யார் ? இவர்கள் 06
வேற்றுக்கிரக வாசிகளின் வருகை ஆக்கிரமிப்பிற்கா? ஆராய்ச்சியிற்கா?
வேற்றுக்கிரகவாசிகளின் எமது கிரகத்திற்கான வருகைக்குரிய காரணம்
1.ஆராய்ச்சி
நாம் ஏனைய கிரகங்களைப்பற்றி அறிய முயற்சிப்பது போல் வேற்றுக்கிரகங்களில் நிலவும் பௌதிக அம்சம், உயிர்வாழ்வதற்கான சாதக நிலைகள் ஆகியவற்றை ஆராய்வதற்கான நோக்கத்தை எம்மிடம் தாராளமாக கொண்டுள்ளது போன்று ஏனைய கிரகங்களில் வாழும் வேற்றுக்கிரகவாசிகள் எதிர்பார்ப்பதுவும் இயல்பானதே. ஆகவே ஆராய்ச்சி என்பதை அடிப்படையாகக்கொண்டு அவர்கள் எமது கிரகத்திற்கு வருகைதருகின்றனர் என்பது மிகவும் முதன்மையான காரணமாக அமைகின்றது.
ஆனால் ஆக்கிரமிப்பு தவிர்ந்த ஆராய்ச்சி நோக்கமாக இருப்பின் அவர்கள் ஆரம்பத்திலேயே எம்முடன் ( பூமியிலுள்ளோருடன் ) தமது உறவுகளை ஆரம்பித்திருக்க வேண்டும். பல சந்தர்ப்பங்களிலும் அவர்கள் எம்முடைய உறவுகளை விரும்பவில்லை என்பதை இவ்வாய்வின் முன்னைய பகுதிகளில் குறிப்பிடப்பட்ட உதாரணங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
ஆகவே இதுவரை பூமியில் அவர்களால் உயிரிழப்புகள் பெருமளவில் இடம்பெறாமைக்கு அவர்கள் நோக்கத்தில் காணப்படும் எம்மீதான சாதகத்தன்மையே காரணம் என்று எண்ணுவது முட்டாள்தனமானது. எனவே அவர்கள் நட்புறவுடன் கூடிய ஆராய்ச்சி நோக்கைக் கொண்டிருக்கவில்லை.
2. ஆக்கிரமிப்பு
2ம் உலகப்போரின்போது விமானப்படை விமானிகள் பறக்கும் போது ஒரு வினோத ஒளியால் ஆன எரிபந்துகளை (Glowing Balls) கண்டார்கள். அப்பந்துகள் விமானங்களைப்பின்தொடர்ந்ததைக் கண்டார்கள். விமானிகள் இவற்றை “Foo Fighters“ என்று குறிப்பிட்டனர்.
”Foo” என்றால் தீ என்று அர்த்தம் ஆகும். முதலில் கூட்டணிப்படைத்தளபதி இந்த ”Foo Fighters” ஜேர்மன் நாட்டின் இரகசிய ஆயுதங்கள் அல்லது கண்காணிப்புக்கருவிகளாக இருக்கலாம் என நம்பினார். ஆனால் போருக்குப்பிறகு தெரிந்தது என்னவெனில் ஜேர்மன் வீரர்களும் இத்தகைய எரிபந்துகளைக்கண்டனர். இவர்களும் இது அமெரிக்க அல்லது பிரிட்டன் கண்காணிப்பு கருவிகள் என நினைத்த்து தான் வேடிக்கை.
இச்சம்பவமானது அக்காலகட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு விசாரணைகளும் முடுக்கிவிடப்பட்டன. எனினும் இதில் ஒரு வெற்றிகரமான முன்னேற்றத்தையும் அடையவில்லை.
இதன்காரணமாக மக்கள் மத்தியில் அயற்கிரகவாசிகள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டது. இதுபோன்ற ஆயுதங்கள் ஒரு போரில் இருதரப்பாலும் அவதானிக்கப்பட்டமையானது இருதரப்பிற்குமிடையேயான முரண்பாடுகளை அதிகரிக்கச்செய்யும் உத்தியாகும். ஆகவே பூமியில் போர்நடந்து அதன்மூலம் அழிவுகள் தொடர்வதை விரும்பும் சக்தி ஒன்று வேற்றுக்கிரகத்தில் இயங்குகிறதா?
ஏற்கனவே இவ் ஆய்வில் குறிப்பிடப்பட்ட ஒரு சம்பவத்தை மீள ஆராய்வோம்.
அமெரிக்காவில் ஒரு பெண்மணி திடீரென கர்ப்பமுற்றது பின்னர் கர்ப்பம் திடீரென காணாமல் போனது போன்ற சம்பவங்களை ஆய்வின் தொடக்கத்தில் ஆராய்ந்தோம். அக்கர்ப்பம் மூலம் உண்டான அக்குழந்தை குறிப்பிட்டவேற்றுக்கிரகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதா? அல்லது இப்பூமியில் வேறு ஒரு இடத்தில் வளர்கிறதா? எம்மால் அறியப்பட்டது இந்த ஓர் சம்பவமே. இவ்வாறு எத்தனை சம்பவங்கள் நடந்துள்ளனவோ?
மனித குலத்தில் திடீர் திடீரென நிகழும் சில விசித்திர பிறப்புகளுக்கும் இச்சம்பவங்களுக்குமிடையே ஏதாவது தொடர்பு இருக்குமா? பூமியில் உள்ளோரிடம் நல்லுறவுகளை கட்டியெழுப்பும் நோக்கம் அவர்களிம் இருந்தால் மேற்கூறப்பட்டவற்றை ஏன் மர்மமான முறையில் மேற்கொள்ளவேண்டும்?
தொடரும்…