Home » படித்ததில் பிடித்தது » வ. உ. சிதம்பரம் பிள்ளை!!!
வ. உ. சிதம்பரம் பிள்ளை!!!

வ. உ. சிதம்பரம் பிள்ளை!!!

வ.உ.சி.யின் குடும்பமே வக்கீல் குடும்பம்.

வெள்ளைக்காரனுக்கு எதிராக சுதேசி கப்பல்விட்ட கம்பீரமான வ.உ.சி.க்கு ஆங்கிலேயே அரசு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது.

உடம்பு முழுவதும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவரைச் செக்கிழுக்கச் சொல்லிஉத்தரவிட்டது.

வ. உ. சிதம்பரம் பிள்ளை

 வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவரும் கூட. தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் வலுவான தொழிற்சங்கங்கள் இயங்க தலைமை வகித்தாலும், ஆங்கிலேயர்களிடமிருந்து இந்திய சுதந்திரத்திற்காக போராடினார். தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவை அமைத்த மனிதர் என எல்லோராலும் நினைவு கூறப்படுகிறார்.

அவருக்கு, புரட்சி மனப்பான்மையும், ஆங்கிலேயருக்கு எதிராக தைரியமாக செயல்படும் திறனும் இருந்ததால், அவரது ‘பாரிஸ்டர் பட்டம்’ பறிக்கப்பட்டது. அவரது துணிச்சலான தன்மையே அவருக்கு ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று தமிழ்நாட்டில் பெயரெடுக்க வைத்தது.

இதனையே ஆங்கிலத்தில், ‘தமிழ் ஹெல்ம்ஸ்மேன்’ என்று கூறுகின்றனர். ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சுதந்திரத்திற்காக அவஇது பங்களிப்பைப் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: செப்டம்பர் 51872

பிறந்த இடம்: ஒட்டப்பிடாரம்தமிழ்நாடுஇந்தியா

இறப்பு: நவம்பர் 181936

தொழில்: வக்கீல்அரசியல்வாதி

நாட்டுரிமை: இந்தியா

 பிறப்பு

வ. உ. சி அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒட்டப்பிடாரத்தில் செப்டம்பர் 5, 1872ல் பிறந்தார்.

குழந்தை பருவமும் சட்டத்துறையும்

அவரது தந்தை உலகநாதன் பிள்ளை நாட்டின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவர். இதுவே, தனது கல்வி முடிந்த பிறகு, அவரைத் தனது தந்தையின் வழியில் தொடர்ந்து செல்ல ஊக்குவித்தது. அவர், தனது சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்திலும், அருகிலுள்ள திருநெல்வேலி பள்ளிகளிளும் சேர்ந்து கல்விப் பயின்றார்.

தனது பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, ஒட்டப்பிடாரத்திலுள்ள மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர், அவர் சட்டப்பள்ளியில் சேர்ந்து, சட்ட ஆய்வுகளை நிறைவு செய்து அவரது தந்தை உலகநாதன் பிள்ளை போலவே ஒரு வழக்கறிஞரானார்.

சட்டத்தொழிலில், அவரின் மிகப் பெரிய உத்வேகமாக அவரது தந்தை இருந்தாலும், அவருக்கும், அவரது தந்தை உலகநாதன் பிள்ளை அவர்களுக்கும் செயல்படும் பாணிகளில் ஒரு அடிப்படை வேறுபாடு இருந்தது. அவரது தந்தை சமுதாயத்தில் பணக்காரர்களின் பிரச்சினைகளில் மட்டும் வாதாடுபவர்.

ஆனால், வ.உ.சி அவர்கள், ஏழை மக்களின் மீது கொண்ட அனுதாபத்தின் காரணமாக, பல தருணங்களில் தனது செல்வாக்குமிக்க தந்தையின் விருப்பத்திற்கு எதிராகவும் வாதாடியிருக்கிறார். தமிழ்நாட்டில் ‘மூன்று துணை நீதிபதிகளின் ஊழல் குற்றச்சாட்டுகள் என்ற வழக்கில்’ சிறப்பாக வாதாடிக் குற்றவாளிகளை நிரூபித்ததால், அவர் பலராலும் ஈர்க்கப்பட்டு, மிகச் சிறந்த வழக்கறிஞர் என்ற புகழ் பெற்றார்.

அரசியல் வாழ்க்கை

செயல்மிகு அரசியலில் நுழையும் பொருட்டாக, 1905ல் வ. உ. சி அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார். இந்தியாவில் சுதேசி இயக்கம் தலைத்தூக்கிய அந்த நேரத்தில், தலைவர்களான லாலா லஜ்பத் ராய், பாலகங்காதர திலகர் போன்ற பலரும் ஆங்கிலேய வர்த்தக பேரரசின் வற்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்தனர்.

அதே காரணத்திற்காகவும், இந்தியப் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் அவற்றை சார்ந்த சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரபிந்தோ கோஷ், சுப்ரமணிய சிவா மற்றும் சுப்ரமணிய பாரதி அவர்கள் சென்னை மாகாணத்திலிருந்து போராடினார்கள்.

இதுவே, வ.உ.சியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேரவும், சென்னை மாகாணத்தின் உறுப்பினர்களுடன் இணைந்துப் போராடவும் தூண்டியது. பின்னர், அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சேலம் மாவட்ட அமர்வில் தலைமைத் தாங்கினார்.

கப்பல் நிறுவனம்

இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தவுடன்,  இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக அவர்  முழு மனதுடன் சுதேசிப் பணியில் மூழ்கினார். அவரது சுதேசி வேலையின் ஒரு பகுதியாக, இலங்கை கடலோரங்களிலுள்ள ஆங்கிலேய கப்பல் போக்குவரத்தின் ஏகபோகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார். சுதந்திர போராட்ட வீரர் ராமக்ருஷ்ணானந்தாவால் ஈர்க்கப்பட்ட அவர், நவம்பர் 12, 1906ல், ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தை’ நிறுவினார்.

தனது கப்பல் போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்க, இரண்டு நீராவி கப்பல்களான “எஸ்.எஸ்.காலியோவையும், எஸ்.எஸ். லாவோவையும்”, மற்ற சுதேசி உறுப்பினர்களான அரபிந்தோ கோஷ் மற்றும் பால கங்காதர திலகர் உதவியுடன் வாங்கினார். ஆங்கிலேய அரசாங்கம் மற்றும் ஆங்கிலேய வியாபாரிகளின் கோபத்தைத் தாண்டியும், வ.உ.சியின் கப்பல்கள் தூத்துக்குடி-கொழும்பு இடையே வழக்கமான சேவைகளைத் தொடங்கியது.

அவரது கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒரு வர்த்தக மையமாக மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு இந்தியர் அமைக்கப்பட்ட முதல் விரிவான கப்பல் போக்குவரத்து சேவையாகவும் இருந்தது. ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’, பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கு கடும் போட்டியாக இருந்தது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, வ.உ.சியும் தனது கப்பல் கட்டணத்தை மேலும் குறைத்தார்.

கடைசியில், பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி பயணிகளை இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது. மேலும், பயணிகளுக்கு  இலவச சவாரி மற்றும் குடைகள் வழங்கும் உத்திகளைக் கையாண்டனர், ஆங்கிலேயர்கள். ஆனால், வ.உ.சியால் அவ்வாறு முடியவில்லை. இதனால், சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி திவாலாகும் விளிம்பிற்கே சென்றது.

தேசிய மனப்பான்மை

அவர், நாட்டில் சுதேசி இயக்கத்தை விரிவாக்கவும், தவறான ஆங்கிலேய அரசாங்கத்தைப் பற்றி இந்திய மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நோக்கத்துடன் இருந்தார். இதன் நோக்கமாக அவர், திருநெல்வேலியிலுள்ள ‘கோரல் மில்ஸ்’ தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்றார்.

ஆங்கிலேய அதிகாரிகள் ஏற்கனவே அவர் மீது கொண்ட வெறுப்பினால், இச்செயலை அரசாங்கத்திற்கு எதிரான துரோகம் என்று குற்றம் சாட்டி, மார்ச் 12, 1908 அன்று அவரைக் கைது செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டனர். அவரைக் கைது செய்தப் பின்னர், நாட்டில் வன்முறை வெடித்தது. இதனால், காவல் அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டு, நான்கு பேர் மரணம் அடைந்தனர்.

ஆங்கிலேய அதிகாரிகள், அவரது செயல்களுக்குத் தீவிரமாக கண்டனம் தெரிவித்தாலும், நாட்டின் ஊடக ஆதரவு கிடைத்ததால், அவரின் தேசிய உணர்வை அவர்கள் நாளிதழ்கள் மூலமாக விரிவாகப் பாராட்டினார்கள். ஆங்கிலேயர்கள், அவருக்கு எதிராக வழக்குத் தொடர முயற்சித்தாலும், நாட்டிலுள்ள இந்தியர்கள், சிறையிலிருந்து அவரை விடுவிக்க நிதி சேகரித்தனர்.

அச்சமயம், தென் ஆஃப்ரிக்காவிலிருந்த மகாத்மா காந்தியும், வ.உ.சியின் பாதுகாப்பிற்காக, மேலும் நிதி சேகரித்து இந்தியாவுக்கு அனுப்பினார். தனது கைதுக்குப் பின்னர்,  அவர் கோயம்புத்தூரிலுள்ள மத்திய சிறையில் ஜூலை 9, 1908 முதல் டிசம்பர் 1, 1910 அடைக்கப்பட்டார். அவரின் புரட்சிகரமான மனப்பான்மையைப் பார்த்து அஞ்சிய ஆங்கிலேயர்கள், தெளிவாக அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தனர்.

சிறையில் இருந்த அந்நாட்களில், மற்ற அரசியல் கைதிகளுக்குக் கிடைத்த சலுகைகள் அவருக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும், அவர் மற்ற குற்றவாளிகள் போல சிறையில் கடின உழைப்பில்  ஈடுபட்டார். அவரது இந்த கடின உழைப்பு, அவரின் உடல்நிலையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, அவரது உடல்நலம் படிப்படியாக சரிந்தது.

இதனால் ஆங்கிலேய அதிகாரிகள் அவரை விடுதலை செய்யும் கட்டாயத்தில் தள்ளப்பட்டதால், டிசம்பர் 12, 1912 அன்று அவரை விடுதலை செய்தனர். சிறையில் இருக்கும் போது,  அவர் தனது சட்ட மனுக்கள் மூலம் அவரது சுதேசி நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். சிறையில் கொடுமையான சூழ்நிலை நிலவியதால், அவர் விடுதலை செய்யப்பட்டார்.

அவரின் விடுதலைக்குப் பின், சிறை வாயிலின் முன்பு பெருமளவு தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை எதிர்பார்த்த அவருக்கு அச்சம் விளைவிக்கிற அளவுக்கு அமைதி காத்திருந்தது. இது, அவருக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது. ‘பாரிஸ்டர் பட்டம்’ அவரிடமிருந்து பறிக்கப்பட்டதால், அவரால் சட்டப் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனமும் 1911ல் ஒழிக்கப்பட்டதால்,  அவர் ஏழ்மை நிலையை அடைந்தார்.

அவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் குடியேறினார். பின்னர், சென்னையிலுள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் நல அமைப்புகளின் தலைவரானார். 1920ல், அவர், இந்திய தேசிய காங்கிரஸின் கல்கத்தா அமர்வில் ஆயத்தமானார்.

இலக்கிய படைப்புகள்

அரசியல்வாதியாகவும், வழக்கறிஞராகவும் அவர் ஆற்றிய பணிகளைத் தவிர, அவர் ஒரு சிறந்த அறிஞரும் ஆவார். சிறையில் இருந்தபோது, தனது சுயசரிதையைத் தொடங்கிய அவர், 1912ல் சிறையிலிருந்து விடுதலைப் பெற்ற பின், அதனை நிறைவு செய்தார். அவர், ஒரு சில நாவல்களையும் எழுதியுள்ளார். அவர், தத்துவ எழுத்தாளாரான ஜேம்ஸ் ஆலன் அவர்களின் பல படைப்புகளை தமிழில் மொழிப் பெயர்த்துள்ளார். தமிழில் மிக முக்கியமான படைப்புகளான திருக்குறள் மற்றும் தொல்காப்பியத்தின் தொகுப்புகளையும் வெளியுட்டுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

அவர், 1895ல் வள்ளியம்மையை மணமுடித்தார். ஆனால், அவரது மனைவி 1901ல் இறந்தார். ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர், அவர்  மீனாட்சி அம்மையாரைத் திருமணம் செய்தார். அவர்களுக்கு நான்கு மகன்களும், நான்கு மகள்களும் இருந்தனர். அவருடைய மூத்த மகன், தனது இளமைப் பருவத்திலேயே இறந்து விட்டார். அவரது இரண்டாவது மகன், ஒரு அரசியல்வாதி. மூன்றாவது மகன், சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றுகிறார். நான்காவது மகன், இன்னும் மதுரையில் வசித்து வருகிறார். அவரது மகள்கள் அனைவரும் சென்னையில் மணமுடித்து வசிக்கின்றனர். அவரது வம்சாவளிகள் இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.

இறப்பு

ஆங்கிலேயர்களைக் கடுமையாக எதிர்த்ததால், அவரது வழக்கறிஞர் பட்டம் பறிக்கப்பட்டு, அவரை சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து வெளிவந்த பின், அவர் ஏழ்மையான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். ஆனால், தனது கடன்களைத் திருப்பி செலுத்தாததால், அவர் தனது வாழ்வின் இறுதி வரை வறுமையில் வாழ்ந்து வந்தார். அவரது இறுதி மூச்சை, தூத்துக்குடியிலுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் அலுவலகத்தில், நவம்பர்  18, 1936அன்று விட்டார்.

நினைவஞ்சலி

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கியமான ஒருவராக நினைவு கூறப்பட்டவர், வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை அவர்கள். அவர், தமிழ்நாட்டில் இன்று வரையிலும், பலரால் மிகவும் நேசிக்கவும், கொண்டாடப்படுபவரும் கூட.

‘கப்பலோட்டிய தமிழன்’ என்றும் ‘தமிழ் ஹெல்ம்ஸ்மேன்’ என்றும் ‘கப்பல் செலுத்துகிற திசையைக் காட்டுபவர்’ என்ற பட்டங்களைப் பெற்றார்.

சுதந்திரத்திற்கு பின்னர், அவரை நினைவுகூரும் வகையில், தூத்துக்குடி துறைமுகம் ‘வ.உ.சி போர்ட்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அவரது பெயரில் தூத்துக்குடியில் ஒரு கல்லூரியும் உள்ளது.

செப்டம்பர்  5, 1972, அவரது நூற்றாண்டு விழாவை நினைவுக்ப்ப்ரும் வகையில், இந்திய தபால் மற்றும் தந்தித்தொடர்புத் துறை ஒரு சிறப்பு தபால்தலையை அவரின் பெயரில் வெளியிட்டது.

கோயம்புத்தூரிலுள்ள ‘வ.உ.சி பூங்கா’ மற்றும் ‘வ.உ.சி மைதானம்’ மிக முக்கியமான பொது பூங்காவாகவும், சந்திப்புக் கூடமாகவும் இருக்கின்றது.

விடுதலைப் போராட்டத்தில், அவரது புரட்சிகரமான செயலுக்காக கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறை வளாகத்தில் உள்ளே ஒரு ‘நினைவுச்சின்னம்’ அவருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும் பாலத்திற்கு ‘வ.உ.சி பாலம்’ என பெயரிடப்பட்டது.

‘கப்பலோட்டிய தமிழன் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை’ வாழ்க்கைக் கதையை அடிப்படையாக கொண்டு, 1961ல் தமிழ் படம் வெளியானது. அதன் முன்னணி பாத்திரமாக சிவாஜி கணேசன் அவர்கள் நடித்துள்ளார்.

 

‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரம் பிள்ளை

voc_raattai

மலர்வு :- செப்டம்பர் 5, 1872 ஓட்டப்பிடாரம் || மறைவு :- நவம்பர் 18, 1936 தூத்துக்குடி

விடுதலைப்போரில் தமிழகம் காலத்துக்கும் உச்சரிக்க வேண்டிய பெயர்களில் முன்னணியில் இருப்பது இவரின் பணிகள். வக்கீல் தொழிலில் பெரும்பொருள் ஈட்டிக்கொண்டு இருந்தார் அவர். குற்றவியல் வழக்குகளில் வ.உ.சி உள்ளே நுழைகிறார் என்றால் நீதிமன்றமே ஆடிப்போகும்.எளியவர்களுக்கு இலவசமாக வாதிடுகிற பண்பும் அவரிடம் நிறைந்து இருந்தது.

பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்றோரால் கவரப்பட்டு நாட்டின் விடுதலைப்போரில் பங்குகொண்டார் வ.உ.சி. இதையடுத்து 1905-ஆம் ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு, சுதந்திரப் போராட்டத்தில் வ.உ.சி. ஈடுபட்டார். அவரின் பற்றால் அவரை ‘வந்தே மாதரம் பிள்ளை ‘ என்று அழைத்தார்கள் தலைவர்கள்.

இந்தியாவை ஆங்கிலேயர் சுரண்டிக்கொண்டு இருப்பதையும்,வர்த்தகத்தில் தங்களின் ஆதிக்கத்தின் மூலம் இந்தியாவை வறுமையில் வாடவிடுவதையும் வ.உ.சி உணர்ந்தார். சுதேசி நாவாய் சங்கத்தை உருவாக்கினார். ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி எனும் நிறுவனத்திடம் இருந்து கப்பல்கள் வாடகைக்கு எடுத்தார். ஆங்கிலேய அரசு முட்டுக்கட்டை போட்டது. கிளம்பிப்போய் கொழும்பில் இருந்து கப்பல்கள் வாடகைக்கு கொண்டு வந்தார்.

இருந்தாலும் சொந்த கப்பல் தேவை என்று உணர்ந்து எங்கெங்கோ அலைந்து காலியா எனும் கப்பலை கொண்டு வந்தார் ; வேதமூர்த்தி பிரான்ஸ் தேசம் சென்று “எஸ்.எஸ். லாவோ” கப்பலை வாங்கி வந்தார். ஆங்கிலேய அரசின் வியாபாரம் பாதிக்கப்பட்டது. விலையை குறைத்து ஈடு கொடுத்தது அரசு. இவரும் குறைத்துப்பார்த்தார். இறுதியில் கப்பலில் ஏறினாலே குடை இலவசம் என்று அரசு அறிவிக்க மக்கள் கூட்டம் அங்கே போனது

தொழிற்சங்கங்கள் தமிழ்நாட்டில் இல்லாத காலத்திலேயே தூத்துக்குடியில் கோரல் நூற்பாலையில் தொழிலாளர் போராட்டத்தை முன்னின்று நடத்தினார் வ.உ.சி. பன்னிரண்டு மணிநேரம் ஓயாமல் வேலை,விடுமுறையே இல்லாத சூழல் ஆகியவற்றை ஒன்பது நாள் போராட்டத்தின் மூலம் வென்று காட்டினார். விடுமுறை,வேலை நேரம் குறைப்பு முதலிய சலுகைகள் பெறப்பட்டன. அப்பொழுது தன்னுடைய செல்வத்தின் பெரும்பகுதியை இதற்கென்று செலவு செய்தார்.

பிபன் சந்திர பால் மார்ச் ஒன்பதை விடுதலை நாளாக கொண்டாட அழைப்பு விடுத்ததும் வ.உ.சி அதை தன் பகுதியில் கொண்டாட முடிவு செய்தார். கலெக்டர் வின்ச் பார்க்க அழைத்து சில நிபந்தனைகள் விதித்தார். அதை ஏற்க மறுத்ததால் அவரை கைது செய்தார். திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டு,போக்குவரத்து ஸ்தம்பித்து,ஆலைகள் போராட்டத்தில் ஈடுபட்டு,கடைகள் மூடப்பட்டு ,நகராட்சி ஊழியர்கள், முடி திருத்துபவர்கள், துணி வெளுப்பவர்கள், குதிரை வண்டி ஓட்டுபவர்கள் என்று எல்லாரும் வேலை நிறுத்த போராட்டம் செய்தார்கள். அரசு மசியவில்லை.

தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு நாற்பாதாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்” என்று எழுதினார். பின்னர் அந்த தண்டனை மேல் முறையீட்டுக்கு பின்னர் ஆறாண்டுகளாக குறைக்கப்பட்டது.

கொடுத்து கொடுத்து சிவந்திருந்த வ.உ.சியின் கரங்கள் செக்கிழுத்து புண்ணாகின ; சணல் நூற்று,கல் உடைத்து அவர் உடம்பு சிதைவுற்றது. கிடைத்த கொடிய உணவு அவரைப்புரட்டி போட்டது.

‘மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?’என்று அவரின் உற்ற நண்பர் பாரதி மனம் நொந்து பாடினார். விடுதலைபெற்று வ.உ.சி வந்ததும் அவரை அழைத்துப்போக கூட ஆளில்லை என்பது கசப்பான வரலாறு.

அவர் எண்ணற்ற நூல்களையும் பதிப்பித்தார். மணக்குடவரின் திருக்குறள் உரையை வெளியிடுகிற பொழுது அந்நூலின் முகப்பில் ,”இந்நூலின் எழுத்து,கட்டமைப்பு,அச்சு,மை யாவும் சுதேசியம் !” என்று குறிப்பிட்டார்.சென்னைக்கு லட்சங்களில் வாழ்ந்த அந்த மனிதர் பஞ்சம் பிழைக்க வந்தார்.
மண்ணெண்ணெய் கடை வைத்து தெருத்தெருவாக போய் விற்று பசியாற்ற முயன்றார்.

அவரின் வழக்கறிஞர் பட்டத்தை மீட்டுத்தந்த ஆங்கிலேய நீதிபதி வாலஸ் நினைவாக தன் பிள்ளைக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டார். பல்வேறு ஊர்களில் வறுமை நீங்காமலே வாழ்ந்து தீவிர சைவராக இருந்த பொழுதிலும் இறக்கிற பொழுது அவர் மகாகவி பாரதியின் “என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? ” என்கிற வரிகளைக்கேட்டுக்கொண்டே கண்ணீர் கசிய இதே தினத்தில் உயிர் துறந்தார்.

பெரியாரின் குரு, வ..உ .சி.யின் உயில் ! 
வ.உ.சியும் அவரது துணவியார் மீனாட்சி அம்மையாரும்

கப்பல் விடுமளவுக்கு வளமாக இருந்த வ.உ.சி. காலப் போக்கில் தனது மகனுக்கு போலீஸில் ஏதாவது வேலை வாங்கித் தருமாறு பெரியாருக்குக் கடிதம் எழுதினார். பெரியாரும் தனது அரசியல் குரு என்று குறிப்பிட்டிருப்பது வ.உ.சி.யைத்தான்.

வ.உ.சி.யின் உயில் :-
 
தூத்துக்குடியிலிருக்கும் மகாஸ்ரீஅ.செ.க. கந்தசுவாமி ரெட்டியார் அவர்களுக்கு தூத்துக்குடியிலிருக்கும்
வ.உ.சிதம்பரம்பிள்ளை எழுதிக்கொடுத்த உயில் சாசன நிருபம்.அன்பார்ந்த ஐயா, நமஸ்காரம். எனக்கும் என் குடும்பத்தாருக்கும் கடவுளையும் தங்களையொத்த உண்மை தேசாபிமானிகள் சிலரையும் தவிர இவ்வுலகத்தில் வேறு தஞ்சம் ஒருவரிருக்கிறதாக எனக்குத் தெரியவில்லை.நான், இனிமேல் அதிக காலம் ஜீவித்திருப்பேனென்று திடமாக நினைக்க வழி இல்லை. எனது குடும்ப நிலைமையையும் தாங்கல் முன்னின்று என் குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய காரியஙளையும் இதன்கீழே தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் கீழ்வரும் காரியஙளை செய்து முடித்துக் கொடுத்து என் குடும்பத்தைக் காப்பாற்றி
அருளும்படியாகத் தங்களை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்துக் கேட்டுக் கொள்கிறேன்.

எனது சொத்துக்கள் :-

எனக்கும் எனது மூத்த மகன் ஆறுமுகம் பிள்லைக்கும் பாகவிஸ்திரமாகி பல வருஷங்களாகின்றன. அதே தஸ்தாவேஜு என் மனைவியிடமிருக்கின்றது.

பம்பாய் எம்பெயர் ஆப் இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனியில் ரூபாய் ஆயிரத்துக்கும், ஓரியண்டல் லைவ் அஷ்யூரன்ஸ் கம்பெனியில் ரூபாய் ஆயிரத்துக்கும் எனது ஆயுளை இன்ஸ்யூரன்ஸ் செய்திருக்கின்றேன்.ஒவ்வொரு கம்பெனியிலும் ரூபாய் ஐந்நூறுக்கு மேல் எனக்கு இலாபம் ( Profits ) கிடைக்கக்கூடும். ஆனால் நான் ஒவ்வொரு கம்பெனியிலும் ரூபாய் ஐந்நூறு கடன் வாங்கி இருக்கிறேன்.கடனுக்கும் இலாபத்திற்கும் அனேகமாக சரியாய்ப் போகும். இரண்டு கம்பெனிகளுக்கும் கடைசி பிரிமியமும் கட்டப்படவில்லை.

அது கட்டப்பட வேண்டும்.மேற்படி இரண்டு இன்ஷுரன்ஸ் தொகையையும் பல வருஷங்களுக்கு முன்பெ என் மனைவி பேருக்கு டிரேன்ஸ்பர் செய்து வைத்திருக்கிறேன். மேற்படி இரண்டு இன்ஸ்யூரன்ஸ் தொகைகள் தவிர என் ஓட்டப்பிடாரத்து (பிறந்த இடம் )
எனது பெரிய புஞ்சையில் இரண்டு சங்கிலி நிலமும் பதினாறு மரக்கால் நஞ்சையும் அதன் பக்கத்தில் கிணற்ருத் தோட்டம் என்ற ஒரு நிலமும் இருக்கின்றன. இது தவிர ஓட்டப்பிடாரத்தில் கீழ்க்காட்டில் 1.3/4 சங்கிலி கரிசல் புஞ்சை ஒன்று 3/4 சங்கிலி கரிசல் புஞ்சை ஒன்றும் இருக்கின்றன. என் மக்களால் அவ்வளவு தூரத்தில் உள்ல அந்த இரண்டு
புஞ்சைகளையும் பயிர் செய்து கொள்ல முடியாது. அவற்றை ரூபாய் ஐந்நூறுக்குத் தங்கள் பேருக்குக் கிரயம் செய்து கொடுத்துவிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கின்றேன்.ஓட்டப்பிடாரத்தில் ஒரு பழைய காரைக்கட்டு மட்டப்பா வீடு ஒன்று இருக்கிறது. அதன் மச்சுக் கட்டைகளெல்லாம் இற்றுப்போய் ஆபத்தான நிலைமையில் இருக்கின்றன. மேற்படி மச்சைப் பிரித்தெடுத்து சுவர்களை இன்னும் மூன்றடி உயர்த்தி தேக்கு மரக்கட்டை போட்டும் மேல் பக்கமுள்ள இரண்டு சன்னல்களுக்கு நேராகக் கீழ்ப் பக்கம் இரண்டு சன்னல்கள் வைத்தும் அரைவீட்டை எடுத்து விட்டும் தாங்கள் புதுப்பித்துக் கொடுக்க வேண்டும். அப்படி செய்தபின் அவ்வீட்டில் என் மனைவி மக்கள் குடியிருந்து வரலாம். ஆத்தூர் பிரமு அம்மாள் ரூபாய் எழுநூர்ரைம்பதுக்கு என் மனைவி பேருக்கு ஒரு அடமான தஸ்தாவேஜ் எழுதிக் கொடுத்திருக்கிறாள். அடமானச் சொத்துக்கள் சுமார் இரண்டாயிரத்துக்கு விலைபோகும். என் மனைவி அடமான தஸ்தாவேஜை தங்கள் பேருக்கு மேடோபர் வாங்கிக் கொள்க. அதற்கு வசூலாகும் தொகையையும் மேலே கண்ட என் புஞ்சைக்கிரயம் ரூபாய் ஐந்நூறும் அவசியமானால் என் மைத்துனன்மார் குடும்பத்திலிருந்து என் குடும்பத்திற்குக் கிடைக்கக்கூடிய ரூபாய் 1500-ம் தங்களிடம் பற்றி வருகிற தொகைக்கு ஈடு செய்து கொள்க. இப்பொழுதும் ரூபாய் இருநூறு விலை போகக்கூடிய சட்டப் புஸ்தகங்கள் என்னிடமிருக்கின்றன. அவற்றை விற்க வேண்டும்.

எனது கடன்கள்:-

தூத்துக்குடி நேஷனல் பேங்க் ஆப் இந்தியா லிமிடெட்டுக்கு ஐந்துமாத வீட்டு வாடகை ரூபாய் 135/-

தூத்துக்குடி சரோஜினி ஸ்டோர்ஸ் ஜவுளி பாக்கி சுமார் ரூபாய் 30/-வன்னியஞ்செட்டியார் எண்ணெய்க் கடைக்கு சுமார் ரூபாய் 30/-இன்ஸ்பெக்டர்பிள்ளைக்கு ரூபாய் 20/-
சோமநாத்துக்கு ரூபாய் 16/-வேதவல்லிக்கு ரூபாய் 50/- ஆக, மொத்தம் ரூபாய் 86/-

எனது தம்பி மீனாட்சி சுந்தரம்பிள்ளைக்கு சாப்பாடு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய
வேண்டும்.

இப்போது செய்ய வேண்டிய அவசரக் காரியம் ருதுவாயிருக்கிற என் மக்களிருவரில் மூத்தவளாகிய செள்பாக்கியவதி ஆனந்தவல்லி அம்மாளுக்கு விரைவில் கலியாணம் செய்து வைக்க வேண்டும். சரியான மாப்பிள்ளை கிடையாததால் தாமதம். இப்போது சுமார் ஐந்நூறுக்கு அவளிடத்தில் நகைகள் இருக்கின்றன. இன்னும் ரூபாய் ஐந்நூறுக்கு அவளுக்கு நகைகள் போடவேண்டும். கலியாணப் பந்தல் செலவு, ஒரு வருஷத்து சீர் சீராட்டு செய்யவும் வேண்டும். அவற்றிற்கு ஒரு கம்பெனி இன்ஸ்யூரன்ஸ் பணம் 1000-ம்
சரியாய்ப் போகும்.செள்பாக்கியவதி மரகதவல்லி அம்மாள் கலியாணத்தை இன்னும் இரண்டு வருஷம் கழித்து நடாத்தி வைக்கலாம். அவளுக்கும் அவளிடமிருக்கிற நகைகளைச் சேர்த்து ரூபாய் ஆயிரத்துக்கு நகை போடவேண்டும்.ஒரு வருஷத்துக்கு சீர் சீராட்டும் செய்யவேண்டும்.அவற்றிற்கு மற்றொரு கம்பெனியின் இன்ஸ்யூரன்ஸ் பணம் ரூபாய் 100-மும் சரியாய்ப் போகும். என் குடும்பத்திற்கு வரக்கூடிய தொகைகள் எல்லாம் தாங்களே வாங்கி வைத்திருந்து கோவாப்பிரேட்டிவ் சொஸைட்டியில் கொடுக்கிற கரண் டிபாஸிட் வட்டி போட்டுக் கொடுத்து வர வேண்டும். இந்த நிலைமையில் என் மனைவி மக்களுடைய அன்னவஸ்திர கல்விச் செலவுகளுக்கு யாதொரு ஐவ்கமில்லை. அதற்கு ஒரு நிதியுண்டு பண்ண நான் முயலுகிறேன். என் நிலங்களில் நஞ்சை தவிர பெரிய புஞ்சை சங்கிலி இர்ண்டு தோட்டமும் என் தங்கை அன்னவஸ்திரத்திற்காக விடப்பட்டுள்ளன.

திருச்செந்தூர் மைத்துனன்மார் காரியம்:-

வீரபாண்டியன் பட்டணம் பூபாலராயன் இடமிருந்து ரொக்கமே வாங்க வேண்டும். சொத்து ஒன்றும் வாங்கக் கூடாது. திருச்செந்தூர் உண்டியல் கடை சரசிணை ஐயர் ரூபாய் இரண்டாயிரத்து ஐந்நூறு மாத்திரம் பெற்றுக் கொள்ளச் சம்மதித்தால் அவரிடமிருந்து என் மைத்துனன்மார் அடமானத்தை விடுதலை செய்து தஸ்தாவேஷ் எழுதி ரிஜிஸ்டர் செய்து வாங்க வேண்டும். அவர் ரூபாய் இரண்டாயிரத்து ஐந்நூறுக்குச் சம்மதிக்காவிட்டால் அவர் நம்பர் போட்டுக் கொள்ளும்படி விட்டு விடவேண்டும். என் மைத்துனன்மார் சகோதரியாகிய செள்பாக்கியவதி ஆறுமகத்தம்மாளுக்கு நகைப் பாவத்து வகைக்குக் கொடுக்க வேண்டிய ரூபாய் ஐந்நூறு அவள் இஷ்டப்படி ரொக்கமாகவோ, நகையாகவோ கொடுத்து ரசீது வாங்கிக் கொள்ள வேண்டியது. என் மைத்துனன்மார்கள் பெரும் செலவாளிகளாய் இருக்கிறபடியால் பாக்கித் தொகையில் யானையப்ப பிள்ளை சத்திரத்துப் பக்கத்தில் மரக்கால் ஒன்றுக்கு ரூபாய் நூறு விலைக்கு நல்ல நஞ்செய் கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. அதில் மூன்று கோட்டை விரப்பாடு தங்கள் பேருக்குக் கிரயத்திற்கு வாங்கி அவற்றையும் பாக்கித் தொகையும் என் மைத்துனன் மூவரும் மூன்று பங்கு வைத்து தங்கள் மனைவி மக்களுடன் அவர்கள் யாதொரு வில்லங்கத்திற்கும் உள்படுத்தாமல் அனுபவித்துக் கொள்ளும்படிக்கும் அவர்கள் மக்கள் மெஷர் ( மேஜர் ) அடைந்தபின் அவர்கள் சர்வ சுதந்திர பாத்தியமாக அனுபவித்துக் கொள்ளும்படி தாங்கள் அவர்களுக்கு நன்கொடை தஸ்தாவேஜ் எழுதி ரிஜிஸ்தர் செய்து கொடுக்கவேண்டும். என் பெரிய மைத்துனன் சுப்பிரமணிய பிள்ளை ஒருக்கால் கலியாணம் செய்து கொள்ள விரும்பவில்லையானால் அவன் பாகச் சொத்துக்களை அவனுடைய சகோதரர் இருவர்களுக்கும் சமமாகப் பகிர்ந்து நன்கொடை தஸ்தாவேஜில் எழுதி வைக்க வேண்டும். ஆனால் எனது பெரிய மைத்துனன் தனது வீட்டை வில்லங்கம் செய்யாத காலம் வரையில் அவன் அன்னவஸ்திரச் செலவிற்கு அவன் பாகச் சொத்துக்களிலிருந்து மற்றைய இருவரும் நபர் ஒன்றுக்கு ரூபாய் ஐந்து வீதம்  மொத்தம் ரூபாய் பத்து மாதந்தோறும் கொடுத்து விட வேண்டும். திருச்செந்தூர் வீடுகளில் தெற்கு வீடு சுப்பிரமணியத்திற்கும், வடக்கு வீடு வெங்கிடாசலத்திற்கும் சேர வேண்டும். வடக்கு வீட்டிற்கு எதிரேயுள்ள காலி மனைதான் மைனர் குஞ்சரத்திற்குச் சேரக்கூடியதாக இருக்கிறது. வடக்கு வீட்டையும் தெற்கு வீட்டையும் கிரயம் போட்டு தேற்கு வீட்டிற்குப் போகும் கிரயத்தில் அதிகப்படும் தொகையை வெங்கிடாச்சலத்திற்கும் சுப்பிரமணியன் சொத்துக்களிலிருந்து கொடுக்க வேண்டும். குஞரம் வீடு கட்டுவதற்கு இவ்வளவு என்று இப்பொழுதே தீர்மானித்து மற்றைய இருவரும் அவருக்குச் செலுத்திவிட வேண்டும். 19 பனை புஞ்சையையும் சமமாகப் பங்கிட்டு மூன்று பேருக்கும் கொடுத்துவிட வேண்டியது. மைனர் குஞ்சரத்திற்குக் கார்டியனாக வெங்கிடாச்சலத்தையும் மேற்படியார் அத்தான் சண்முகம் பிள்ளையை நியமித்து அவனுடைய வரவு செலவுகளுக்குச் சரியான கணக்கு வைத்திருந்து அவன் மெஷ்ரடைந்த ( மேஜர் ) பின் சொத்தையும் கணக்கையும் அவனிடம் ஒப்படைக்கும் படியாக நன்கொடை தஸ்தாவேஜில் எழுத வேண்டும். பூபாலராயரிடமிருந்து தொகை பூராவும் வசூலாகிவிட்டால் அவருக்குத் தாங்களும், நான் ….. ( இந்த இடத்தில் ஒரு வரி சிதிலமடந்துள்ளது ) ரூபாய் 1500-ம் நான் என் மைத்துனன்மார் குடும்பத்திற்குச் சென்ற பத்து வருஷமாகப் பாடுபட்டு வந்ததற்கு பிரதிபிரயோஜனமாக என் குடும்பத்தாருக்குக் கொடுக்க வேண்டும். பூபாலராயரிடமிருந்து வரவு வந்திருக்கிற தொகைக்கும் பற்றாயிருக்கிற தொகைக்கும் பேரேட்டுப்படி ஒரு நகல் தயார் செய்வித்துக் கூடிய விரைவில் எனக்குக் கொடுக்கும்படி உத்தரவு செய்க.

இதன் பிரதி ஒன்று என் மனைவியிடமும் மற்றொன்று என் மைத்துனன் வெங்கிடாசலமிடமும் கொடுக்கப்பட்டுள்ளன.

எல்லாம் வல்ல இறைவன் அருளால் மேற்கண்ட காரியங்கள் எல்லாம் தாங்கள் இனிது செய்து முடித்து அருள்புரிக.

தூத்துக்குடி
26-10-36                                                   வ.உ.சிதம்பரம்பிள்ளை

 

                                           மறைவு :18-11-1936 ( இரவு 11.30 மணி )

                            ( உயில் எழுதியது மறைவிற்கு 23 நாட்கள் முன்னால் )

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, இவரது வக்கீல் தொழிலுக்கான சன்னத்தும் பறிக்கப்பட்ட் பின்னரும் தேசத்தின் மீது கொண்ட பற்றினை இழந்தாரில்லை.

பல்லாண்டுகள் சிறைப்பட்டிருந்து வெளிவந்த இவரை வரவேறகக் காத்திருந்தது சுப்பிரமணிய சிவா மட்டும்தான். சிந்தாதிரிப்பேட்டையிலும், மயிலாப்பூரிலும், பெரம்பூரிலும் வாழ்ந்தபோது அரிசி மற்றும் நெய் வியாபாரமும் செய்திருக்கின்றார். காங்கிரசின் சமரசப் போக்குப் பிடிக்காமல் காங்கிரசை விட்டு வெளியேறியும் இருக்கின்றார்..

இவரது இலக்கியப் படைப்பாற்றலையும், மொழியாக்கம் செய்யும் திறன் பற்றியும், செய்நன்றிமறவாத் தன்மை குறித்தும் நிறைய எழுதலாம். தகவல்கள் அவ்வப்பொழுது மேலும் வரும்.

காலவரிசை

1872: செப்டம்பர் 5 ம் தேதி பிறந்தார்.

1895: வள்ளியம்மையை மணமுடித்தார்.

1901: அவரது மனைவி நோயால் இறந்தார்.

1905: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக அரசியலில் நுழைந்தார்.

1906: நவம்பர் 12ஆம் தேதி அன்று தனது சொந்த கப்பல் நிறுவனமான ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியைத்’ துவக்கினார்.

1908: மார்ச் 12ஆம் தேதி அன்று ஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

1908: ஜூலை 9ம் தேதி கோயம்புத்தூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.

1911: அவரது கப்பல் கம்பெனியான ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ கலைந்தது.

1912: டிசம்பர் 12 ஆம் தேதி அன்று சிறையில் இருந்து வெளியிடப்பட்டார்.

1920: கல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அமர்வில் ஆயத்தமானார்.

1936: நவம்பர் 18ஆம் தேதி அன்று இறந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top