இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி, வெள்ளையருக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்த காலம். பர்மாவிலும் இன்றைய மியான்மர் சிங்கப்பூரிலும் வசித்த தமிழர்கள் பலர் இந்திய தேசிய ராணுவத்தில் பங்கேற்றிருந்த காலம். ஐஎன்ஏவில் மகளிர் படை உருவாக்கப்படுகிறது. முற்றிலும் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 150 வீராங்கனைகளைக் கொண்ட ஜான்சி ராணி படைப்பிரிவின் துவ்க்க விழா.
ஹிந்தியில் நேதாஜி என்பதில் நேதா என்றால் தலைவன். ஜி என்பது மரியாதை. காந்திஜி, நேருஜி போல நேதாஜி. ஆனால், தலைவர் என்ற இந்தச் சொல் காந்தி-, நேரு,- படேல்- முதலியோர்க்கு இல்லை. சுபாஷ் சந்திர போஸ் மட்டும்தான் நேதாஜி என நினைவு கூரப்படுகிறார்.
இந்திய சுதந்திரக் கழகம்:
1941ல் ஜப்பானியர் சிங்கப்பூரைத் தாக்கினர். பிரித்தானியப்படை பின்வாங்கியது. பிரித்தானிய இந்தியப் படையின் மிகப்பெரிய தளமான பஞ்சாப் தளம் ஜப்பான் படையிடம் சரணடைந்தது. சரணடைந்த இப்படையிலிருந்த படைவீரர்கள், தளபதிகள், கைப்பற்றிய போர்த்தளவாடங்கள் ஆகியவற்றைக் கொண்டு உருவானதே இந்திய தேசிய இராணுவம் ஆகும்.
இதில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் ராஷ்பிகாரி போஸ் பொதுமக்களுக்கென்று இந்திய சுதந்திர லீக் என்ற ஓர் அமைப்பைத் தோற்றுவித்து செயல்படுத்தி வந்தார். இதன் சிங்கப்பூர் கிளையில் தீவிர உறுப்பினராக இருந்த மாத்ருபூமி என்ற கேரள இதழைத் தோற்றுவித்த கே.பி.கே.மேனன் என்பவரின் நட்பு லட்சுமிக்குக் கிடைத்தது. இந்நட்பின் மூலம் இந்தியச் சுதந்திர லீக்கின் முக்கிய உறுப்பினராக இணைந்தார்.
1942ல் பிரித்தானிய ஜப்பானியப் போரில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்து உதவிகள் செய்தார். தொலைவிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் அகதிகளையும் நோயாளிகளையும் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றார். இந்திய சுதந்திர லீக்கின் பிரச்சாரப் பிரிவின் சார்பில் இதழ்களுக்குக் கட்டுரைகள் எழுதினார். இந்தியாவுக்கு வானொலி மூலம் செய்திகளை ஒலிபரப்பும் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். அத்துடன் மகளிர் பிரிவையும் பராமரித்தார்.
நேதாஜியுடன் சந்திப்பு:
இந்திய சுதந்திர லீக்கின் அழைப்பின்பேரில், 1943ல் சுபாஷ் சந்திரபோஸ் சிங்கப்பூர் சென்றார், அப்போது இந்திய சுதந்திர லீகின் சிங்கப்பூர் கிளைக்கு எல்லப்பா என்பவர் தலைவராக இருந்தார். அவரிடம் லட்சுமி இந்திய சுதந்திரப்போராட்டத்தில் தான் ஒரு முக்கிய பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். அதே நேரம் நேதாஜியும், ஜான்சிராணி படை என்ற பெயரில் பெண்களும் ஆயதப் போராட்டத்தில் சமமாகப் பங்கேறக வேண்டும் என அழைப்பு விடுத்தார். இப்படைக்கு தலைமையேற்கும் தனது இசைவைத் தெரிவித்ததும் அடுத்து செய்ய வேண்டிய ஏற்பாடுகளையும் சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்தார்.
1943ல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவான ஜான்சிராணி படையைத் தொடங்கினார். ிப்படை ஆசியாவில் தொடங்கப்பட்ட முதல் பெண்கள் படையாகக் கருதப்படுகிறது. பெண்கள் படையை உருவாக்குவதை ஜப்பானியர் விரும்பவில்லை. விலையுயர்ந்த தளவாடங்கள், பெண்கள் இராணுவம் எனச் செலவழிப்பது வீண் எனக் கருதினர். ஆயினும் கிழக்காசியாவில் பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளைத் தந்தனர். பெண்கள் ஜான்சிராணி படையில் சேர படைத்தளபதியாக மட்டுமின்றி, பெண்கள் நலனுக்கான ஓர் அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
சிங்கப்பூரிலேயே 500 பெண்களைத் தேர்வு செய்து முதலில் ஜான்சிராணி படை துவங்கப்பட்டது. ஆனால் மலேயா-கோலாலம்பூர் போன்ற இடங்களில் இருந்தும் மகளிர் இதில் பங்குகொள்ள வந்தனர். இவர்களுள் ஆர்.லட்சுமிதேவி, தேவயானி, ஜானகி,எம்.எஸ்.தேவர் பாப்பாத்தி போன்ற சிலரும் அடங்குவர். பயிற்சி முடிந்ததும் ஜான்சிராணி படை சிங்கப்பூரிலிருந்து பர்மாவை நோக்கிப் பயணமாயிற்று. அங்கிருந்து படை தில்லியை நோக்கிய போர்முனைக்குச் செல்லும் லட்சுமி இந்தக் கடும்போரில் பங்கேற்றார்.
ஆனால் ஜான்சி ராணி படை இந்திய பர்மிய எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. அங்கு கொரில்லாப் படையினர் தாக்குதலைச் சமாளித்தனர். உணவு மற்றும் போர்ச் சாதனங்கள் வந்துசேரும் பாதை முடங்கியது. பசியின் கொடுமையால் காட்டில் கிடக்கும் பழங்களை உண்டதால் அதன் நச்சுத் தன்மை காரணமாக வயிற்றுப் போக்கு, வாந்தி ஏற்பட்டன. இந்நிலையில் போரில் சமாளிக்க முடியாத நேதாஜி பெண்கள் படை எதிரிகள் வசம் அகப்படக்கூடாது என்பதற்காக படையினை மலேயாவுக்குத் திரும்ப ஆணை பிறப்பித்தார். ஆனால் லட்சுமி மறுத்துவிட்டார்.
1943 அக்டோபர் 22ஆம் தேதி. சிங்கப்பூர் வாட்டர்லூ தெருவில் வீராங்கனைகள் காத்திருக்கிறார்கள். நேதாஜி கம்பீர நடைபோட்டு வருகிறார். அவருடன் இந்திய தேசிய ராணுவத்தின் தலைமை அதிகாரி பான்ஸ்லே. அவருடன் ஜான்சி ராணி ரெஜிமென்டின் கேப்டன் லட்சுமியும் வருகிறார்.
அனைவருக்கும் தமிழில் வணக்கம் சொன்ன நேதாஜி, வீராங்கனைகள் மத்தியில் வீர உரை நிகழ்த்துகிறார். உங்கள் தாய்நாட்டுப் பற்றை வாழ்த்துகிறேன். உங்களுக்கு நான் வழங்கும் மூன்று மந்திரங்கள் – ஒற்றுமை, நம்பிக்கை, தியாகம். நாம் அனைவரும் இந்தியத் தாயின் பிள்ளைகள் என்பதால் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். நம் தாய்நாடு நிச்சயம் விடுதலை பெறும் என்ற நம்பிக்கை. அத்தகைய விடுதலையை நம் தாய்நாடு அடைவதற்காக நம் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்…
அவருடைய வார்த்தைகள் எங்கள் உயிரில் மின்சாரம் பாய்ச்சின என்றார் லட்சுமி நாயுடு. ஆம். ஜான்சி ராணி படைப்பிரிவின் முதல் 150 வீராங்கனைகளில் ஒருவர் லட்சுமி. மற்றொருவர் அவரது தங்கை ருக்மணி தேவி. இருவரும் நேதாஜியின் அழைப்பை ஏற்று இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தவர்கள்.
இந்திய தேசிய ராணுவத்தைப் பொறுத்தவரை, ஒரு ராணுவ வீரன் சாதாரணமாக மூன்றாண்டு காலம் பெற வேண்டிய அனைத்துப் பயிற்சிகளையும் ஆறு மாதங்களுக்குள் பெற்றுக்கொண்டு போர் முனைக்குச் செல்லத் தயாராக இருக்க வேண்டும். ஜான்சி ராணி ரெஜிமென்ட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. இயந்திரத் துப்பாக்கி இயக்குதல், விமான எதிர்ப்புப் பீரங்கிகளைக் கையாளுதல், தந்திச் செய்தி, சமிக்ஞை அனுப்புதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
‘தில்லி சலோ’ என்ற முழக்கத்துடன் ஐ.என்.ஏ. வீரர்கள் புறப்பட்டனர். ஆனால் அந்த முதல் படைப்பிரிவில் லட்சுமிக்கு இடம் கிடைக்கவில்லை. அவர் ஆத்திரத்துடன் கமாண்டிங் ஆபீசர் மனோரஞ்சிதா சத்யவதியிடம் போய் ஏன் தன்னை அனுப்பவில்லை என்று கேட்டார். “வீராங்கனைகளுக்கு நீ நன்றாகப் பயிற்சி தருகிறாய். இன்னும் நிறையப் பேருக்குப் பயிற்சி தர வேண்டும். அதனால்தான் உன்னை நிறுத்தியிருக்கிறேன்” என்றார் அவர். போர்முனையில் நேரடியாகக் களமிறங்க வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றாலும், எத்தனையோ லட்சுமிகளை போருக்குத் தயார் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது.
இம்பால் வரை முன்னேறிய இந்திய தேசிய ராணுவம் அதற்கு மேல் முன்னேற முடியவில்லை. கடும் மழையாலும், ஜப்பான் மீது அமெரிக்கா நடத்திய அணுவெடித் தாக்குதலைத் தொடர்ந்தும், இந்திய தேசிய ராணுவம் சண்டையை நிறுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று.
“இது தோல்வியல்ல, பின்னடைவுதான். இறுதிவெற்றி இந்தியாவுக்கே. ஆகவே உங்களுக்கு நீண்ட விடுப்புத் தருகிறேன். மீண்டும் அழைக்கும்போது வாருங்கள்” என்று விடைகொடுத்து அனுப்பினார் நேதாஜி. அந்த அழைப்பு வரவேயில்லை.
பின்னர் இந்திய தேசிய ராணுவத்தினர்மீது விசாரணை நடைபெற்றது. ஒரு நாள் ஈப்போ நகர நீதிமன்றக் கட்டிடத்தில் லட்சுமி விசாரணைக்குச் சென்றார். “நீ ஏன் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தாய்?” என்று கேட்டார் ஓர் அதிகாரி.
“உங்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து எங்கள் தாய்நாட்டை விடுவிப்பதற்காக” என்றார் லட்சுமி.
“அவ்வளவு நாட்டுப்பற்றா? என்னை போர் முனையில் சந்திக்க நேர்ந்திருந்தால் என்ன செய்திருப்பாய்?” என்று கேட்டார் அவர். “உங்களை சுட்டுக் கொன்றிருப்பேன்” என்று தயங்காமல் பதிலளித்தார் லட்சுமி.
ஜான்சி ராணி படைப்பிரிவுக்குப் பயிற்சி அளித்த அதே கேப்டன் லட்சுமிதான் குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாமை எதிர்த்துப் போட்டியிட்டவர். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் என்ற பெருமையைப் பெற்ற லட்சுமி செகல், தமிழகத்தைச் சேர்ந்தவர், சென்னையில் வசித்தவர்.
அவரது தந்தை சுவாமிநாதன் பிரபல வழக்குரைஞர். தாய் அம்மு சுவாமிநாதன் நாட்டின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர். அந்தக் காலத்திலேயே இவர்கள் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள்.
சென்னையில் மருத்துவம் பயின்ற லட்சுமி, பணியின் காரணமாக சிங்கப்பூர் சென்றபோதுதான் நேதாஜியை சந்தித்தார். இந்திய தேசிய ராணுவத்துக்கு நன்கொடை தரச்சென்றார். நேதாஜியின் அழைப்பை ஏற்று ஐ.என்.ஏ.வில் சேர முன்வந்த ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ஜான்சி ராணி படைப்பிரிவின் கேப்டன் ஆனார்.
சுதந்திரத்திற்குப் பிறகு கான்பூரில் வசிக்கத் துவங்கிய அவர், கான்பூர் நகரத் தொழிலாளர் குடியிருப்புப் பகுதியில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். இலவச மருத்துவம் அளிக்கிறார். மகளிர் அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகள் வகித்தவர்.
அவர்- 2012-இல் தமது 97-ஆவது வயதில் ஜூலை 23 அன்று அவர் மறைந்தர்.
சிங்கப்பூரில் சுபாஷ் அறிவித்த ஹிந்தியில் ஆஸாத்- ஹிந்த். தமிழில் இடைக்கால வெளிநாட்டு இந்திய அரசு.
இந்தியாவின் சுதந்திர அரசு 1943- & 1945 இல் சிங்கப்பூரில் அமைக்கப் பட்டது. அதன் தலைநகர் அந்தமான் தீவில் உள்ள போர்ட்பிளேர் நகரம். வெளிநாட்டுத் தலைநகரங்கள் ரங்கூன், சிங்கப்பூர்.
நாடுகடந்த இந்திய அரசின் அமைச்சரவை:
1. சுபாஷ் சந்திரபோஸ் : பிரதமர்
2. திரு. எஸ். ஏ. ஐயர்: மத்திய ஒலிபரப்பு அமைச்சர்
3. தளபதி ஏ.சி. சாட்டர்ஜி : மத்திய நிதி அமைச்சர்
4. தளபதி அஜீஸ் அகமது
5. தளபதி என். எஸ். பகத்
6. தளபதி ஜே.கே. பான்ஸ்லே
7. தளபதி. குஜ்சாரா சிங்.
8. தளபதி. எம். இசட். கியானி
9. தளபதி. ஏ.டி. லோகநாதன்
10. தளபதி. எஸன் குவாதிர்
11. தளபதி. ஷாநவாஸ் கான். என 11 பேர் கொண்ட அமைச்சரவை.
நாடுகடந்த இந்திய அரசின் நாணயம்: சுதந்திர ஹிந்த் ரூபாய்.