குருவே! எனக்கு ஜென் தத்துவம் புரியவில்லையே தாங்கள் விளக்க வேண்டும். ஜென் துறவியை அணுகி கேட்டார் ஒருவர்.
குரு ஆரம்பித்தார். ஜென் தத்துவம் என்ன சொல்கிறது தெரியுமா? என்றவர் போய்சிறுநீர் கழித்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு உட்புறம் சென்று விட்டார். சற்றுநேரம் கழித்து வந்த குரு, புரிந்ததா? என்பது போல் தலையசைத்து கேட்டார்.
வந்தவர் விழிக்கவே, அரசனோ, அறிஞனோ, அசடனோ, யாராக இருந்தாலும் சிறுநீர்கழிக்காமல் இருக்க முடியுமா? அதை செய்து தானே ஆக வேண்டும். எனக்கு பதில்உன்னை அனுப்ப முடியுமா? என்று கேட்டார் குரு.
அவரவர் வாழ்க்கை அவரவர் கையில். அதை எவரிடமும் தள்ளி விட முடியாது. ஞானம் என்பது உபதேசங்களால் வருவதில்லை. தன் வாழ்வை தானே வாழ்வதன் மூலம் அனுபவம் பெற முடியுமே தவிர பிறர்அனுபவங்களை நாம் உய்த்துணர முடியாது.