பண்டைக்காலத்தில் நிலப்படையானது நான்கு வகைகளாகக் பிரிக்கப்பட்டிருந்தது. அவை:
1) கரிப்படை (யானைப்படை),
2) பரிப்படை (குதிரைப்படை),
3) தேர்ப்படை,
4) காலாட்படை.
கவை
எதிர்குழுவினரையும் தம்மொடு ஒத்த மனித உள்ளமாக, மனித உடலாகக் கொண்டுதமிழர்கள் போர் செய்துள்ளனர். அவர்கள் தன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தைப் போலவே பிறன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தையும் கண்டுள்ளனர்.
தமிழரின் முப்போர்க்கருவிகள்
தொல்காப்பிய காலம் முதலாக தமிழர் மூன்று போர்க்கருவிகளை முதன்மையானதாகக் கையாண்டு வந்துள்ளனர், அவை வாள், வில், வேல் என்பனவாகும், ? ?வில்லும் வேலும் வாளுமே இவரது முந்திய ஆயுதங்கள் ? ?(கந்தையாபிள்ளை, தமிழகம் ப, 176) என்ற குறிப்பும் இக்கருத்தினை அரண் செய்யும்.
இவற்றுள் வாள் என்னும் போர்க்கருவி நெருங்கி நின்று போர் செய்கையில் பயன்படுத்தப் படுவதாக இருந்துள்ளது, வில்லும் வேலும் பகைவரை தூரத்தில் இருந்து தாக்கப் பயன்பட்டுள்ளது, இம்முப்போர்க்கருவிகள் பற்றிய பல குறிப்புகள் தொல்காப்பியததிிலும், சங்கஇலக்கியங்களிலும், அவற்றைத் தொடர்ந்த இலக்கியங்களிலும் காணப்படுகின்றன.
இம்முதன்மைக் கருவிகள் தவிர வேறு சில கருவிகளும் தமிழர்களால் பயன்படுத்தப் பட்டுள்ளன, ? ? அடார், அரம், அரிவாள், ஆயுதக்காம்பு, எஃகு, கண்ணாடி தைத்த கேடகம், கணிச்சிப்படை, கலப்பை, கழிப்பிணிப் பலகை, காழெஃகம், கிளிகடிகருவி, குந்தாலி, குறடு, கேடகம், கோடாலி, சக்கரம், சிறியிலை எஃகம், சேறுகுத்தி, தறிகை, துடுப்பு, நவியம், படைவாள், பூண்கட்டிய தண்டு, மழு, வாள், வில், வேலுறை ? ? ஆகிய கருவிகளையும் தமிழர் பயன்படுத்தியதாக புறநானூற்றின் முன்னுரையில் உ,வே, சாமிநாதைய்யர் குறிப்பிடுகின்றார்.
மேலும் போர்க்கருவிகள் தம்மை ஊறு செய்யாவண்ணம் காக்க ? ?கரடித்தோலாற் செய்யப்பட்ட ? ? , ? ?புலித்தோலாற் செய்யப்பட்ட ? ? கேடயமென்னும் கருவிகளை பயன்படுத்தியதாக கந்தையாப்பிள்ளை குறிப்பிடுகின்றார்(தமிழகம், ப,176),
வாள்
தொல்காப்பியத்தில் ?வாளோர் ஆடும் அமலை ?(தும்பைத்திணை), ?ஒள்வாள் வீசிய நூழில் ?(தும்பைத்திணை), ?வாள்மங்கலம் ? (பாடண்திணை) ஆகிய இடங்களில் வாள் என்னும் சொல் போர்க்கருவியாக கருதுமளவிற்கு எடுத்தாளப்பட்டுள்ளது, சங்கப்பாடல்களிலும் பல இடங்களில் வாள் என்னும் போர்க்கருவி எடுத்தாளப் பெற்றுள்ளது, ? ?போர்க்கு உரைஇப் புகன்று கழிந்தவாள் உடன்றவர் காப்புடை மதில் அழித்தலன் வான்உற மூழ்கி உரு இழந்தனவே ? ?(புறநானூறு 97), ? ?ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே ? ?(புறநானூறு 312), என்ற சங்கப்பாவடிகள் வாள் வெற்றி காட்டுவனவாகும்,
வாள் என்பது ஆண்களுக்கு மிகுதியும் பயன்படும் போர்க்கருவி என்றாலும் அதனைப் பெண்களும் கையாண்டுள்ளமை மற்றொரு புறநானூற்றுப்பாடல்வழி புலனாகின்றது, ? ? கொண்ட வாளொடு படுபுனம் பெயராச் செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய படுமகன் கிடக்கை காணுஉ ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே ? ?((புறநானூறு 63) என்ற காக்கைப் பாடினியார் பாடலடிகள் வீரத்தாய் ஒருத்தி வாள் கொண்டு போர்க்களம் புகுந்த செய்தி பெண்களின் வாள் பயன்பாட்டிற்குச் சான்றாவதாகும்.
வேல்
வேல் – முருகக் கடவுளின் கருவியாக சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ளது, வேல் கொண்டாடும் வேலன் அகப்பாடல்களில் முக்கியப் பாத்திரமாக அமைக்கப் பெற்றுள்ளான், புறம் சாராத அகம் சார்ந்த பயன்பாடு இதுவாயினும் வேல் என்னும் கருவியை மக்கள் போற்றியமைக்குச் சான்றாக மேற்கருத்து விளங்குகிறது, தொல்காப்பியத்தில் ? ?பெரும்பகை தாங்கும் வேலினானும் ? ? என்று வேல் குறிக்கப்பட்டுள்ளது.
ஒளவையார் அதியமானைக் காட்சிப்படுத்தும்போது ?கையது வேலே,, காலன புனைகழல் ? ? (புறநானூறு 100) என்று வருணிக்கிறார், ?பூஆர் காவின் புனிற்று புலால் நெடுவேல் எழுபொறி நாட்டத்து ? (புறநானூறு 99), ?நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார் ஒண்படைக் களிறு பெயர்த்து எண்ணினி விண் இவர் விசும்பின் மீனும் ? (புறநானூறு 302), ?பீலிக்கண்ணி பெருந்தகை மறவன் மேல்வரும் களிற்றொடு வேல் துறந்து ? (புறநானூறு 274), ?திறல் ஒளிறிலங்கு நெடுவேல் மழவர ?(புறநானூறு 88), ?சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென ? (புறநானூறு 63) ? முதலான குறிப்புகளால் வேல் என்னும் போர்க்கருவி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டமை தெரிய வருகிறது.
சிறிய பருவத்தின்போததே வேல் என்னும் போர்க் கருவி தாயால் மகனுக்கு அறிமுகப்படுத்தப் பெற்று தரப்பெற்றமை மற்றொரு புறநானூறு பாடலால் தெரியவருகிறது, ? ?இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிது விரிந்து உடாஇப் பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி ? ?(புறநானூறு 279) என்ற பாடலில் வேலின் உயரம்கூட இல்லாத சிறுவனுக்கு வேல் என்னும் கருவியைத் தந்து அதனைப் பயன்படுத்தக் கற்றுத்தரும் வீரஉணர்வு இங்கு கருதத்தக்கது.
வில்
வில், அம்பு, அம்பறாத்தூணி இவை மூன்றும் அமைந்த கூட்டுக் கருவியாக தமிழர்கள் வில்லைப் பயன்படுத்தியுள்ளனர், ? ?கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் ? ? (தொல்காப்பியம், புறத்திணையியல் 16) என்று இக்கருவியைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது, ? ?வினை வல் அம்பின் விழுத்தொடை மறவர் (அகநானூறு 105), எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண்கூர்ந்து பிடிக்கணம் பிரிந்த (முல்லைப்பாட்டு) , வைந்நுணைப் பகழி மூழ்கலின் செவி சாய்த்து உண்ணாது உயங்கும் மாசிந்தித்தும் (முல்லைப்பாட்டு) , உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு (புறநானூறு 310), எம் அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின் என (புறநானூறு 9) ? ? முதலான அகச்சான்றுகள் சங்க காலத்தில் வில் பயன்படுத்தப் பட்டமைக்கான சான்றுகளாக விளங்குகின்றன,
இவ்வாறு இம்முக்கருவிகளும் பெரும்பான்மையும் சங்ககாலத் தமிழரால் பயன்படுத்தப் பெற்றுள்ளன, ஒளவையார் பாடிய பாடல் ஒன்று இம்முக்கருவிகளையும் ஒருங்காகக் காட்டுவதாக உள்ளது, ? ?மார்புறச் சேர்ந்து ஒல்காத் தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர் தோல் கழியொடு பிடி செறிப்பவும், வாள் வாய்த்த வடுப் பரந்த நின் மற மைந்தர் மைந்து கண்டவர் புண் படு குருதி அம்பு ஒடுக்கவும், நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது ? ? (புறநானூறு 98) என்ற இப்பாடலடிகள் முக்கருவிகளும் ஓரரசனிடத்தில் இருந்தமையைத் தெளுவுபடுத்துகிறது,
படைக்கலக் கொட்டில்- தொழிற்கூடம்
சங்ககாலத் தமிழர் போர்க்கருவிகளைப் பெரும்பாலும் இரும்பால் ஆக்கி கொண்டனர், அவற்றைப் புதிதாக உருவாக்கிட, சீர் செய்ய உலைக்கூடங்களை அவர்கள் அமைத்துக் கொண்டனர், ? ?வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே ? ? (புறநானூறு- 312) என்ற பொன்முடியார் பாடலின் வழியாகக் கொல்லர்கள் தம் பட்டறையில் வேல்வடித்துத் தந்துள்ளனர் என்பது தெரிய வருகின்றது, ? ?இரும்பு முகம் சிதைய நூறு ஒன்னார் இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே ? ?(புறநானூறு- 309) என்பதும் ஆகுபெயரால்போர்க்கருவியைக்குறிக்கும் பாடலடியாகும்.
இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி,
கண் திரள் நோன் காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியல் நகரவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்தி, கோடு, நுதி, சிதைந்து,
கொல் துறைக் குற்றில மாதோ என்றும்
உண்டாயின் பதம் கொடுத்து,
இல்லாயின் உடன் உண்ணும்,
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல்எம்கோமான்,வைந்நுதி
வேலே. ? ?(புறநானூறு, 95)
என்ற பாடலில் ஒளவையார் -படைக்கலன்களின் நிலையையும், படைக்கலத் தயாரிப்பையும் காட்டுகிறார்.
தொண்டைமான் படைக்கலக் கொட்டிலில் போர்க்கருவிகள் மயிற்பீலிகள் அணிவிக்கப் பெற்று, மாலைகள் சூட்டப் பெற்று, நெய் பூசப்பெற்று, அதன் கூர்மை சரி செய்யப் பெற்று தக்கவகையில் வைக்கப் பெற்றிருந்ததாக பாடலின் முற்பகுதி குறிக்கிறது.
பின்பகுதியில் அதியமான் படைக்கலக் கொட்டிலில் போர்க்கருவிகள் உடைந்து கிடக்கும் காட்சி காட்டப்பெறுகிறது, இங்கு பகைவர்களைக் குத்தியதால் வேலின் நுனி சிதைந்து கிடக்கிறது, மற்ற போர்க்கலன்களும் உடைந்து கிடக்கின்றன, போரில் வெற்றி கொண்டபின் வெற்றியை ஏற்படுத்தித் தந்த போர்க் கருவிகளை வெற்றெள களத்தில்விட்டுவிடாது மீண்டும் உலைக்களம் சேர்த்த மாண்பை இவ்வடிகள் விளக்குகின்றன.
இப்பாடலின் இறுதியடியில் அதியமான் கையில் வைத்திருக்கும் வேல் என்றைக்கும் கூர்மை மிக்கதாய் உடையாமல் உள்ளது என்ற புகழ்க்குறிப்பு காணப்படுகிறது, இவ்வாறு போர்க் கருவிகளை உருவாக்கிக் கொள்ளவும், சரியாக்கிக் கொள்ளவும் சங்கத்தமிழர் திறம் பெற்றிருந்தனர் என்பது தெளுவாகிறது.