சனியின் துணைக்கோள் டைட்டனின் கடலை ஆராய நீர்மூழ்கிக் கப்பலும், படகும்… அனுப்புகிறது நாசா!
நியூயார்க்:
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, சனிக் கிரகத்தின் துணைக்கோளான டைட்டனில் உள்ள கடல் பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக படகு மற்றும் நீர்மூழ்கிக் கப்பலை அனுப்பவுள்ளதாம்.
சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களில் பூமியைத் தவிர்த்து கடல் நீரைப் பெற்றுள்ளது டைட்டன் துணைக் கோள் மட்டுமே. எனவே, டைட்டனில் அமைந்துள்ள கடலின் நீரை ஆராய்வதற்காக முன்னதாக நாசா சார்பில் படகு ஒன்றை அனுப்பத் திட்டமிடப்பட்டது.
ஆனால், பூமியில் உள்ள கடல்களில் வெறும் படகு மூலம் சென்று ஆராய்ச்சி மேற்கொண்டால் எப்படி சிரமமாக இருக்குமோ, முழுமையாக இருக்காதோ, அதே போலத்தான் டைட்டன் படகு ஆராய்ச்சியும் அமையும் என ஆய்வாளர் ஸ்டீவன் ஓல்சன் என்ற ஆய்வாளர் கூறியிருந்தார்.
நீர்மூழ்கிக் கப்பலும்….
இந்த நிலையில் தற்போது படகுடன், நீர்மூழ்கிக் கப்பலையும் சேர்த்து அனுப்பி ஆய்வு நடத்த நாசா முடிவு செய்துள்ளது.
அதிநுட்ப தொழில்நுட்பம்…
இந்த விண்வெளி நீர்மூழ்கி கப்பலானது, நாசாவின் அதிநுட்ப தொழில்நுட்பத்தில் அமைகிறது.
தொடர்பு கொள்ளும் திறன்…
மேலும் இது டைட்டனின் கடலுக்கடியிலிருந்து பூமியில் உள்ள நாசா ஆய்வகத்தைத் தொடர்பு கொள்ளும் திறனுடன் கூடியதாகவும் இருக்கும்.
வருங்கால ஆராய்ச்சி..
மேலும், இந்த டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலானது வருங்கால விண்வெளியில் உள்ள கடல்கள் குறித்து ஆராய்வதற்கு ஒரு முன்னோடியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.