Home » படித்ததில் பிடித்தது » கணவன் மனைவியிடம் எதிர்பார்பது!!!
கணவன் மனைவியிடம் எதிர்பார்பது!!!

கணவன் மனைவியிடம் எதிர்பார்பது!!!

கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம்  நடத்த ஆசைதான்.  அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது.

இந்த நிலை மாற குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை?

கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன?

குழந்தைகளை தன்னம்பிக்கையுடன் வளர்ப்பது எப்படி?

குடும்ப மகிழ்ச்சியில் உறுப்பினர்களின் பங்கு என்ன?

வரவு,செலவை வரையறுப்பது எப்படி?

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.

2. காலையில் ஆறு மணிக்கு முன் எழுந்திருத்தல்.

3. எப்போதும் சிரித்த முகம்.

4. நேரம் பாராது உபசரித்தல்.

5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.

6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.

7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.

8. அதிகாரம் பணணக் கூடாது.

9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி  பிரிப்புகூடாது.

10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்தவேண்டும்.

11. கணவனை சந்தேகப்படக் கூடாது.

12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.

13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.

14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக்கூடாது.

15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.

16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.

17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.

18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.

20. கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக்   கூடாது.

21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.

23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.

24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.

25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல்ஆடை, அலங்காரம் செய்ய   வேண்டும்.

26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.

27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.

28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டைஅழகாக வைத்துக்   கொள்ள வேண்டும்.

29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

30. உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில்எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.

31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.

32. அதிகம் சினிமா /  அழுமூஞ்சி தொலைகாட்சி தொடர்களைப் பார்க்கக்கூடாது. 

33. உடற்பயிற்சி செய்து உடம்பை சிலிம் ஆகவைத்துக் கொள்ள வேண்டும்.

குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?

1. வருமானம்

2. ஒத்துழைப்பு

3. மனித நேயம்

4. பொழுதுபோக்கு

5. ரசனை

6. ஆரோக்கியம்

7. மனப்பக்குவம்

8. சேமிப்பு

9. கூட்டு முயற்சி

10. குழந்தைகள்

எதற்கும் யார் பொறுப்பு?

நமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அன்றாடம்அனேகம் பேரைச் சந்திக்கிறோம் உதவி கேட்கின்றோம்.

ஆணையிடுகிறோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெற்றிபெறுகிறோமா? பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமேமிஞ்சுகின்றன.

விளைவாக – விரக்தியும், இரத்த அழுத்தம், நரம்புத்தளர்ச்சி, தீராத கவலை, அமைதியின்மை, மது, சிகரெட் பழக்கம், தூக்கமின்மை, ஒத்துப்போக இயலாமை , உணர்ச்சி வசப்படுதல் அஜீரணம் ஏன்   இந்த நிலை? நாம் மகிழ்வாக இருக்க, நம்மால் பிறரும் மகிழச்சி பெற ,பிறர் நம்மை விரும்ப, பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பிறரிடம் நம்காரியங்களைச் சாதித்துக் கொள்ள …

பத்து கட்டளைகள்

1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.

2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.

3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.

4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக்கொள்ளுங்கள்.

5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.

6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியானசைகை, முகபாவத்துடன்   தெளிவாகப் பேசுங்கள்.

7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப்படுத்துங்கள்.

8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக்கொடுத்தல்   ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.

9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்.

10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில்மதிப்பிடாதீர்கள். 

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில்மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள்என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்   தனியாக டிக் செய்து கண்டுபிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.

2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.

3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.

4. விரும்பியதைப் பெற இயலாமை.

5. ஒருவரையொருவர் நம்பாமை.

6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.

7. உலலாசப் பயணம் போக இயாலாமை.

8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.

9. விருந்தினர் குறைவு.

10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.

11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.

12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.

13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.

14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.

உங்கள் பங்கு என்ன?

உங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்க அல்லது அதில் மகிழ்ச்சியைக்குறைக்க, தான் எந்த அளவு   காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து இல்லாததைக் கொண்டு வர வேண்டும்.

1. அன்பாகப் பேசுவது.

2. பிறர் மீது அக்கறை காட்டுவது.

3. வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.

4. குறை கூறாமல் இருப்பது.

5. சொன்னதைச் செய்து கொடுப்பது.

6. இன்முகத்துடன் இருப்பது.

7.முன் மாதிரியாக நடந்து கொள்வது.

8. பிறரை நம்புவது.

9. ஒன்றாக உல்லாசப் பயணம் போக விரும்புவது.

10. பணிவு.

11. எதையும் எடுத்த, உரிய இடத்தில் வைப்பது.

12. பிறர் வேலைகளில் உதவுவது.

13. பிறருக்கு விட்டுக் கொடுப்பது.

14. பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது. 

15. சுறுசுறுப்பு.

16. சிறிய விசயங்களைக் கூடப் பாராட்டுவது.

17. புதிய முயற்சிகளை ஊக்குவிப்பது.

18. நகைச்சுவையாகப் பேசுவது.

19. அதிகமாக வேலை செய்ய விரும்புவது.

20. செலவுகளைக் குறைக்க ஆலோசனை கூறுவது.

21. நேரம் தவறாமை.

22. தற்பெருமை பேசாமல் இருப்பது.

23. தெளிவாகப் பேசுவது.

24. நேர்மையாய் இருப்பது.

25. பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது.

வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம்வெற்றியை எட்டிப்பிடிப்போம். “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top