மனம்
ஓட்டைப் பானையில் எவ்வளவுதான் தண்ணீரை ஊற்றினாலும் அது நிறைவதில்லை. அதுபோலவே தான் விரும்பிய பொருள் கைக்குக் கிடைத்துவிட்டாலும் கூட, ஒரு போதும் மனம் திருப்தி அடைவதில்லை. உலக இன்பங்களை அடைவதில் பெரிதும் ஆவல் கொண்டுள்ள மனம் எப்போதுமே, ஒன்றும் இல்லாத காலி மனம்தான். அதற்கு எந்த இடத்திலும் அமைதி கிடைக்காது.
–ஸ்ரீராமர்.
குரு
தனது குருவை மனுஷனாக கருதுபவனுக்கு பிரார்த்தனையாலும், பக்தியாலும் என்ன பலன் உண்டாகக் கூடும். நமது குருவை மனுஷன் என்று கருதக்கூடாது. ஈஸ்வரனை காண்பதற்கு முன்னால் அத்திவ்ய தரிசனத்தின் முதல் அங்கமாக குருவைத்தான் சிஷ்யன் காண்கிறான். பிறகு அந்த குருவே, ஈஸ் வரனாக மாறி, ஈஸ்வர சொரூபத்தைக் காட்டுகிறார். இருவரும் ஒன்றென்று சிஷ்யனும் தெரிந்து கொள்கிறான்.
–ராமகிருஷ்ணர்.
லட்சியம்
நாம் அனைவரும் நேர்மையானவர்களாக திகழ்வோம். லட்சியத்தை நம்மால் பின்பற்ற முடியவில்லை என்றால், நமது பலவீனத்தை நாம் ஒப்புக் கொள்வோம். ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும், லட்சியத்தை ஒருபோதும் இழிவுபடுத்தாமல் இருப்போமாக. தனக்குள் இருக்கும் லட்சியத்தை தாழ்ந்த நிலைக்கு கொண்டு போக எவரும் முயற்சி செய்ய வேண்டாம்.
–விவேகானந்தர்.