பட வேண்டியது மிகமுக்கியமானதாகும். நம்முடைய எல்லா பிரச்சனைகளை பற்றி கவலை அடைவதே நம மன அழுத்தம் அதிகரிக்க காரணமாக உள்ளது.

3) போராடுங்கள்விட்டு கொடுக்க கூடாது!

ஒரு சில நேரங்களில் நமக்கு எதிராக எல்லா செயல்களும் நடப்பது போல் அமையும்.அந்த நேரத்தில் மனதை தளரவிடாமல் போராடி நமது இலக்கை அடைய வேண்டும். இந்த மனப்பக்குவமே சாதனையாளர்கள் மற்றும் சாதனையற்றவர்களை வேறுபடுத்திக் காட்டுகிறது.

4) மற்றொரு கோணத்தில் பாருங்கள்!

ஒரு பிரச்சினை நம்மை சூழ்ந்திருக்கும்போது, சில நேரங்களில் அது பெரியதாகதோன்றும். அந்த நேரத்தில் அந்த பிரச்சனைகளிலில் இருந்து விலகியிருந்துமற்றொரு கண்ணோட்டங்களில் பார்த்துக்கொள்வது மிக முக்கியமானதாகும். எனவேபிரச்சனைகள் எழும்போது நாம் அமைதியாக தூங்கி எழுந்தால் அந்த பிரச்சனைகள்மிக எளியதாக தோன்றும். மற்றொரு கண்ணோட்டத்தில் பிரச்சனைகளை பார்ப்பதன்மூலம் புதிய கோணத்தில் அதற்கொரு முடிவு கிடைக்கிறது.

5) எச்சரிக்கையாக இருக்க வேண்டும்தயாராக இருக்க வேண்டும்.

சிறந்த வாசிப்பு, புரிந்துகொள்ளுதல் மற்றும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.மேலும், மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைத்தால், மனஅழுத்த காலங்களில் அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.

6) அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்

நீங்கள் ஓய்வெடுக்கவும் மற்றும் உங்களின் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாகஇருக்கவும் நேரத்தை ஒதுக்க வேண்டும். உங்களுடைய நம்பிக்கை உரியவர்களிடம்உங்களின் நேரத்தை ஒதுக்கி செலவிடுவது, நீங்கள் ஓய்வெடுத்து கிடைப்பதைவிட மிக நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

7) உறங்குதல். உடற்பயிற்சிதியானம்

உங்களின் உணர்வுசார் நுண்ணறிவை அதிகரித்து மூளையை ரீசார்ஜ் செய்வதன் மூலம் மன நிலைகளை நிர்வகிப்பதில் தூக்கம் முக்கியமானதாகும். உங்களுடைய சுயகட்டுப்பாடு, கவனம், மற்றும் நினைவகம் ஆகியவை உங்களின் மன அழுத்தத்தைகுறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். பிரச்சனைகள் அதிகமாக இருக்கும் போது,உங்களின் கண்களை மூடிக்கொண்டு, உட்கார்ந்து, மூச்சு சுவாச பயிற்சியைமேற்கொள்ளவும். இதன் மூலம் உங்கள் மனம் அமைதி அடையும்.

8) தாழ்வாக நினைப்பதை நிறுத்தவும்

நம்மளை பற்றி நாமே எதிர்மறையாக அல்லது தாழ்வாக நினைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏதாவது தவறாக சென்றாலும் அதை பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் இதோடு உலகம் முடிவதில்லை. எப்போதும் உங்களை உயர்த்தியே எண்ணுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top