காலையில் பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள் – Cow Milk Drinking
தற்போது மேலை நாடுகளில் பசும்பாலை நெருப்பில் வைத்து காய்ச்சாமல் பச்சை பால் உண்ணும் முறை என்பது வேகமாக பரவி வருகின்றது.இதில் ஏராளமான நன்மைகள் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.
பொதுவாக இன்று நம்மிடையே பால் என்பது பாக்கெட்டுகளில் அடைக்கப் பட்டு இரசாயண முறையில் பதப்படுத்தப்பட்டு நமது தேவைக்கு விற்கப் படுகின்றது. இதில் சில தீமைகளும் சேர்ந்தே உள்ளது.அதாவது Pasteurization என்னும் சுத்தி கரிப்பு என்பது குறிப்பிட்ட அளவில் பாலை கொதிக்க வைத்து பாக்டீரியாவை அளிக்கும் முறையாகும்.இம் முறையால் பாலில் உள்ள Vitamin C – 20% சதவீதம், Vitamin B1 10% சதவீதம் அழிந்து விடுகின்றது. மேலும் பாலில் உடலுக்குத் தேவை யான நன்மை செய்யும் பாக்டீரியாவும் அழிந்து விடுகின்றது. இதனை உணர்ந்த மேலை நாட்டினர் Pasteurization முறையில் சுத்தி செய்யாத பாலை உண்ண விரும்புகின்றனர்.
ஆனால் இது சுகாதாரத்திற்கு கேடு என அமெரிக்க உணவு மற்றும் நிர்வாகம் FDA -23 மாநிலங்களில் தடை விதித்துள்ளது.பச்சை பால் விரும்பிகள் சங்கம் இதனை எதிர்க்கின்றது.
பச்சை பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள் பற்றி சித்தர்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே கூறியுள்ளனர்.
அப்பான் முகூர்த்தத்து ளைங்கடிக்குள் ளுண்பது
மிப்பான மனுதர் விழிதாகு மூப்பாயி
கஞ்சத்தான் காண்டற் கரியனகிலமுன்
தஞ்சத்தானுண்ட விருந்தாம்.
பசும்பால் கறந்த ஐந்து நாழிகைக்குள் [2- மணி நேரம்]உண்பது நன்று. அவ்வாறு உண்டால் அப் பால் தேவாமிர்தத்துக்கு ஒப்பாகும். ஐந்து நாழிகைக்கு மேல் உண்டால் கைலாசபதி உண்ட ஆலகால விஷத்திற்கு ஒப்பாகும்.
காலையில் காய்ச்சாத பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள்
சூரிய உதய காலத்தில் பச்சை புல் மேய்ந்த ஆரோக்யமான பசுவின் பசும்பால் உண்பதால் கை கால் எரிச்சல், திரேக எரிச்சல், மஞ்சள் காமாலை,பாண்டு,இரத்த பித்தம், மார்பு சளி, போன்ற நோய்கள் தீரும்.தேகம் ஒளிவிடும், தாது புஷ்டி உண்டாகும்,மேலும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மிஞ்சிய வலிமை தரும். பாலை கரந்து சுத்தமான துணியில் 3 முறை வடிகட்டி சூடு ஆறுவதற்கு முன்பு உண்பது மிகவும் உத்தமம்.
சித்த மருத்துவ முறையில் மூலநோய், இரத்த மூலம், மஞ்சள் காமாலை, குடற்புண், தோல் நோய்கள், போன்ற நோய்களை குணப்படுத்த பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மூலிகைகளை அரைத்து காய்ச்சாத பசும்பாலில் கலந்து கொடுத்து இன்றும் குணப்படுத்தி வருகின்றனர்.
பசுப்பால் சளியை தடுக்கும்
“இவனுக்கு சளி அடிக்கடி பிடிக்கிறபடியால் நான் பசுப்பால் கொடுக்கிறதில்லை” என்றாள் தாய்.
வளரும் குழந்தை முன்பள்ளிக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறான்.
“நீங்கள் செய்வது தவறு. அவனது வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் பால் அவசியம் அல்லவா?” எனக் கேட்டேன்.
மாப் பால் கரைத்துக் கொடுப்பதாக சொன்னாள்.
பசும் பாலுக்கு சளிபிடிக்கும் என்பது அவளது நம்பிக்கை.
அவள் மட்டுமல்ல எல்லாப் பெற்றோர்களது நம்பிக்கையும் கூட,
ஒட்டு மொத்த தமிழ் மக்களது நம்பிக்கை என்று கூட சொல்லலாம்.
அந்த நம்பிக்கை முற்று முழுதாக தவறானது என அண்மையில் ஆய்வு சொல்கிறது.
பசும்பாலுக்கு சளிபிடிக்காது என்று மட்டுமல்ல, அது சளிக்குக் காரணமான ஆஸ்மா, அலர்ஜி(ஒவ்வாமை) ஆகிய நோய்கள் வருவதற்கான சாத்தியத்தைக் குறைக்கிறது என ஆய்வு செய்த டொக்டர் மக்ரோவாசர் ( Dr. Macro waser) கூறுகிறார். இவர் சுவிட் சர்லாந்து நாட்டு பஸல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்.
பதனிடப் படாத பாலைக் குடித்த பிள்ளைகளுக்கு அல்லது அதிலிருந்து வீட்டில் தயாரிக்கப்பட்ட பாற் பொருட்களை உண்ட பிள்ளைகளுக்கு ஆஸ்மா அலர்ஜி ஆகியன ஏற்படுவது குறைவாம்.
5 முதல் 13 வயது வரையான 14893 பேரை உள்ளடக்கிய ஆய்வு இது.
இக் குழந்தைகள் பாற்பண்ணை, கிராமம், நகரம் எனப் பல்வேறு சூழல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
அவர்கள் எந்தச் சூழலிருந்து வந்தாலும் பசும்பால் சளியிலிருந்து பாதுகாப்பு கொடுத்தது. பசும்பாலை ஒரு வயது முதல் குடித்து வந்த குழந்தைகளுக்கு கூடியளவு நன்மை கிடைத்ததாம்.
பசும்பாலை பச்சையாகக் கொடுக்கக் கூடாது. காய்ச்சித்தான் கொடுக்க வேண்டும்.
இல்லையேல் சில நோய்கள் தொற்றக்கூடும்.
இத்தகைய காய்ச்சிய பால் தான் பாதுகாப்பை கொடுத்தது.
பதனிடப்பட்டு பைக்கற்றில் அடைக்கப்பட்ட பாலோ, மாப்பாலோ அத்தகைய பாதுகாப்பை கொடுப்பதாக அறியப்படவில்லை.
இதிலிருந்து சளிபிடிப்பவர்களுக்கு பசும்பால் கொடுக்காது மாப்பால் கொடுப்பது எந்த விதத்திலும் உதவப் போவதில்லை என்பது தெளிவாகிறது.
அத்துடன் சிறு வயதிலிருந்தே, அதாவது ஒரு வயது முதற் கொண்டு தினசரி பசும்பால் கொடுத்துவந்தால் ஆஸ்மா, அலர்ஜி போன்ற சளித்தொல்லைகளும் அதிகம் வராது என்பதும் தெளிவாகிறது.
எனவே உங்கள் குழந்தைக்கு சளித்தொல்லை இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி பசும்பால் கொடுத்து வாருங்கள். அதனால் சளித்தொல்லை குறைவதுடன் ஆரோக்கியமும் கிட்டும்.
பசும்பாலில் உள்ள என்ன பொருள் அல்லது என்ன குணாதிசயம், அலர்ஜிக்கும் ஆஸ்மாவிற்கும் எதிரான பாதுகாப்பைக் கொடுக்கின்றது என்று அறிய ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
புற்றுநோயை குணப்படுத்தும் பசும்பால்
பெய்ஜிங் : வயிற்றுப் புற்றுநோய்க்கு காரணமாக அமையும் செல்களை அழிக்கும் திறன் பசும்பாலுக்கு உண்டு என்று தைவானைச் சேர்ந்த அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பசும்பாலில் லாக்டோபெரிசின் பி25 என்ற கூறு உள்ளது. இது, மனிதர்களின் வயிற்றில் உருவாகும் புற்றுநோய் செல்களை முற்றிலுமாக அழித்துவிடும் திறனுடையது.
வயிற்றுப் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் மீது லாக்டோபெரிசின் பி25 மூலக்கூறை வைத்து சோதனை நடத்தியபோது, 24 மணி நேரத்தில் அவை புற்றுநோய் செல்களை செயலிழப்பு செய்ய வைத்து அவற்றின் பரவும் திறனை முடக்குவது தெரியவந்தது.
பசும்பால் குடித்தால் அறிவு வளரும்!
பாரம்பரிய பசும்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள், மற்ற பாலைக் குடித்து வளரும் குழந்தைகளை விட நல்ல அறிவுத்திறன் பெற்றவர்களாக விளங்குகின்றனர் என்று குஜராத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹித்தேஷ் ஜானி கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் கோமாதாவின் சிறப்புகள் தொடர்பாக 3 நாட்கள் நடைபெற்று வரும் தேசிய கருத்தரங்கில், கிராமப்புற மக்களுக்கு பயன்படும் வகையில் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காத, அதேநேரத்தில் எளிதாக பராமரிக்கும் வகையிலான கால்நடை பாதுகாப்பு மையத்தை அமைப்பது தொடர்பான தனது ஆய்வை பேராசிரியர் ஹித்தேஷ் ஜானி சமர்ப்பித்துள்ளார்.அந்த ஆய்வு அறிக்கையை அளித்த பின்னர் , மனிதனின் அறிவுத்திறன் வளர்ச்சிக்கு, கொழுப்புச்சத்து குறைந்த அளவு உள்ள பசும்பால் தான் சிறந்தது என்று அவர் கூறினார்.
ஜாம்நகரையடுத்த ஐஸ்வர்யா கிராமத்தில் உள்ள பெண்கள் கூட்டுறவு அமைப்புகள் பசுமாட்டின் சிறுநீரை (கோமியம்) விற்று அதிகம் லாபம் ஈட்டி வருகின்றனர். மேலும் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் சற்று உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பசுவின் சிறுநீர் எலும்புருக்கி நோயைக் குணப்படுத்த பயன்படுவதைச் சுட்டிக் காட்டினார். தற்போது 31 வகையான பசு இனங்கள் உள்ளதாகவும், பிராமிண் பசு என்றழைக்கப்படும் வகை பசுக்கள் இத்தாலி, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகிறது என்றும், அந்த வகைப் பசுக்கள் குஜராத்திலும் காணப்படுவதாக கூறினார்.
பசுவில் இருந்து கிடைக்கும் 5 விதமான பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் பஞ்சகாவ்யம் மனிதனின் நோய்களைக் குணமாக்குவதுடன், விவசாயத்துக்கும் பயன்படுவதாக இக்கருத்தரங்கில் கலந்துக் கொண்ட தமிழக கிராம சமுதாய செயலாக்க மையத்தின் தலைவர் கே.நடராஜன் தெரிவித்துள்ளார்.
பசும்பால் — மெலடோனின் ஹார்மோனை சீராக சுரக்கச் செய்கிறது
பசும்பால் மூலம் கிடைக்கும் பயன்கள் தொடர்பாக ஜெர்மனியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பசு மாடு பற்றித் தெரியுமா?
பசு மாட்டின் ஆண் இனம் காளை என்றும் அதன் குட்டி கன்று என்றும் அழைக்கப்படுகிறது.
பசு மாட்டால் மாடிப்படியை ஏறமுடியும். ஆனால் இறங்க முடியாது. ஏனென்றால் அதன் முழங்கால் சரியாக வளைந்து கொடுக்காது.
பசு மாடு முதன் முறை குட்டி ஈன்ற பிறகுதான் பால் கொடுக்கும்.
பசு மாடு தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 2 – 4 லட்சம் லிட்டர் வரை பால் கொடுக்க வல்லது.
ஒரு நாளில் 10 – 15 முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்கும்.
சாதாரணமாக 500 கிலோ எடை உள்ள பசு மாடு ஆண்டுக்கு சுமார் 10 டன் சாணியை கொடுக்கும்.
ஒரு நாளில் 6 – 7 மணி நேரம் இரை உண்ணவும் 7 – 8 மணி நேரம் அதனை அசை போடவும் பசுவுக்குத் தேவை.
அசை போடும் போது நிமிடத்திற்கு சுமார் 40 – 50 முறை தாடையை அசைக்க வேண்டி வருகிறது.
இப்படி ஒரு நாளைக்கு 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் முறை தாடையை அசைக்கிறது.
ஒரு பசு மாடு நாள் ஒன்றுக்கு 10 – 12 லிட்டர் சிறு நீரும் 15 – 20 கிலோ சாணியும் வெளியேற்றுகிறது. இன்னும் பெரிய மாடாக இருந்தால் இது அதிகமாகும்.
பசு மாடு ஒரு நாளில் சுமார் 100 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கவல்லது.
மாடு பற்களால் புல்லைக் கடிப்பதில்லை. நாக்கு மற்றும் ஈற்றால் பிடுங்கிச் சாப்பிடுகின்றது.
பசு மாட்டுக்கு ஒரு வயிறுதான் உண்டு. ஆனால் அதில் உணவை ஜீரணிப்பதற்காக 4 பகுதிகள் உள்ளன.
மாட்டின் கண்கள் முகத்தின் இருபுறமும் அமைந்துள்ளதால் கிட்டத்தட்ட 4 பக்கமும் (360 டிகிரி முழு வட்டம்) ஒரே சமயத்தில் பார்க்கவல்லது.
பசு மாட்டின் நுகருணர்வு மிகவும் கூர்மையானது. சுமார் 6 – 8 கி.மீ. தூரத்திலுள்ள பசுமையை நுகர்ந்து கண்டு கொள்ளும்.
கறக்கும் பசு மாடு நாளுக்கு சுமார் 40 – 50 லிட்டர் உமிழ் நீரை சுரந்து ஜீரணத்துக்கு பயன்படுகிறது..
பசு மாட்டின் உடல் வெப்ப நிலை 101.5 டிகிரி ஃபாரன்ஹீட்.
உலகத்தில் உற்பத்தியாகும் மொத்த பாலில் 90 சதவீதம் பசும்பால்.
உலகத்திலேயே அதிகமாக பால் சுரந்த பெருமை ஹோல்ஸ்டைன் இனத்தைச் சேர்ந்த மாட்டைச் சேரும். அது ஒரு ஆண்டில் சுமார் 26,897 கிலோ லிட்டர் பாலைச் சுரந்தது.
ஒரே நாளில் 97 கிலோ பாலைச் சுரந்து உலகச் சாதனை செய்த மாட்டின் பெயர் உர்பே ஆகும்.
இதுவரை அதிக நாட்கள் வாழ்ந்த மாட்டின் வயது 48 ஆண்டுகள், 9 மாதங்கள் ஆகும்.