ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடையே வருங்காலத்தில் நீங்கள் என்னவாக போகிறீர்கள் என்று கேள்வி கேட்டார்….
ஒரு மாணவன் தான் மருத்துவராக வேண்டும் என்றான் , இன்னொரு மாணவர் வக்கீல் ஆக வேண்டும் என்றான் ,,, இப்படி ஒவ்வொரு மாணவரும் தன்னுடைய ஆசைகளை சொல்லி வந்தனர்.
ஒரு மாணவன் மட்டும் நான் ஒரு குதிரைவண்டிக்காரனாக ஆக வேண்டும் என்றான் , இதனை கேட்ட ஆசிரியருக்கோ அதிர்ச்சி ,,, என்ன உளறுகிறாய் என்று கேட்டு திட்டிவிட்டார்.
மாலை பள்ளி முடிந்ததும் அந்த மாணவனின் தாயார் அவனை அழைத்து செல்ல வந்தார், ஆசிரியர் நடந்தவற்றை மாணவனின் தாயாரிடம் கூறினார், அவன் தாயாரோ அதை கேட்டுவிட்டு அமைதியாக இருந்தார் …
வீட்டுக்கு செல்லும் வழியில் அந்த மகனிடம் எதனால் நீ குதிரைவண்டிக்காரனாக ஆக வேண்டும் என்று சொன்னாய் என கேட்க்க … அந்த மகனோ குதிரைவண்டி ஓட்டும் போது நல்லா வேகமாக வண்டி போகும் ,வண்டி போகும் போது குச்சியை சக்கரத்தில் விட்டால் நல்ல சத்தம் வரும் என்றான் ,தாய் அதை கேட்டுவிட்டு அமைதியாக இருந்தார் …
பிறகு மகனுக்கு உணவு கொடுத்துவிட்டு மறுபடியும் கேட்டால் ,”நீ குதிரைவண்டிக்காரனாக தான் ஆகப்போகிறாயா ?” என்று மகன் “ஆம்” என்று பதில் சொல்ல …
நேராக பூஜை அறைக்கு அழைத்து சென்று அங்கு மகாபாரதத்தில் கிருஷ்ணன் தேரோட்டியாக இருந்த காட்சியை காட்டி, மகனே கிருஷ்ணன் குதிரைவண்டிக்காரராக மாறியதால் ஒரு போரே முடிவுக்கு வந்தது ,,,, ஆகவே இவரை போல ஒரு குதிரைவண்டிக்கார ஆக நீ வர வேண்டும் என்றார் அவன் தாயார் ….
அதற்க்கு அந்த மகனும் சரி, என்று சொல்லி தாயிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டானாம் …
அந்த குதிரைவண்டிக்காரனாக ஆசைப்பட்ட சிறுவன் வேறு யாரும் அல்ல அவர் தான் பின்னாளில் சுவாமி விவேகானந்தர் என்று அழைக்கப்பட்ட நரேந்திரர்.