ஜீனியஸ் கோயிந்து: மக்கள் எல்லாரும் என்னை கடவுளா நினைக்கிறாங்கன்னு இப்பத்தான் தெரிஞ்சிக்கிட்டேன்!
நண்பர்: என்ன கோயிந்து சொல்ற?
ஜீனியஸ்: பார்க்குல கொஞ்ச நேரம் தெரிஞ்சவங்களோட பேசிட்டிருந்தேன். திரும்பவும் அங்க போனா ‘அடக்கடவுளே! நீ திரும்பவும் வந்துட்டியா’ன்னு எல்லாரும் பயந்து ‘ஆள விடுயா சாமி’ன்னு கையெடுத்து கும்பிட்டாங்க.
—————
ஜீனியஸ் கோயிந்து (மனைவியிடம்) : நேத்து கண்ட கனவு செம காமெடியா இருந்துச்சி தானே…
மனைவி : உங்களுக்கு வந்த கனவு காமெடியா இருந்துச்சின்னு எனக்கு எப்படி தெரியும்?
ஜீனியஸ் : விளையாடாதே.. அந்த கனவுல நீயும் தானே இருந்த?!
———-
மொபைல் போன் கஸ்டமர் கேருக்கு போன் போட்டார் நம்ம ஜீனியஸ்….
கஸ்டமர் கேர் பெண்: வணக்கம்.. உங்களுக்கு என்ன வேண்டும் சார்?
ஜீனியஸ் கோயிந்து: ஹல்லோ….இந்த மாசம் என்னோட மொபைல் பில் எவ்ளோன்னு தெரிஞ்சிக்கணும்!
கஸ்டமர் கேர்: சார், உங்க போன்ல 123 நம்பருக்கு டயல் பண்ணீங்கன்னா, கரண்ட் பில் ஸ்டேட்டஸ் சொல்லுவாங்க!
ஜீனியஸ் (கோபமாக) : லூசு…!!
கஸ்டமர்: என்னாச்சு சார்.. ஏன் திட்றீங்க?
ஜீனியஸ்: உன்கிட்ட கரண்ட் பில்லா கேட்டேன்? மொபைல் பில்லு தானே கேட்டேன்… எங்க வீட்டு கரண்ட் பில்லை சொல்றதுக்கு நீ யார்?
கஸ்டமர் கேர்: !!!!!??????
———-
நண்பர் : கோயிந்து…. நீ வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவே?
ஜீனியஸ் கோயிந்து : ம்ம்ம்….ஏழு சாப்பிடுவேன்.
நண்பர் : அட மக்கு… முதல் இட்லி சாப்பிட்டப் பிறகு, அத வெறும் வயிறுன்னு சொல்ல முடியாதே!! அப்புறம் எப்படி ஏழுன்னு சொல்லுவ…
(நம்ம ஜீனியஸ் வீட்டுக்குச் சென்றவுடன், மனைவியிடம்…)
ஜீனியஸ்: நீ வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவே?
மனைவி : அதுக்கென்ன….அஞ்சு சாப்பிடுவேன்.
ஜீனியஸ் : அடச்சே… நீ மட்டும் ஏழுன்னு சொல்லிருந்தா உனக்கு ஒரு சூப்பர் பதில் சொல்லிருப்பேன்!