காஞ்சீபுரம் நடராஜன் (கா.ந.) அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 – 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா குடியரசானபிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.
பிறப்பு : செப்டம்பர் 15, 1909
இடம் : காஞ்சிபுரம், தமிழ்நாடு
இறப்பு : பிப்ரவரி 3, 1969
தொழில் : அரசியல்வாதி, எழுத்தாளர்
நாட்டுரிமை : இந்தியா
இளமைப் பருவம்
அண்ணாதுரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் (முன்னாளில் கஞ்சிவரம்) செப்டம்பர் 15, 1909, இல் நடராசன் மற்றும் பங்காரு அம்மாளுக்கும் நடுத்தர குடும்பத்தில் மகனாகப் பிறந்தார்.அவர் தந்தை ஒரு கைத்தறி நெசவாளர்.அவர் தமக்கையார் ராசாமணி அம்மாளிடம் வளந்தார். மாணவப்பருவத்திலேயே ராணியம்மையாரை மணம்புரிந்தார். அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை ஆகையால் அவர் தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தனர். பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில்சேர்க்கப்பட்ட அண்ணாதுரை குடும்ப வறுமைக் காரணமாக பள்ளியிலிருந்து தனது படிப்பை தற்காலிமாக நிறுத்திக்கொண்டு, நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக சிறிது காலம் பணிபுரிந்தார்.
கல்வி
1934 இல், இளங்கலைமானி மேதகைமை (ஆனர்ஸ்) , மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியல் மற்றும் அரசியல்பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். பின்பு பச்சைப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். ஆசிரியப்பணியை இடைநிறுத்தி பத்திரிகைத்துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார்.
ஆங்கிலம் பேச மறுத்த அண்ணா
கொஞ்சம் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், அதிலும் கல்லூரியில் படித்துவிட்டால் ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்ற மனப்பான்மை அன்றைய காலகட்டத்திலும் ஆங்கில மோகம் அதிகமிருந்தது. ஆங்கிலம் பேசினால் கவுரவம் என்று எண்ணிய காலமது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அண்ணா விடுமுறையில் அவர் பாட்டியின் இல்லம் அடைந்தபொழுது, அவரின் பாட்டியார் சிறிதளவு ஆங்கிலம் பேசிக் காட்டுமாறு எவ்வளவு வற்புறுத்தியும் ஆங்கிலம் பேச மறுத்து ஆங்கிலம் பேசினால் உனக்கென்ன புரியும், தவிர நாம் இப்பொழுது பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம். தேவையில்லாமல் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அவர் பாட்டியின் அன்புக் கட்டளையாக இருந்தாலும், போலியாக, தேவையில்லாமல் ஆங்கிலம் பேசுவதில் அண்ணாவிற்கு உடன்பாடில்லை.
ஆசிரியர் பணி:
பட்டப் படிப்பை முடித்தவுடன் சென்னையில் உள்ள கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆறுமாத காலம் ஆசிரியராகவும் பணியாற்றினார். பிறகு பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். ஆசிரியர் பணியை இடைநிறுத்தி பத்திரிக்கைத் துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார்.
பத்திரிக்கை பணி
1937 முதல் 1940 வரை தந்தை பெரியார் அவர்களின் இதழ்களான குடியரசு, விடுதலை, பகுத்தறிவு போன்ற பத்திரிக்கைகளில் துணை ஆசிரியராகப் பணி புரிந்தார். அந்த காலகட்டங்களில் க்லகத்தா காய்ச்சல், ரிப்பன் மண்பத்து மகான்கள், ஓமன் கடற்கரையிலே போன்ற சிறப்புமிக்க கட்டுரைகளை எழுதினார். அப்போது நக்கீரன், பரதன், வீரர் எனும் புனைப் பெயர்களில் பல கட்டுரைகளையும் எழுதினார்.
அண்ணாவின் இலக்கிய பங்களிப்பு:
அண்ணா அரசியல் வாழ்க்கையை தவிர, நாடகங்களுக்கும், திரைபடங்களுக்கும் திரைக்கதைகள் எழுதும் திறமை படைத்தவராக விளங்கினார். அது மட்டுமல்லாமல் அண்ணாதுரை ஒரு மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார்.
அவர், அவருக்கே உரித்தான தனிப்பட்ட பாணியில் அனைவரையும் கவர்கின்ற வகையில் பேசும் திறன் மற்றும் எழுத்தாற்றலும் பெற்றவராக விளங்கினார். அவர் பல நாவல்கள், சிறுகதைகள், மற்றும் அரசியல் சார்ந்த மேடை நாடகங்களையும் எழுதினார். அவர் தனது சொந்த நாடகங்களில் நடித்தும் உள்ளார். மேலும் 1948 இல் எழுதப்பட்ட இலட்சிய வரலாறு மற்றும் வாழ்க்கை புயல், ரங்கோன் ராதா, பார்வதி பி.ஏ., கலிங்கா ராணி மற்றும் பாவையின் பயணம் இவரின் முக்கிய படைப்புகளாகும்.
அண்ணாவின் திரைப்பட வாழ்க்கை:
1948 ஆம் ஆண்டு ‘நல்லதம்பி’ என்ற திரைப்படத்தை முதன் முதலில் அரங்கேற்றினார். இந்த படம் ஜமீன்தாரி ஒழிப்புமுறையை வலியுறுத்தி எடுக்கப்பட்டத் திரைப்படமாகும். இந்த படத்தில் என்.எஸ். கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் இவருக்கு 12,000 ரூபாயை பெற்றுத்தந்தது இது அந்த நேரத்தில் ஒரு பெரிய தொகையாகும். அதுமட்டுமல்லாமல் இவரின் மிகச்சிறந்த நாவலான வேலைக்காரி(1949) மற்றும் ஒர் இரவு, போன்ற நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டன. இத்தகைய திரைப்பட பணியின் மூலமாக இ.நாராயணசுவாமி, K.R. ராமசாமி, N.S. கிருஷ்ணன், எஸ் ராஜேந்திரன், சிவாஜி கணேசன், மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்ற திரை நட்சத்திரங்களின் ஆதரவு இவருக்கு கிடைக்கபெற்றது.
பெரியார் உடனான தொடர்புகள்
தனது கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு அரசியலில் ஈடுபட மிகவும் ஆர்வம் கொண்ட அண்ணா 1934 ஆம் ஆண்டு கோயமுத்தூர் மாவட்டம் திருப்பூரில் நடந்த ஒரு இளைஞர் மாநாட்டில் பெரியாருடனான முதல் சந்திப்பு ஏற்பட்டது. அவருடைய கொள்கைகள் மிகவும் அவரை ஈர்த்தது. அதனால் பெரியாரின் நீதி கட்சியில் சேர்ந்து அரசியல் பணியாற்றினார்.
அதன்பின் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார்.பெரியாரின் தனித்திராவிடநாடுக் கொள்கையின் காரணமாகவும், தன்னைவிட வயதில் இளையவரான மணியம்மையாரை பெரியார் மணம் புரிந்துகொண்டமையினால் கருத்துவேறுபாடு கொண்டு, திராவிடக் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பலருடன், 1949 ல், பெரியாரை விட்டு விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார்.அது மட்டுமல்லாமல் “திராவிட நாடு” என்ற தலைப்பில் ஒரு தமிழ் இதழையும் தொடங்கினார்.
தனிக்கட்சி துவங்கினாலும் தன்கட்சி கொள்கைகள் தாய்க்கட்சியான திரவிடக்கட்சியை ஒத்தே செயல்பட்டது. இந்தியாவின் தேசிய அரசியலில் பங்குகொள்ளும் விதமாக இந்தியக் குடியரசானதிற்குப் பின் இந்திய சீனப் போருக்குப்பின் 1963 இல் தனது தனித்திராவிட நாடுக் கொள்கையை கைவிட்டார். ஆளும் காங்கிரசுக் கட்சிக்கெதிராக பல்வேறு போராட்டங்களில், பல்வேறு காலகட்டங்களில் ஈடுபட்டு அவ்வாட்சியை எதிர்க்கலானார். இறுதியில் 1965 இல் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் மிகத்தீவிரமாக ஈடுபடலானார். இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் விளைவாக மக்களாதரவை அவரும், அவரது கட்சியான திராவிட முன்னேற்றக் கட்சியும் அபரிமிதமாக பெற்றன.
தமிழ்நாடு பெயர் மாற்றம்
1967 இல் நடைபெற்றத் தேர்தலில் பங்கு பெற்ற திமு கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. அவரது தலைமையில் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார். இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார், மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.
இறுதிக்காலம்
மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியிலிருக்க அவரால் முடிந்தது. புற்று நோய்க்கு ஆளான அவர், 2-3 பிப்ரவரி 1969 ல் காலமானார். அவரின் இறுதி ஊர்வலம் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெறுகின்ற அளவில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். பல கல்வி நிறுவனங்கள், கட்சிகள் அவரின் பெயரில் துவக்கப்பட்டன. ஒரு முதலமைச்சராக மட்டுமன்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும், ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும், இன்றும் தமிழக மக்களால் அவர் நினைவு கூறப்படுகிறார். திமுக விலிருந்து பிரிந்து தனிக்கட்சி துவக்கிய எம்.ஜி.ராமச்சந்திரன் அவரின் பெயரைக் கொண்டு உருவாக்கிய அண்ணாத் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியினால் பெற்ற வெற்றியைக் கொண்டு தமிழகத்தின் ஆட்சியை பின்னாளில் நடத்தினார் என்பது வரலாறு.
மறைவு
அண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் புற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது 3 பெப்ரவரி, 1969 -ல் மரணமடைந்தார். அவர் புகையிலையை உட்கொள்ளும் பழக்கமுடையவராததால் (புகையிலைப் பொடி நுகரும் பழக்கம்) இந்நோய் தீவிரமடைந்து மரணமடைந்தார். அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில்.இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். இவரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் அண்ணா சதுக்கம் என்றப் பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணாவின் பொன்மொழிகள்
“மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்”
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்”
வைரம் ஜொலிக்க வேண்டுமானால், சானை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்க வேண்டுமானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும். ஆம் அதைப்போல, நல்வாழ்வு பெற வேண்டுமானால் நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்லத்தான் வேண்டும்.
சட்டம் ஓர் இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஓர் விளக்கு; அந்த விளக்கு ஏழைகளுக்கு கிடைப்பதில்லை. (வேலைக்காரி நாடகத்தில்-1945)
அண்ணாதுரையின் முதல் படைப்புகள்
முதல் கட்டுரை – தமிழில் மகளிர் கோட்டம் – 19.03.1931
முதல் கட்டுரை – ஆங்கிலத்தில் MOSCOW mobparade – 1932
முதல் சிறுகதை – கொக்கரக்கோ – 11.02.1934
முதல் கவிதை – காங்கிரஸ் ஊழல் – 09.12.1937
முதல் கடிதம் – பகிரங்க்க் கடிதம் 02.09.1938
முதல் குறும் புதினம் – கோமளத்தின் கோபம் – 07.1939
முதல் புதினம் – வீங்கிய உதடு – 23.03.1940
முதல் நாடகம் – சந்திரோதயம் – 05.06.1943
அண்ணாதுரை புனைப்பெயர்கள்
செளமியன், பரதன், நக்கீரன், வீரன், குறம்போன், துறை, வீனஸ், சமதர்மன், ஒற்றன், நீலன், ஆணி, சம்மட்டி, காலன், பேகன், வழிப்பேோக்கன், சிறைபுகுந்தோன், குறிப்போன், கொழு, குயில், கீரதர்.
அண்ணாவின் படைப்புகள்:
1939 – கோமளத்தின் கோபம்
1942 – களிங்கரணி
1943 – பார்வதி B.A
1943 – சந்ரோதயம்
1945 – சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்
1946 – வேலைக்காரி
1946 – குமரிகோட்டம்
1948 – நல்ல தம்பி
1948 – ஓர் இரவு
1953 – சொர்க வாசல்
1955 – சூர்யாகுமாரி
1965 – தழும்புகள்
1970 – இன்பஒளி
குறிப்பிடத்தக்க படங்கள்:
1948 – நல்லதம்பி
1946 – வேலைக்காரி
1948 – ஓர் இரவு
1956 -ரங்கூன் ராதா
1963 – பணத்தோட்டம்
1967 – வாலிப விருந்து
1946 – குமரி கோட்டம்
1973 – ராஜபாட் ரங்கதுரை
1982 – நீதிதேவன் மயக்கம்
காலவரிசை:
1909 – தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரத்தில் பிறந்தார்
1930 – ராணி என்ற பெண்ணை மணமுடித்தார்.
1934 – சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.
1935 – ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்தார்.
1938 – காஞ்சிபுரத்தில் நடை பெற்ற முதல் ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டார்.
1944 – நீதிகட்சி திராவிடர் கழகம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
1948 – அண்ணாவின் முதல் படமான “நல்லதம்பி” திரையிடப்பட்டது.
1949 – திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க.) நிறுவப்பட்டது.
1962 – ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
1967 – சென்னை மாகாண முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1968 – யேல்பல்கலைக்கழகத்தில்சுபப்ஃபெல்லோஷிப்பட்டம் பெறப்பட்டது.
1969 – சென்னைஅரசுதமிழ்நாடுஎனபெயர்மாற்றம்செய்யப்பட்டது.
1969 – பிப்ரவரி 3 ம்தேதிதன்னுடைய 59 வது வயதில்சென்னையில்காலமானார்.
1972 – அண்ணாதிராவிடமுன்னேற்றகழகம் (அதிமுகஉருவாக்கப்பட்டது.
1978 – அண்ணாபல்கலைக்கழகம்அவருடையபெயரில்நிறுவப்பட்டது.
1987 – திமுகதலைமைஅலுவலகமானஅண்ணாஅறிவாலையம்கட்டப்பட்டது.
2010 – அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னையில் நிறுவப்பட்டது.