Home » பொது » சர்வதேச ஓசோன் தினம்!!!
சர்வதேச ஓசோன் தினம்!!!

சர்வதேச ஓசோன் தினம்!!!

உலகில் உயிரினங்கள் உயிர்வாழ வான்பரப்பில் ஓசோன் படலம் ஆற்றிவரும் பணி மகத்தானது. நமது கண்ணுக்குப் புலப்படாத அந்த ஓசோன் படலத்திற்கு மானசீகமான நன்றிகளைத் தெரிவிக்கவும், இன்று நம்மை அறியாமல் எமது நடவடிக்கைகள் காரணமாக ஓசோன் படலத்திற்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகளை ஏனையவர்களுக்கும் உணரச் செய்யவும், அதே நேரத்தில் அதன் பாதுகாப்பின் அவசியத்தை உறுதி செய்யவும் ஆண்டுதோறும் உலக நாடுகள் செப்டம்பர் 16ம் தேதியை ஓசோன் தினமாக நினைவு கூறுகின்றன.

ஓசோன்:

ஓசோன் படலம், சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதா கதிர்களில் 93 சதவீதத்தை தடுக்கிறது. 1913ம் ஆண்டு சார்லஸ் பேப்ரிக் மற்றும் ஹென்றி பாய்சன் ஆகிய இருவரும் இணைந்து ஓசோன் படலத்தை கண்டுபிடித்தனர்.

புவி மண்டலத்திலிருக்கும் ஓசோன் படலம் தான், நம்மை சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது. இதை பாதுகாக்க வலியுறுத்தி, ஆண்டுதோறும் செப்.16ம் தேதி “சர்வதேச ஓசோன் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.ஆம.. இன்று ஒசோனுக்கு பிறந்த நாள் என்றும் சொல்லலாம்.

ஓசோன் படலம், சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதா கதிர்களில் 93 சதவீதத்தை தடுக்கிறது. 1913ம் ஆண்டு சார்லஸ் பேப்ரிக் மற்றும் ஹென்றி பாய்சன் ஆகிய இருவரும் இணைந்துதான் இந்த ஓசோன் படலத்தை கண்டுபிடித்தனர்.

ஆனால் ஆபத்தையே தரும் இந்த ஓசோன் கதிர்கள் தோல்புற்று நோயை உருவாக்கக்கூடியவை. இதனால் உலகில் ஆண்டுதோறும் 66 ஆயிரம் பேர் பலியாகின்றனர் என்பதையும் இவை பயிர்களையும் பாதித்து உணவுச்சங்கிலியை சீர்குலைக்க கூடியவை என்பதையும் யாரும் மறந்து விடக் கூடாது.

விளைவுகள்:

கடந்த நூறு ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை 0.74 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஓசோன் படலம் பாதிக் கப்படுவதால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும். இதனால் கடல்நீர் மட்டம் உயரக்கூடிய அபாயம் ஏற்படும். இமய மலையில் உள்ள பனிக் கட்டிகள் உருகும். புற ஊதா கதிர்களால் தோல் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அது சரி..ஏன் பாதிக்கிறது :

1970களின் தொடக்கத்தில் ஆலந்தை சேர்ந்த பால் குருட்சன், புகை மண்டலங்களால் ஓசோனுக்கு பாதிப்பு ஏற்படுவதை கண்டறிந்தார். அடுத்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் குளோரோ புளூரோ கார்பன்கள், மித்தைல் குளோரோபார்ம் போன்ற வேதிப்பொருட்கள் ஓசோனில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவது தெரிந்தது.

இவற்றை அதிகம் வெளியிடும் பொருட்களை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இவற்றால் ஓசோன் படலத்தில் பெரிய துளை விழுந்திருப்பது பின்னர் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து ஐ.நா., சார்பில் 1987 ஒசோனை பாதுகாக்க “மான்ட்ரியல் வரைவு ஒப்பந்தம்’ தயாரானது.

கிட்டத்தட்ட 191 நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதனால் இப்போதெல்லாம் இந்த ஓசோன் துளை பெரிதாவது தவிர்க்கப்பட்டாலும், ஓசோனுக்கு நிகழ்ந்த பாதிப்பு கொஞ்சமும் சரி செய்யப்படவில்லை என்பது சோகம்தான்.

ஏகத்துக்கு முயற்சி செய்தாலும் ஓசோன் துளை மறைய நீண்ட காலமாகும் என கருதுகின்றனர். அதே சமயம் 2006க்கு பிறகு ஓசோன் துளை அளவு குறைந்திருந்தது. இதே நிலை நீடித்தால் 2050வது ஆண்டுக்குள்ளாவது ஓசோன் துளை மறைந்துவிடும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அது சரி.. எப்படி பாதுகாப்பது :

மரக்கட்டைகள், பிளாஸ்டிக் பொருட்களை எரித்தல்,குளிர் சாதன பெட்டிகளிலிருந்தும், தீயணைப்பு கருவிகளிலிருந்தும் வெளியேறும் குளோரோபுளோரோ கார்பன் வாயு, டூ வீலர்கள்,தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, போன்ற வாயுக்களால் காற்று மண்டலம் மாசு அடைதல், சி.எப்.சி., சி.எச்.4 போன்ற வாயுக்கள் வெளியேற்றத்தினால், ஓசோன் படலம் பாதிக்கப்படுக்கப்படுகிறது.

இதை முடிந்தளவுக்கு தவிர்ப்பதன் மூலம் ஓசோன் பாதுகாப்பதில் நமது பங்களிப்பை வழங்கலாம!மேலும்அதிகளவில் மரங்களை வளர்த்து, அதன் மூலம் கார்பன் டை ஆக்சைடு அளவை குறைக்கலாம். சிறிய தொலைவுகளுக்கு பயணம் செய்யும் போது வாகனங்களை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லதாக்கும்!..

ஓசோனின் எதிரி எச்.சி.எப்.சி.,:

ஓசோனில் துளை ஏற்படுத்தக் கூடிய, குளோரோபுளூரோ கார்பன்களுக்கு (சி.எப்.சி.,) நாம் விடை கொடுத்துவிட்டோம். ஐ.நா., சுற்றுச்சூழல் திட்டத்தின் மான்ட்ரியல் ஒப்பந்தத்தின் படி, உலக நாடுகள் சி.எப்.சி.,யின் உற்பத்தி, வினியோகம் மற்றும் பயன் படுத்துதல் ஆகியவற்றை முற்றிலுமாக நிறுத்தி விட்டன.

ஏர்கண்டிஷனர்கள், பிரிட்ஜ் உள்ளிட்ட குளிர் சாதனப்பெட்டிகள், தீ அணைப்பான்கள், ஸ்பிரேக்கள் உள்ளிட்ட அழுத்தப்பட்ட திரவம், வாயுக்களை வெளி யேற்றும் கருவிகளில் சி.எப்.சி., பயன்படுத்தப் பட்டது. இந்த சி.எப்.சி.,க்கு மாற்றுப் பொருளாக ஹைட்ரோ குளோரோபுளூரோ கார்பன்கள் (எச்.சி.எப்.சி.,) பயன்படுத்தப்படுகின்றன. சி.எப்.சி.,யின் மாற்றுப் பொருளான எச்.சி.எப்.சி.,யில் 40 வகைகள் உள்ளன.

இவை அனைத்துமே ஓசோனை பாதிக்கக் கூடியவைதான். ஆகவே, இவற்றையும் பல்வேறு கட்டங்களில் பயன் பாட்டிலிருந்து நீக்கவிட, ஐ.நா., சுற்றுச்சூழல் திட்டத்தின் ஓசோனாக்ஷன் அலுவலகம் கருதுகிறது. இதற்கான கொள்கை ஆலோசனைகள், தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச நாடுகளுக்கான சட்டமியற்றும் வழிமுறைகளை இந்நிறுவனம் நாடுகளுக்கு அளிக்கிறது.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள, ஓசோன்செல், 2008ம் ஆண்டிலிருந்தே சி.எப்.சி., வெளியேற்றத்தை கட்டுப்படுத்திவிட்டது. தற்போது எச்.சி.எப்.சி.,யையும் பயன்பாட்டிலிருந்து நீக்குவதற்கான வழிமுறைகளை வகுத்துள்ளது. ஓசோன் படலம் காக்கப் படும் பட்சத்தில், மோசமான வானிலை விளைவுகள் தடுக்கப்படும்.

பாதுகாப்பது எப்படி?:

அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும். இதன் மூலம் கார்பன்- டை- ஆக்சøடு அளவை குறைக் கலாம்.

சிறிய தொலைவுகளுக்கு பயணம் செய்யும் போது வாகனங்களை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது.

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலான தொழில் நுட்பங்களை மட்டும் பயன் படுத்தவேண்டும்.

ஒவ்வொரு நாடும் தாங்கள் வெளியிடும் கார்பன் அளவை குறைக்க முயற்சி எடுக்க வேண்டும்.

பருவநிலை மாறுபாடு குறித்த உறுதியான திட்டங்களை வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இணைந்து செயல் படுத்த வேண்டும்.

ஓசோனின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்ந்து பாதுகாக்க இந்நாளில் முயற்சி எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top